“சிறார்களை அதிர வைத்த கர்நாடக அரசு” - 16 வயதுக்கு உட்பட்டவர்கள் இனி சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை… இந்தியாவுக்கு உதாரணமான சித்தராமையா!

“சிறார்களை அதிர வைத்த கர்நாடக அரசு” - 16 வயதுக்கு உட்பட்டவர்கள் இனி சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை… இந்தியாவுக்கு உதாரணமான சித்தராமையா!
Published on
Updated on
2 min read

கர்நாடகமாநிலத்தின் முதல்வர் அதிரடியாக ஒரு தடையை அறிவித்துள்ளார்.  16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த அம்மாநில தடை விதித்துள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் உரையின் போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின், கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் பெறும் இடையூறை ஏற்படுத்தி வருவதாக கர்நாடக அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது அவர்களின் படிப்பிலும், மனநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கும் என்றும் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளில் கட்டுப்பாடுகள் மற்றும் தடை விதித்துள்ளன. அதேபோல், இந்தியாவில் சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முதல் முறையாக Karnataka அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவு சிறுவர்கள் மனநலம், கல்வி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

"புத்தகத்தை எடு, மொபைலை கைவிடு" என்ற பெயரில் மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் பிரசாரத்தை கர்நாடக அரசு முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. சமூக ஊடகங்களால் ஏற்படும் தேவையற்ற நேர செலவழிப்பு மற்றும் அதனால்  ஏற்படும் சில பதற்றம் (Anxiety), தூக்கமின்மை மற்றும் கவனச்சிதறல் போன்ற பாதிப்புகளில் இருந்து மாணவர்களையும் குழந்தைகளையும் பாதுகாத்தலின் ஒரு படியாக இந்த அறிவிப்பு இருக்கும் என தெரிகிறது. அதிகப்படியான திரைப் பயன்பாட்டால் (Screen time) மாணவர்களின் கற்கும் திறன் மற்றும் கல்வி நாட்டம் குறைவதை தடுக்கும் என்றும் தெரிகிறது.

இதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாகத் தெரிகிறது. வலதுகாலை சரிபார்த்து அனுமதிக்கும் தொழில்நுட்பத்தை சமூக ஊடக நிறுவனங்கள் கட்டாயம் அமல்படுத்த வேண்டியிருக்கும். 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கம், குறைந்த வயதிலேயே சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக அவர்களின் அணுகலை கட்டுப்படுத்துவதாகும்.

இந்த அறிவிப்பின்படி, 16 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் சமூக ஊடகத் தளங்களுக்கான அணுகலை தடை செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 13 முதல் 15 வயதுக்குள் உள்ளவர்கள் சில வலைதளங்களில் பெற்றோரின் நேரடி மேற்பார்வை மற்றும் அனுமதியுடன் மட்டுமே வரையறுக்கப்பட்ட அம்சங்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். அதே நேரத்தில், பள்ளிப் பாடங்கள் மற்றும் கல்வி தொடர்பான செயல்பாடுகளுக்காக மொபைல் பயன்படுத்துவதற்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கான தொழில்நுட்ப விதிமுறைகள் மற்றும் சட்ட விதிகளை மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பம் (IT/BT), சட்டம் மற்றும் உள் துறை அமைச்சகங்கள் இணைந்து உருவாக்கும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com