
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தமிழக மற்றும் கேரள எல்லையில் உள்ள மேக்கரை கிராமத்தில் உள்ள விவசாய பகுதிக்கு சென்ற பிரபல ரௌடி வரிச்சியூர் செல்வம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வரிச்சியூர் செல்வம் வெளியிட்டுள்ள வீடியோவில் உடம்பெங்கும் கிலோ கணக்கில் தங்க நகையை அணிந்து கொண்டு விவசாய இடத்தில் அமர்ந்து தனக்கு முன்பாக பல்வேறு வகையான மதுபானங்களை அடுக்கிவைத்துக் கொண்டு கூமாபட்டியை ட்ரெண்ட் செய்தவரை போல “ஏங்க மேக்கரைக்கு வாங்க இங்க பாருங்க ரம், பீர், பிராந்தி இருக்குது, குடிச்சுப்புட்டு அருவில குளிச்சு கும்மாளம் போடுங்க” என இழுவையோடு பேசியுள்ளார்.
வாங்க குடிங்க கும்மாளம் அடிங்க என தனது பக்கத்தை பாலோ- அப் செய்யும் பலரையும் வீணாக தூண்டும் விதத்தில் தனது வீடியோவில் இது போன்ற கருத்துக்களை பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடையதாக பேசப்பட்டு வரும் நிலையில் செல்வம் தான் திருந்தி விட்டதாக கூறும் நிலையில் ஜாலியாக சுற்றித் திரிகிறேன் என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி வருகிறார்.
ஆனால் இதுபோன்ற வயல்வெளிகளிலும் வனப்பகுதிகளுக்கும் சென்று அங்கு தடை செய்யப்பட்ட மதுபானங்களை எல்லாம் எடுத்துச் சென்று மது அருந்துவதே தவறு என்ற நிலையில், அதனை வீடியோவாக பதிவு செய்து அனைவரையும் மது குடிக்க வாருங்கள் என முழக்கமிட்டு அழைப்பது மது பழக்கத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது என பல்வேறு தரப்பினும் கமெண்ட்கள் மூலமாக வரிச்சியூர் செல்வத்தை காய்ச்சி எடுத்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.