“அரைவேக்காட்டுத்தனமாக பேசக்கூடாது.. 6 மாத ஆட்சி பற்றிய கேள்விக்கு VJS பளீச் பதில்! 'ஏத்துக்கற பக்குவம் இல்லனு' சொல்வது யாரை?

அரசியல் என்பது ஆசை இல்லை சேவை. என்னால் என்ன முடியுமோ அத செய்றேன். அதுவே போதுமானதா நான் நினைக்குறேன்.
Vijay Sethupathi on Vijay government
Vijay Sethupathi on Vijay government
Published on: 
Updated on: 
2 min read

இயக்குநர் மிஷ்கின் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இருவரும் யூட்டியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தற்போதைய ஆட்சியை குறித்து அவர் தெரிவித்த கருத்து கவனம் ஈர்த்துள்ளது. விஜய்யோட 6 மாத ஆட்சி பத்தி என்ன நினைக்குறீங்க? என்று தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு அவர் தெரிவித்த கருத்துதான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இயக்குநர் மிஷ்கின் இயக்கி நடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளியாகவிருக்கின்ற 'டிரைன்' திரைப்படத்தினை புரொமோஷன் செய்வதற்காக யூட்டியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளிக்க வந்திருந்தனர். இதற்கு முன்பு, இயக்குநர் மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் 'சூப்பர் டீலக்ஸ்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது தொகுப்பாளர் இருவரது 'கம்போ' குறித்து பேசிக்கொண்டிருந்தார். சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்த அந்த பேட்டியில் அரசியல் குறித்த சில கேள்விகளை தொகுப்பாளர் விருந்தினர்களிடம் கேட்டார்.

அந்த கேள்விகளுக்கு சற்றும் யோசிக்காமல் விஜய் சேதுபதி பதிலளித்தார். மேலும், இயக்குநர் மிஷ்கின் தான் இதற்குமுன்பு, எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா போன்றோரின் ஆட்சியை பார்த்ததாகவும் ஆனால், யாருமே தன்னிடம் வந்து 'இந்த 60 நாள் ஆட்சி எப்படி இருந்தது?' என்று யாருமே கேட்டதில்லை என்றும், தற்போது இவ்வாறு கேட்பது ஆச்சர்யமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து பேசிய விஜய் சேதுபதி, விஜய்யை ஒரு நடிகராக மட்டுமே தெரியும் என்றும், அவர்கள் அறிவிக்கும் திட்டங்கள் அதில்தான் இருக்கிறதே தவிர, தான் அதை நுணுக்கமாக பார்ப்பதில்லை என்றும் வேறு வேலை இருக்கிறது என்றும் குறிப்பிட்டு பேசினார்.

ஏற்கனவே 'மாஸ்டர்' திரைப்படத்தில் இருவரும் (விஜய் மற்றும் விஜய் சேதுபதி) இணைந்து நடித்ததால் இந்த கேள்வி கேட்கப்படுவதாக தொகுப்பாளர் குறிப்பிட்டு சில கேள்விகளை கேட்டார். தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார். "உங்களுக்கு அரசியல் ஆசை இருக்கா?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "அரசியல் என்பது ஆசை இல்லை சேவை. என்னால் என்ன முடியுமோ அத செய்றேன். அதுவே போதுமானதா நான் நினைக்குறேன். இதுவரை 2 லட்சம் பேருக்கு மேல் வேலை வாங்கி கொடுத்துள்ளேன். துணி கடை வைத்துள்ளேன், ஒரு குளத்தை தூர்வாரி கொடுத்துள்ளேன். நிறைய பேரை படிக்க வைக்கிறேன். இதுவே அரசியல் தான்.. இதுலேயே நான் திருப்தியாகத்தான் இருக்கிறேன். நான் சம்பாதிக்கிறேன், செய்கிறேன், இதிலேயே திருப்தியாகத்தான் இருக்கிறேன்" என்று பதிலளித்தார்.

"இந்த மாற்று அரசியலை எப்படி பார்க்கிறீர்கள்?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "முதலில் நாங்கள் படம் எடுத்துள்ளோம். இரண்டாவது, எங்களுக்கு அரசியல் கருத்துக்களை பேசுவதில் எந்தவிதமான ஆட்சபனையும் இல்லை. ஆனா, அத நாகரீகமா ஏத்துகிற தன்மை இங்க அவ்ளோ சீக்கிரம் கிடையாது. அது எந்த ஆட்சி இருந்தாலும் சரி. இன்னொன்னு கருத்து வைக்கிற அளவுக்கு நாம அத கூர்ந்து கவனிச்சிருக்கணும். கூர்ந்து கவனிக்காமல் அதுமேல ஒரு கருத்து சொன்னா.. அரைவேக்காட்டு தனமா இருக்கும். சினிமாவை கவனிக்கிறோம் வேலை செய்யிறோம். கூர்ந்து கவனிக்காத ஒன்ன, பொதுவா பேசுறதுனால அதுல ஒரு பிரயோஜனம் இல்ல. அதுக்கப்பறம் அதுமேல வர்ற விமர்சனம் இருக்குல, அதுவந்து இந்த படத்த பாதிக்கக்கூடாது. ஆனால், சோசியல் மீடியா இன்னைக்கு அப்டி கிடையாது" என்று பதிலளித்திருந்தார்.

தற்போது அவரது பதிலை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு, "என்ன ஒரு மெச்சூரிட்டி" என்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே, விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட விளையாட்டு சமபந்தமாக அவர் பேசியதை தற்போதுள்ள அரசியலோடு முடிச்சி போட்டு பல விமர்சனங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.