தமிழ் சினிமாவின் மாஸ் கமர்ஷியல் கதையை மாஸ் காட்சிகள் மற்றும் கலர்ஃபுல் காட்சிகளுடன் எல்லாவகையான காரா சாரா மசாலாகலை ஒன்றாகி, ரசிகர்களுக்கு ஒரு முழுமையான விழாக்கால சினிமா அனுபவத்தை இயக்குனர் வழங்கியுள்ளார்.
சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார். வழக்கமான கமர்ஷியல் பாணியில் பக்கா பேமிலி ஆடியன்ஸ்யை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களிடையே ஆரம்பம் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படத்திற்கு வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார். இவர், பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘Dude’ திரைப்படத்திற்கும் இசையமைத்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ‘கருப்பு’ திரைப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகிய தருணத்திலிருந்தே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக, சூர்யாவின் மாஸ் லுக், பின்னணி இசை, அதிரடியான வசனங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தன. அதைபோல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ''God mode'' என்ற பாடல் ரசிகர்கள் மதியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
‘கருப்பு’ திரைப்படம் ஒரு நாள் தாமதத்திற்குப் பிறகே திரையரங்குகளில் வெளியானது. இப்படம் முதலில் மே 14, 2026 அன்று வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ஏற்பட்ட நிதி மற்றும் தயாரிப்பு தொடர்பான சிக்கல்கள் காரணமாக அதிகாலை சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால், ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றமும் குழப்பமும் ஏற்பட்டது. இதனால், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மனவேதனை அடைந்து தனது ‘Instagram’ பக்கத்தில் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “‘கருப்பு’ திரைப்படத்திற்கு மே 14ஆம் தேதி அதிகாலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைத்திருந்த நிலையில், படம் வெளியாகாது என்ற வதந்திகள் பரவி வந்தன. அதற்கு ஆர்.ஜே. பாலாஜி, "கருப்பன் நம்முடன் இருப்பான். இதற்காக 36 மாதங்கள் நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம். அதனால் கண்டிப்பாக இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும்" என உருக்கமாக பதிவிட்டிருந்தார். இதையடுத்து, மே 15, 2026 அன்று அதிகாலை ‘கருப்பு’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாக திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் காட்சியிலிருந்தே ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் சூர்யா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. படம் வெளியாகி பலதரப்பட்ட விமர்சனங்களையும் பெற்று வருகிறது, இப்படம் சமூக அவலங்களை எடுத்துரைப்பதாகவும் மற்றும் நடுத்தர மக்களுக்கு ஏற்படும் சட்ட போராட்டங்களை பற்றியதாகவும், மறுக்கப்பட்ட அவலத்தை கடவுளாக இருக்கும் "கருப்பசாமி" மனித உருவெடுத்து எப்படி சரிசெய்கிறார் என்பதே படத்தின் கதையாக தெரிகிறது.”
‘கருப்பு’ திரைப்படம் முதல் நாளிலேயே வசூலில் அதிரடி சாதனை படைத்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் படம் வலுவான தொடக்கத்தைப் பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாக்ஸ் ஆபீஸ் வசூல், திரைப்பட விமர்சனங்கள் போன்ற தரவுகளை துல்லியமாக வழங்கும் ஒரு முன்னணி இணையதளமான சாக்னில்க் தகவலின்படி, இப்படம் இந்தியாவில் முதல் நாளில் ரூ.14.40 கோடி நிகர வசூலை ஈட்டியுள்ளது. இந்த வசூல் நாடு முழுவதும் திரையிடப்பட்ட 4,891 காட்சிகளில் இருந்து கிடைத்ததாக கூறப்படுகிறது. மேலும், முதல் நாளில் இந்திய அளவில் இப்படத்தின் மொத்த வசூல் ரூ.16.66 கோடியாக பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கு மாநிலங்களிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வார இறுதி நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்கள் கணித்து வருகின்றன.
இன்று (மே 16, 2026) இரண்டாம் நாள் நிலவரப்படி, ‘கருப்பு’ திரைப்படம் தற்போது 3,151 காட்சிகளில் திரையிடப்பட்டு வருகிறது. இப்படம் இன்று மட்டும் நேரலை கணக்கில் ரூ.8.44 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் இதுவரையிலான மொத்த வசூல் ரூ.27.89 கோடியாகவும், மொத்த நிகர வசூல் ரூ.23.94 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
முதல் வார இறுதிக்குள் ‘கருப்பு’ திரைப்படம் ரூ.50 கோடி வசூலை எட்டும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்த்து வருகின்றன. ரசிகர்களிடையே கிடைத்து வரும் நேர்மறை விமர்சனங்கள் மற்றும் குடும்ப ரசிகர்களின் ஆதரவு காரணமாக, அடுத்தடுத்த நாட்களிலும் இப்படத்தின் வசூல் தொடர்ந்து உயரும் என கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.