“பாலியல் வன்கொடுமை நடந்தால் வாழ்க்கை முடிந்துவிடுமா?” - 'பத்மாவத்' திரைப்படத்தை சாடும் நடிகை! 8 ஆண்டுகளுக்கு பின் கடிதம் வைரலாவது ஏன்?

நான் ஒரு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவள், இந்தத் திரைப்படம் எனக்கு என்ன சொல்கிறது?
Swara Bhasker Padmaavat controversy
Swara Bhasker Padmaavat controversy
Published on
Updated on
2 min read

நாடெங்கிலும் பெரும் சர்ச்சைக்குள்ளான திரைப்படம்தான் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய 'பத்மாவத்'. இத்திரைப்படத்தில் சர்ச்சையான காட்சி இடம்பெற்றிருப்பதாக பரவிய வதந்தியே போராட்டத்திற்கு வழிவகுத்தது. நாடெங்கிலும் வலதுசாரிகளால் போராட்டம் தீவிரமடைந்தது. அதன் பின்னர் பல்வேறு போராட்டங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் மத்தியில் இந்த திரைப்படம் ஜனவரி 25, 2018 அன்று வெளியானது. பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தற்போது இது மீண்டும் பேசுபொருளாவது ஏன்?. 'பத்மாவத்' திரைப்படத்தில் 'ஜவ்ஹர்' மற்றும் 'சதி' ஆகியவற்றை போற்றும் விதமாக ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். இதனைக் கண்டித்து, நடிகை ஸ்வரா பாஸ்கர் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு ஒரு கட்டமான பகிரங்கக் கடிதம் எழுதி இதோடு எட்டு ஆண்டுகள் ஆகிறது. அந்த சமயத்தில், ​​அந்தக் கடிதம் இணையத்தையும் திரைப்படத் துறையையும் இரண்டு துருவங்களாக ஆக்கியதோடு, தனது கடிதத்திற்கு அந்த நடிகை அளித்த விளக்கமும் செய்திகளில் இடம்பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்வில், ஸ்வரா பாஸ்கர் தான் அன்று எழுதிய அந்த கடிதத்தை மீண்டும் நினைவு கூர்ந்து, ஷாஹித் கபூரின், 'ராவல் ரத்தன் சிங்' கதாபாத்திரத்திற்கு ஜோடியாக 'ராணி பத்மாவதி' கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்திருந்த அந்தப் படத்தில் இடம்பெற்ற 'ஜவ்ஹர்' காட்சி குறித்தும், தன்னை எது அவ்வளவு "கோபப்படுத்தியது" என்பதை குறித்தும் விளக்கினார். 'ஜவ்ஹர்' என்பது முந்தைய காலத்தில் போரில் தோல்வி உறுதியாகும்போது, எதிரிகளால் மானபங்கப்படுத்தப்படாமல் இருக்க ராஜபுத்திரப் பெண்கள் குழந்தைகளுடன் ஒரு பெரிய தீயில் குதித்துத் தற்கொலை செய்துகொள்ளும் ஒரு முறை. புரியும் படி விளக்கவேண்டும் என்றால் சதி.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஸ்வரா பாஸ்கர் இவ்வாறு கூறுகிறார், "நான் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், இதில் 800 பெண்கள் 'ஜவ்ஹர்' செய்வதாகக் காட்டப்படுகிறது, அதுதான் படத்தின் கதை. அதைப் பார்க்கும்போது, ​​'கடவுளே, நான் ஒரு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவள், இந்தத் திரைப்படம் எனக்கு என்ன சொல்கிறது? நான் ஒரு கோழை என்று உணரவைக்கிறது. என் 'கௌரவத்தைக்' காப்பாற்ற நான் தற்கொலை செய்துகொள்ளவில்லையே என்றும் நினைக்கவைக்கிறது" என்று கோபத்துடன் பேசினார்.

