“எனது மக்கள் எல்லாம் இந்த இசையை கேட்டு மகிழ வேண்டும்” - முதலமைச்சர் எனக்கு உதவி செய்வார்.. நெகிழ்ச்சியில் உரையாற்றிய இளையராஜா!

நான் கிராமத்தில் இருந்து வந்தவன் அந்த கிராம சாயல் தெரியக்கூடாது, படங்களில் வந்த இசை போல இருக்கக்கூடாது..
“எனது மக்கள் எல்லாம் இந்த இசையை கேட்டு மகிழ வேண்டும்” - முதலமைச்சர் எனக்கு உதவி செய்வார்.. நெகிழ்ச்சியில் உரையாற்றிய இளையராஜா!
Published on
Updated on
1 min read

பிறந்த குழந்தைகளில் இருந்து தள்ளாடும் முதியவர்கள் வரை இசையை ரசிக்காதவர்கள் இந்த உலகத்தில் இருக்க முடியாது, குறிப்பாக இளைராஜாவின் இசையை ரசிக்காதவர்கள் தமிழகத்தில் இல்லை என்றே சொல்லலாம். அன்னக்கிளி படத்தில் தொடங்கி இன்று வரை தனது இசையால் தமிழக மக்களை கட்டிப்போட்டவர் இளையராஜா. இசைஞானி தனது இசைப்பயணத்தில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை பாராட்டும் விதமாக தமிழக அரசு பாராட்டு விழா நடத்தியது.

அதில் பேசிய “இசை உலக சரித்திரத்திலேயே ஒரு இசை கலைஞருக்கு பாராட்டு விழா நடத்தியது தமிழக அரசு தான், இதையெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை என் மேல் இவ்வளவு அன்பு வைப்பதற்கு காரணம் இசை தான கலைஞரை போலவே அவரது தவப் புதல்வரும் எனக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்துகிறார். சிம்பொனி இசையை அமைப்பதற்கு என் வாழ்நாளில் அதிக நாட்களை செலவழித்து இருக்கிறேன், எனது குழந்தைகளுடன் செலவழிக்காமல் அந்த நேரத்தை நான் இசையோடு செலவழித்ததால்தான் இவ்வளவு இனிமையான நீங்கள் ரசிக்கும் இசையை என்னால் கொடுக்க முடிந்தது.

எனவே எனது குழந்தைகளுக்கு முதலில் நன்றி, இந்த சிம்பொனி இசை அமைக்கும் போது எனக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்தது நான் கிராமத்தில் இருந்து வந்தவன் அந்த கிராம சாயல் தெரியக்கூடாது, படங்களில் வந்த இசை போல இருக்கக்கூடாது இந்தியன் என்ற சாயல் தெரியக்கூடாது இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தது இதையெல்லாம் மீறி தான் நீங்கள் கேட்ட இந்த சிம்பொனி இசையை அமைத்துள்ளேன். நிகழ்ச்சியை முடித்துவிட்டு முதலமைச்சரை சந்தித்த போது சாதாரணமாக சொல்லிவிட்டார் அரசு சார்பில் பாராட்டு விழா என்று எனக்கு எதற்கு பாராட்டு விழா என தெரியவில்லை.

எனது மக்கள் எல்லாம் இந்த இசையை கேட்டு மகிழ வேண்டும் ரெகார்ட் செய்து கேட்டல் இந்த உணர்வு வாராது. இந்த இசையை கேட்டல் அனைவரின் மனதும் உருகி விடும், இந்த இசையை நமது மக்களுக்கு பெரிய மைதானத்தில் இதே இசை கலைஞ்சர்களை அழைத்து வந்து உங்களுக்கு நிகழ்ச்சி செய்து காட்டுவேன். இதற்கு எனக்கு தேவையான உதவிகளை முதலமைச்சர் அவர்கள் செய்து தர வேண்டும்” என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com