“தொடர்ந்து அட்ராசிட்டி செய்த இளைஞர்கள்” - நள்ளிரவில் நடந்த சாலை மறியல்.. ஊரை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்த பொதுமக்கள்!

யாராவது தட்டி கேட்டால் அவர்களை அடிப்பதும் கொலை மிரட்டல் விடுவதும் இவர்களது வாடிக்கையாக உள்ளது. புகார் கொடுத்தால் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த
“தொடர்ந்து அட்ராசிட்டி செய்த இளைஞர்கள்” - நள்ளிரவில் நடந்த சாலை மறியல்.. ஊரை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்த பொதுமக்கள்!
Admin
Published on
Updated on
2 min read

வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்துள்ள உண்ணாமலை சமுத்திரம் கிராமத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவில் பிள்ளையாரை ஊர்வலம் கொண்டு சென்ற போது அதே ஊரை சேர்ந்த வாலிபர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டு கலாட்டா செய்துள்ளனர். அதில் முருகன் மற்றும் சின்னராசு ஆகிய இருவரின் மண்டை உடைக்கப்பட்டு படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் சாலையில் ஒன்று கூடி பிரச்சனை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு தகவல் தெரிவித்து சாலையிலேயே அமர்ந்து கொண்டனர்.

இதனால் அப்பகுதிக்குச் சென்று வரும் ஒரே ஒரு பேருந்து செல்வதற்கு வழி இல்லாமல் கிட்டத்தட்ட 1:30 மணி நேரம் அங்கு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது தகவல் அறிந்து வந்த லத்தேரி போலீசார் ஊர் மக்களை சமாதானம் செய்து அப்புறப்படுத்திவிட்டு சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதற்காக அவர்கள் வீட்டிற்கு சென்ற போது சேகர் அவர்களின் குடும்பத்தினர் போலீசாரை வழிமறித்து கைது செய்ய விடாமல் தடுத்ததோடு அல்லாமல் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருமையிலும் பேச ஆரம்பித்தனர் இதனால் ஊர் மக்களுக்கும் அந்த வீட்டாருக்கும் மீண்டும் தகராறு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

Admin

போலீசார் அவர்களை சமாதானம் செய்து தகராறு ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர் மேலும் தலைமறைவாக உள்ள நான்கு பேரை தேடி வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் “ஒவ்வொரு முறையும் இவர்கள் வேண்டுமென்றே திருவிழா காலங்களில் தகராறு செய்கிறார்கள் யாராவது தட்டி கேட்டால் அவர்களை அடிப்பதும் கொலை மிரட்டல் விடுவதும் இவர்களது வாடிக்கையாக உள்ளது. புகார் கொடுத்தால் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த துளசி என்கின்ற ஒரு நபரை வைத்து காவல் நிலையத்தில் சமாதானம் பேசி முடித்து வைத்து விடுகிறார்கள்.

பின்னர் தனித்தனியாக புகார் கொடுத்தவர்களை இவர்கள் மிரட்டுவதும் தாக்குவதும் வாடிக்கையாக உள்ளது இவர்கள் மீது இந்த முறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று” என்று கூறி நள்ளிரவு என்று பாராமல் பொதுமக்கள் மற்றும் பெண்கள் சாலையில் குவிந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த ஞானவேல் என்பவரின் மகன் ஜிவி என்கின்ற வெங்கடேசன் கத்தியை உயர்த்திக் கொண்டு அலப்பறை செய்வதும் கத்தியை நெருப்பு பறக்க தரையில் தேய்த்து ஊர் மக்களை மிரட்டுவதும் ரீல்ஸ் வெளியிடுவதும் இன்ஸ்டாவில் மிரட்டலாக பாடலை போடுவதுமாக செய்து அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறார் என கூறுகின்றனர்.

மேலும் இவர்கள் அதே அமைந்துள்ள ஒரு புங்க மரத்தின் அடியில் உள்ள சுமைதாங்கி கற்களின் மீது அமர்ந்து கொண்டு ஊர் பெண்களை கேலி செய்வது என இவர்களது அட்ராசிட்டி அதிகமாகி வந்ததால் ஊர்மக்கள் நள்ளிரவில் ஜேசிபி மூலமாக அந்தக் கற்களை அப்புறப்படுத்தியும் அந்த மரத்தை வேரோடு பிடுங்கியும் எரிந்தனர். அதேபோல் ஊருக்கு பொதுவான ஒரு கட்டிடத்தை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு அந்த கட்டிடத்தில் இயங்கி வந்த தற்காலிக ரேஷன் கடையை மூடி வைத்துள்ளதாகவும் அந்த சாவியை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் ஊர் பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

லத்தேரி ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர் மேலும் தலைவராக உள்ள நான்கு பேரை தேடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com