இந்தியாவையே உலுக்கிய ஒரு நடிகையின் கொடூர கொலை வழக்கு.. அழுகிக் கிடந்த பிணங்கள் - ஈவு இரக்கமில்லாத நம்பிக்கை துரோகம்!

"ராணி பத்மினி சொத்து வாங்குவதற்காக ₹5 லட்சம் ரொக்கம் வைத்திருந்ததும் மற்றும் நகைகள் இருப்பதையும் தெரிந்துக்கொண்ட.."
Rani Padmini murder case
Published on: 
Updated on: 
2 min read

தென்னிந்தியாவில் 80களில் நன்கு அறியப்பட்ட நடிகை ராணி பத்மினியின் கொலை சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி தென்னிந்தியாவை உலுக்கியது. ரணி பத்மினி நம்பிய மற்றும் அவரை சுற்றி இருந்த நபர்களே அவரின் கொடூர மரணத்திற்கு காரணமாக இருந்தது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது இளம் வயதிலேயே தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தி உட்பட பல மொழிகளில் சுமார் 60க்கு மேற்பட்ட படங்களில் நடித்து பரிட்சயமானவர் ராணி பத்மினி. இவர் பிரேம் நசீர், மம்முட்டி, மோகன்லால் மற்றும் தமிழில் மோகன் உள்ளிட்ட ஜாம்பவான்களுடன் இணைந்து, 1980-களில் பல திடைப்படங்களில் நடித்துள்ளார்.

1962-ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் ராணி பத்மினி. இவரின் தாயார் சினிமா படங்களுக்கு டப்பிங் செய்யும் இந்திர குமாரி என்ற டப்பிங் ஆர்டிஸ்ட் ஆவர். இந்திரா குமரிக்கு தனது மகளை பெரிய நடிகையாக பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அவருக்கு சிறுவயதில் இருந்தே கலைகளில் ஆர்வத்தை ஏற்படுத்தினார். தனது 5 வயதில் நாட்டிய பயிற்சியில் ஈடுபட்ட ராணி பத்மினி தனது 19 வயதில் ‘விலங்கும் வீணையும் (1981)’ என்ற மலையாள படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிகையாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து ‘சங்கர்ஷம்’ என்ற படத்திலும் நடித்தார்.

தொடர்ந்து தனது திறமையை சரியாக பயன்படுத்தி பத்மினி, அடுத்தடுத்த படங்களில் முன்னணி மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் உடன் இணைந்து நடித்தார். தமிழில் கார்த்தி, மோகன், ஆகியோருடனும் நடித்துள்ளார். அப்போதைய காலகட்டத்தில் பத்மினி என்ற பெயரில் ஏற்கனவே சில நடிகைகள் இருந்ததால் தனது பெயரை ராணி பத்மினி என மாற்றிக்கொண்டார்.

தென்னிந்திய படங்களில் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திய ராணி பத்மினி பொருளாதாரத்தில் உயர் தொடங்கினர். அப்போது சென்னை அண்ணாநகரில் ஒரு தனி பங்களாவை வாங்கி தனது தாயார் இந்திரகுமாரியுடன் வசித்து வந்தார். பின்னர் வீட்டு சமையல் வேலை, ஓட்டுநர் மற்றும் வாட்ச்மன் வேண்டும் என செய்தித்தாள்களில்  ஒன்றையும் கொடுத்தார். அதில் ஜேக்கப் ஜெபராஜ் என்பவர் டிரைவராக சேர்ந்தார். மேலும் அவரின் மூலம் சமையல் செய்ய கணேசன் என்பவரும், வாட்ச்மன் பணிக்கு லக்ஷ்மி நாராயணன் என்பவரும் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் டிரைவர் ஜேக்கப் ஜெபராஜை, நடிகை ராணி பத்மினி தன்னை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தத்திற்காக அறைந்ததாக சொல்லப்படுகிறது. அதில் ஆத்திரமடைந்தவர் இதற்கு பழிவாங்கும் எண்ணத்தில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ராணி பத்மினி சொத்து வாங்குவதற்காக ₹5 லட்சம் ரொக்கம் வைத்திருந்ததும் மற்றும் நகைகள் இருப்பதையும் தெரிந்துக்கொண்ட ஜேக்கப் ஜெபராஜ் மற்றும் அவரின் கூட்டாளிகளான சமயல்காரர் கணேசன், வாட்ச்மன் லக்ஷ்மி நாராயணன் உடன் சேர்ந்து வீட்டில்  திருட திட்டம் தீட்டியுள்ளார். 

1986- அக்டோபர் 15 ம் தேதி, மூவரும் கத்தியுடன் திருட முயன்றபோது தாய் இந்திராகுமாரி பார்த்துள்ளார். இதனால் ஜேக்கப் ஜெபராஜ் அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் தாய் இந்திரகுமாரியின் கூச்சலை கேட்டு பத்மினி ஓடி வந்து பார்த்துள்ளார். அவரையும்  ஜேக்கப் ஜெபராஜ் கத்தியால் சரமாரியாக குத்தி கிழித்துள்ளார். இதில் ராணி பத்மினிக்கு மார்பு பகுதியில் மட்டும் 17 கத்திக்குத்து விழுந்ததாக கூறப்படுகிறது. தாய் மற்றும் மகளை கத்தியால் குத்தி கொலை செய்து, உடல்களை செப்டிக் டேங்கில் போட்டு விட்டு கொலையாளிகள் தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் நடந்து 4 நாட்களுக்குப் பிறகு துர்நாற்றம் வீசுவதை அடுத்து போலீசார் உடலை மீட்டு விசாரணையை தொடங்கினர். 4 நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் அவர்களது உடல் மீட்கப்பட்டது. 1986-ல் நடந்த இந்த சம்பவம் அப்போது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Rani Padmini murder case

கொலை நடப்பதற்கு வெறும் 11 நாட்களுக்கு முன்புதான் ராணி பத்மினியிடம் ஓட்டுநராக ஜெபராஜ் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அவரை நம்பி மேலும் இருவரையும் வேலையில் அமர்த்தியுள்ளார். நம்பிக்கைக்குரிய நபர்களே கொடூரமாக கொலை செய்த சம்பவம் திரைத்துறையில் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   

பின்னர் மார்ச் 1989-ல், நீதிமன்றம் ஜெபராஜ் உட்பட மூவருக்கும் மரண தண்டனை விதித்தது, ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி 1990-ல் சென்னை உயர் நீதிமன்றம் மற்ற இருவரை விடுவித்து, ஜெபராஜின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com