'தனு வெட்ஸ் மனு' நடிகர் ஆர். மாதவன் தொடர்ந்து, "பாலியல் வன்கொடுமை ஒரு பெருந்தொற்று போலப் பரவிவரும் நம்மைப் போன்ற ஒரு சமூகத்தில், இதைத்தான் நீங்கள் பெண்களுக்குச் சொல்ல விரும்புகிறீர்களா? பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களிடம், 'நீங்கள் வாழ்வதற்குத் தகுதியற்றவர்கள்' என்று நாம் சொல்ல விரும்புகிறோமா? நீங்கள் உண்மையிலேயே தைரியமான, கண்ணியமான பெண்களாக இருந்திருந்தால், உங்களை நீங்களே கொன்றிருப்பீர்கள் என்று சொல்ல விரும்புகிறோமா? பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பெண்ணின் வாழ்வின் முடிவு என்று நாம் கூறுகிறோமா?" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 'பத்மாவத்' திரைப்படத்தில் "மிகவும் சிக்கலான" பல விஷயங்கள் இருந்ததாக ஸ்வரா பாஸ்கர் தெரிவித்துள்ளார். "அதில் ஒரு காட்சி என்னை மிகவும் கோபப்படுத்தியது. நான், ' சீ !' என்று கத்தினேன். அதில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை நெருக்கமாகக் காட்டும்போது, ​​அவள்... அப்படியென்றால், ஒரு முஸ்லிம் ஆட்சியாளரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்பதால், பெண்ணாக இருக்கக்கூடிய ஒரு கரு பிறக்கத் தகுதியற்றது என்று சொல்கிறீர்களா? எனக்கு மிகவும் கோபம் வந்தது. பிறகு நான் வெளியே வந்து, 'இது மிகவும் கொடுமையானது' என்று சொன்னேன்," என அவர் அது குறித்து விவரித்தார். தனது கருத்துக்களையும் அரசியலையும் வெளிப்படையாகக் கூறுவதற்காக பிரபலமாக அறியப்பட்ட அந்த நடிகை, தன்னைப் பற்றிய ஒரு பொதுவான கருத்தையும் அதில் தகர்த்தெறிந்துள்ளார். 'தி வயர்' என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட அந்தக் பகிரங்கக் கடிதத்தை எழுதுவதற்கு முன்பு, அவர் ஐந்து நாட்கள் காத்திருந்ததாக கூறியுள்ளார்.

"பொதுவாக, நான் இதுபோன்ற விஷயங்களை ஆத்திரத்தில் செய்வதாக மக்கள் நினைப்பார்கள், ஆனால் நான் ஐந்து நாட்கள் காத்திருந்தேன். எனக்கு இன்னும் இப்படித்தான் உணர்கிறதா? என்று சோதித்துப் பார்ப்போம் என்பது போல இருந்தேன். ஐந்து நாட்களின் முடிவில்தான் இந்தக் கடிதத்தை எழுதினேன்," என்று அவர் மேலும் தனது நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தினார்.

2018 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில், 'பத்மாவத்' திரைப்படத்தைப் பார்த்த பிறகு தான் "ஒரு பெண்ணுறுப்பிற்குள் சுருங்கிவிட்டதாக உணர்ந்ததாக" ஸ்வரா பாஸ்கர் எழுதியிருந்தார். 'ஜவ்ஹர்' மற்றும் 'சதி' போன்ற செயல்களைப் பெருமைப்படுத்தியதற்காக பன்சாலியையும் அவர் கடுமையாக சாடினார். "ஐயா, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான போதிலும் பெண்களுக்கு வாழ உரிமை உண்டு. தங்களின் கணவர்கள், ஆண் 'பாதுகாவலர்கள்', 'உரிமையாளர்கள்'... என ஆண்களை நீங்கள் எப்படிப் புரிந்துகொண்டாலும் சரி, அவர்கள் இறந்த பிறகும் பெண்களுக்கு வாழ உரிமை உண்டு," என்று அவர் தனது கடிதத்தில் தீர்க்கமாக எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com