"நம் சந்தோஷமும் ஜோக்ஸூம் மறந்துபோயிடுமோ.." - நண்பர் மரணத்தால் கமல்ஹாசன் உருக்கம்!

இலக்கியத் துறை மட்டுமன்றித் திரைத்துறையிலும் தடம் பதித்த இவர், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘உன்னைப் போல் ஒருவன்’ மற்றும் ‘பில்லா-2’ திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
"Will even our joy and jokes be forgotten?.." Kamal Haasan gets emotional over friend's demise!
"நம் சந்தோஷமும் ஜோக்ஸூம் மறந்துபோயிடுமோ.." நண்பர் மரணத்தால் கமல்ஹாசன் உருக்கம்!
Published on: 
Updated on: 
2 min read

எழுத்தாளர் இரா முருகன் (74) மரணம் தமிழ் எழுத்துலகுக்கு பேரதிர்ச்சி.

‘சைக்கிள் முனி’, ‘தகவல்காரர்’, ‘தேர்’, ‘ஆதம்பூர்க்காரர்கள்’, ‘சிலிக்கன் வாசல்’, 'மிளகு' போன்ற முக்கியப் படைப்புகளை எழுதிய மூத்த படைப்பாளி இரா முருகன்.

இவரது 'அரசூர் வம்சம்' என்ற மாந்திரீக யதார்த்த நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் ஆங்கிலப் பதிப்பான 'The Ghosts of Arasur', புகழ்பெற்ற க்ராஸ்வேர்ட் (Crossword) விருதுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்றுச் சாதனை படைத்தது. 

இலக்கியத் துறை மட்டுமன்றித் திரைத்துறையிலும் தடம் பதித்த இவர், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘உன்னைப் போல் ஒருவன்’ மற்றும் ‘பில்லா-2’ திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 

Kamal Haasan with Writer Era Murugan
Kamal Haasan with Writer Era Murugan

இவரது சிறந்த படைப்பாற்றலுக்காக இலக்கியச் சிந்தனை விருது, கதா விருது, பாரதியார் பல்கலைக்கழக விருது, என்.சி.சி.ஆர்.டி (N.C.C.R.T) விருது. விஷ்ணுபுரம் இலக்கிய விருது மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது உள்ளிட்ட பல்வேறு கௌரவங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

தனது இரங்கல் செய்தியில் இவருடனான கடந்தகால நாட்களை நினைவுகூர்ந்தார் நடிகர் கமல்ஹாசன்.

அவரது பதிவில், "ஈரா முருகனும் நானும் சேர்ந்து எழுதிய உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஒரு வசனம். ‘மறதி ஒரு தேசிய வியாதி’.

அந்த மறதி எனக்கும் முருகனுக்கும் வராது என்று நம்பியிருந்த எங்களுக்கு முருகனின் ‘மறதி வியாதி’ அதிர்ச்சிதான். கவலைப்படாதீங்க.. இந்த மறதியோட தேக்கி வச்சிருந்த கோபதாப குரோதங்களும் மறந்துரும். சோகங்களும் கூட என்றேன்.

அது போனா போயிட்டு போறது கூடவே நம்ம சந்தோச நாட்களும் ஜோக்ஸூம் மறந்துபோயிடுமோன்ற பயமாயிருக்கு என்றார் ஈராமு. எல்லாத்தோடயும் சேர்த்து பயமும் மறந்த வீரரா வாழவேண்டியதுதான். இது பெரிய சோகமில்ல முருகன் என்றேன்.

‘ஓ நல்லாருக்கே You are saying I might even forget to forget? என்று கேட்டார். இருவரும் சிரித்தோம். சத்தமாக நான். மனதிற்குள் அவர். முருகனின் கடைசி சோகம் அதுதான். சோகமும் பிரிவும் இனி என்போன்ற நண்பர்களுக்குத்தான்.

நாங்கள் நண்பர்களாக எங்களை ஊக்குவித்தவர் திரு. சுஜாதா ரங்கராஜன். அதுவும் எப்படி? உங்களுக்குப் பிறகு, நீங்கள் விட்ட இடத்தில் தொடங்கக் கூடிய எழுத்தாளரைக் கண்டுபிடித்துவிட்டீர்களா என அவரிடம் கேட்டேன். சுஜாதா தயக்கமில்லாமல் சொன்னார், ‘ஓ ஈரா முருகன்”
சஜாதா புகழ்ந்த அந்த ஈரா முருகன் என் நண்பர். இவர்களை எனக்குத் தெரியும் என்பதே என் பெருமை.

சில பேர் மொழியைக் காதலிப்பார்கள். சிலரை மொழியே காதலிக்கும். ஈரா முருகனின் காதல் ஒருதலைக் காதல் அல்ல.

அன்புடன்,

முருகனின் நண்பன், தமிழின் காதலன் கமல்ஹாசன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

"Will even our joy and jokes be forgotten?.." Kamal Haasan gets emotional over friend's demise!
விஜய், உதய், ஸ்டாலின், கமல், ரஜினி... சாலமன் பாப்பையாவுக்கு பிரபலங்கள் இரங்கல்!
"Will even our joy and jokes be forgotten?.." Kamal Haasan gets emotional over friend's demise!
'தேவா தேவாதான்' - ரஜினி முதல் அஜித் வரை நடிகர்களை நட்சத்திரங்களாக மாற்றிய இசை.. தென்றலில் கரைந்த தேனிசை!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.