
நேற்று சென்னையில் நடைபெற்ற இசைஞானி இளையராஜாவின் 50 ஆவது ஆண்டு பாராட்டி விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் “நேற்று இல்லை நாளை இல்லை என்றும் ராஜா ராஜாதான். இசைஞானி கலைத்தாய்க்கு மட்டும் சொந்தமானவரில்லை தமிழ் தாய்க்கும் சொந்தமானவர் அவருக்கு பாராட்டுக்கள் புதியது இல்லை அவரை பாராட்டி நாம் தான் பெருமையடைகிறோம்.
இவர் நம்முடைய இதயங்களை இசையால் ஆள தொடங்கி அரை நூற்றாண்டு ஆகிறது. திறமையும் உழைப்பும் இருந்தால் எப்பேர் பட்ட உயரங்களையும் அடையாளம் என்பதற்கு அனைவரும் உதாரணமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் இளையராஜா. இந்த அரை நூற்றண்டில் ராஜாவுடைய பாடல்களை முணுமுணுக்காத உதடுகளே தமிழ்நாட்டில் இருக்க முடியாது. இவரின் இசை தாயாக தாலாட்டுகிறது, காதலின் உணர்வுகளை போற்றுகிறது, வெற்றிகளுக்கு ஊக்கமளிக்கிறது, இவர் இல்லயராஜா மட்டுமில்லை இணையற்ற ராஜா.
இளையராஜா மொழிகளை கடந்தவர் எல்லைகளை கடந்தவர் எல்லாம் மக்களுக்கும் சொந்தமானவர். ‘இளைராஜா மட்டும் இசையமைத்திருந்தால் நற்றினையும், குறுந்தொகையும், சிலப்பதிகாரமும் எங்களுக்கு மனப்பாடமாக இருந்திருக்கும்’ எனவே உங்களுக்கு கோரிக்கை வைக்கிறேன் சங்க தமிழ் இலக்கியங்களுக்கு நீங்கள் இசை அமைக்கவேண்டும், அனைவரும் முதலமைச்சரிடம் கோரிக்கை வைப்பார்கள் நான் மக்கள் சார்பில் உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன்.
கலைஞருக்காக தனது பிறந்தநாளை மாற்றிக்கொண்டவர் இளையராஜா, கலைஞருடன் நல்ல நண்பராக இருந்தவர் இளையராஜா இவரின் அன்பிற்கு என்று நான் கட்டுப்பட்டவன், நல்ல பாடல்களை அமைக்கும் இசை கலைஞர்களுக்கு இனி ஆண்டுதோறும் இசைஞானி இளைராஜா பெயரில் விருதுகள் வழங்க வேண்டும். மேலும் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.