
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த பண்ணப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்த். இவர் சிறு வயதிலேயே டெல்லிக்கு சென்று வேலை பார்த்து தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொண்டு அம்பேத்கர் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கோவிந்தின் மகன் பாபு அதே பகுதியில் உள்ள ஐஸ் கிரீம் பார்லரில் வேலை செய்கிறார். அப்போது அதே கடையில் பணிபுரியும் ஹரிஷ் என்பவர் பாபுவிற்கு நண்பர் ஆகியுள்ளார்.
ஹரிஷ் மற்றும் பாபு அதே பகுதியைச் சேர்ந்த பாவனா, தான்யா ஆகிய அக்கா தங்கையை காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், பாபு, தனது நண்பர் ஹரிஷுடன் சொந்த ஊரான பண்ணப்பட்டியில் நடைபெறும் திருவிழாவிற்கு வந்துள்ளார். இந்த நிலையில், பாவனா மற்றும் தான்யாவின் காதல் குறித்து அறிந்த அவரது பெற்றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.
அதனை தொடர்ந்து பாவனா மற்றும் தான்யாவிற்கு அவர்களது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். பயந்து போன அக்கா தங்கை இரண்டு பேரும், டெல்லியில் இருந்து ரயில் ஏறி சேலம் வந்துள்ளார். இதனை அடுத்து பாபு மற்றும் ஹரிஷ்க்கு தகவல் கொடுத்தனர். பின்னர் காதலர்கள் பாபு, தன்யாவும், ஹரிஷ், பாவனாவும், பண்ணப்பட்டியில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
இது குறித்து ஆய்வாளர் யுவராணி டெல்லியில் உள்ள பெண்களின் தாய் தந்தையிடம் வீடியோ கால் மூலம் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் காதலர்களை பண்ண பட்டியைச் சேர்ந்த பாபுவின் உறவினர் ஆனந்த், கலா தம்பதியினர் தங்களது பாதுகாப்பில் அழைத்து சென்றனர். டெல்லி காதல் ஜோடிகள் ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.