
பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் இடையேயான உறவு, ஒரு காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்று. அந்த உறவு பிரிந்த பிறகு, ஐஸ்வர்யா ராய் மனமுடைந்து போனார் என்றும், அவருக்குத் திரைப்பட உலகம் துணையாக நிற்கவில்லை என்றும் Ad guru என்று அழைக்கப்படும் இயக்குநர் பிரகலாத் கக்கர் கூறியுள்ளார். சல்மானும் ஐஸ்வர்யாவும் காதலித்துக்கொண்டிருந்த போது, ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு அருகிலேயே பிரகலாத் கக்கர் வசித்துள்ளார். அந்த அனுபவங்களின் அடிப்படையில் அவர் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
ஐஸ்வர்யாவின் வேதனை:
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பிரகலாத் கக்கர், "சல்மானுடன் ஏற்பட்ட பிரிவுக்காக ஐஸ்வர்யா வருந்தவில்லை. ஆனால், அதன்பிறகு திரைப்பட உலகம் அவரை கைவிட்டபோதுதான் அவர் மிகவும் வேதனைப்பட்டார். அந்தப் பிரிவு ஐஸ்வர்யாவுக்கு ஒரு பெரிய நிம்மதியைக் கொடுத்தது" என்று கூறியுள்ளார்.
குறிப்பாக, "சல்மான்கான் ஐஸ்வர்யாவுடன் உடல்ரீதியாக மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார். அவர் மிகவும் ஆவேசமானவராக (obsessive) இருந்தார். இப்படிப்பட்ட ஒரு நபரை எப்படி சமாளிப்பது?" என்று பிரகலாத் கேள்வி எழுப்பினார். சல்மான் மற்றும் ஐஸ்வர்யா இடையே நடந்த வாக்குவாதங்கள் குறித்து நேரடியாக ஐஸ்வர்யா தன்னிடம் பகிர்ந்துகொள்ளவில்லை என்றாலும், அந்தச் சண்டை சத்தம் தனக்குத் தெரியும் என்று பிரகலாத் கூறியுள்ளார். "அவர் எங்கள் கட்டிடத்தில் உள்ள வரவேற்பு அறையிலேயே சண்டை போடுவார். சுவரில் தலையை மோதிக்கொள்வார். அவர்களின் உறவு முடிந்து வெகு நாட்களுக்குப் பிறகுதான் உண்மையில் அது முடிவுக்கு வந்தது. இது ஐஸ்வர்யாவின் பெற்றோர், அவர் மற்றும் எல்லோருக்கும் ஒரு பெரிய நிம்மதியாக இருந்தது" என்றும் பிரகலாத் தெரிவித்துள்ளார்.
பிரிவுக்குப் பிறகு, ஐஸ்வர்யாவுக்குத் திரையுலகம் ஆதரவு அளிக்காததுதான் அவரது மிகப்பெரிய வேதனையாக இருந்தது. "ஐஸ்வர்யா திரையுலகை நம்புவதை நிறுத்திவிட்டார். அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. ஆனால், எல்லாம் ஒருதலைப்பட்சமாக இருந்தது. இந்தத் திரையுலகம் தனக்குத் துரோகம் செய்துவிட்டதாக அவர் வேதனைப்பட்டார்" என்றும் பிரகலாத் கக்கர் கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.