
தமிழகத்தை தனது இசையால் கடந்த ஐம்பது வருடங்களாக கட்டிப்போட்டு வைத்திருக்கும் இளையராஜாவை பாராட்டி தமிழக அரசு நடத்திக் கொண்டிருக்கும் “பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழா” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் “புதிய பழைய எதிர் கட்சிகளுக்கு ஒரு சவாலாக இருக்கும் தனக்கே உரித்தான புன்னைகையுடன் செயல்படுபவர் ஸ்டாலின். எளிய பிரமாண்ட மனிதனுக்கு இந்த பிரமாண்ட விழாவை நடத்தும் முதலமைச்சருக்கு நன்றி, அதிசய மனிதர்களை நான் புராணங்களில் கேட்டிருக்கிறேன், ஆனால் நான் கண்ணில் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா.
நான் சாமி என அழைக்கும் இல்லயராஜாவை பற்றி பேசவேண்டும் எனில் அதிகம் பேசவேண்டும். அணைத்து தமிழக மக்களின் நாடி நரம்புகளில் ஊறியுள்ளது இளையராஜாவின் இசை ராக சரஸ்வதி இந்த ராக தேவனுக்கு இசையை அல்லி கொடுத்துள்ளார். கமல்ஹாசனுக்கு மட்டும் இளையராஜா கொஞ்சம் அதிகமாக உழைத்து இசை அமைக்கிறார், நம்முடைய உலகம் வேறு இளையராஜாவின் உலகம் வேறு அவர் எப்போதும் இசை உலகில் இருக்கிறார் அவ்வப்போது தான் நமது உலகிற்கு வந்து போகிறார்.
SPB பாலசுப்ரமணியம் மற்றும் விவேக் என்ற இரண்டு கலைஞ்சர்களை தமிழக திரை உலகம் இழந்துவிட்டது, இளையராஜாவை எந்த அளவுகோலாலும் அளக்க முடியாது. உண்மையாகவும் கடினமாகவும் உழைத்தால் அனைத்தும் நமக்கு பின்னால் வரும் நாம் பழகியது மிக பெரிய பாக்கியம் இசைகளின் அரசன் இளையராஜா என்னுடைய நண்பர் எப்போதும் நன்றாக வாழ வேண்டும். விரைவில் உங்க சுயசரிதையை படமா எடுங்க எல்லோரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.