பெண் தொகுப்பாளருக்கு பாலியல் சீண்டல்! பிரபல சின்னத்திரை நடிகர் மீது வழக்கு பதிவு.. யார் இந்த ரவி?

"நேர்காணல் முடிந்து அலுவலகத்தில் இருந்து வெளியேறிய போது, ரவி திடீரென அந்த பெண்..."
actor ravi
Published on: 
Updated on: 
1 min read

பாஜக பிரசார பிரிவு மாநிலச் செயலாளரும், சீரியல் நடிகருமான ரவி மீது பெண் செய்தி தொகுப்பாளர் அளித்த பாலியல் புகாரின் பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.

பிரபல சின்னத்திரை நடிகரும் பாஜக பிரசாரப் பிரிவு மாநிலச் செயலாளருமான ரவி பெண் தொகுப்பாளர் ஒருவரை கன்னத்தில் முத்தமிட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகரில் தாமரை என்ற பெயரில் இன்போ மீடியா ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில 30 வயதுடைய பெண் ஒருவர் அரசியல் பிரிவு செய்தி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் . 

இந்நிலையில் கடந்த 14-ம் தேதி பிற்பகல் அந்த பெண் தொகுப்பாளர் பாஜக பிரசார பிரிவு மாநில செயலாளரான ரவி என்பவரை நேர்காணல் செய்துள்ளார். நேர்காணல் முடிந்து அலுவலகத்தில் இருந்து வெளியேறிய போது, ரவி திடீரென அந்த பெண் தொகுப்பாளர் கன்னத்தில் முத்தமிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தொகுப்பாளர், இதுகுறித்து கேட்ட போது உங்கள் நிறுவனம் உங்களை வேலையில் இருந்து நீக்கினால், நான் உங்களை என்னுடன் வைத்துக் கொள்கிறேன்" என ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் தொகுப்பாளர் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாகியிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். அப்போது விக்னேஷ் இது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், ரவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பாதிக்கப்பட்ட பெண் தொகுப்பாளர் நேற்று (நவம்பர் 17தேதி) அசோக் நகர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார். புகாரின் பேரில், அசோக் நகர் போலீசார் ரவி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார். தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரபாகும் சீரியல் மூலம் நான்கு அறியபட்டவர் என்பது குறிபிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்