சமூக வலைத்தளங்களில் கணவன் மனைவியாக வீடியோ செய்து பிரபலமானவர்கள் சுபா வரதராஜன் மற்றும் ராஜா வேதமூர்த்தி. காமெடியான வீடியோக்கள், வீட்டில் கணவன் மனைவி இடையே நடக்கும் உரையாடல்கள் போல பல வகையான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர்கள் நேற்று முன்தினம் (நவ 22) மாறி மாறி இருவர் மீது வைத்து கொண்ட குற்றசாட்டுகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இவர்களுக்கு கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது 12 வயதில் ஒரு மகள் உள்ளார்.
ஜோடியாக வீடியோ செய்து பிரபலமான இவர்கள் கடந்த ஒரு வருடமாகவே சுபாவும் மூர்த்தியின் இணைந்து வீடியோ செய்யாமல் இருந்தனர். இது குறித்து பலமுறை அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பிய போதும் சில தனிப்பட்ட காரணங்கள் என்று தவிர்த்து வந்தனர். பின்னர் இருவரும் தனித்தனியாக வீடியோக்களை செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மூன்று பகுதிகளாக மூர்த்தி வெளியிட்ட வீடியோ வைரலானது அதில் பேசிய அவர் “நிறைய பேர் கேட்டீங்க என் couple வீடியோ போடுறது இல்லனு, எல்லாம் சரியாகிடும்னு சொல்லாம இருந்தேன்.. ஆனா இப்ப என்னால முடியல மன உளைச்சலின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன்.
மனிதாபிமானமே இல்லாத ஒருத்தர கல்யாணம் பண்ணி அவங்களோட இத்தனை வருடம் குடும்பம் நடத்தியது நினைத்தால் எனக்கே அசிங்கமா இருக்கு.. சினிமா வாய்ப்பு கிடைக்க மரியாதையுடன் நடிக்க சொல்லுங்க.. இதுபோல exposing போட்டோக்களை எடுக்க வேணான்னு சொன்னேன்.. இதற்கு சுபாவின் அம்மா பேசாமல் இருந்தார்.. ஒரு புருஷன் பாக்க கூடாத வீடியோவை எல்லாம் பாத்துட்டேன்.. சினிமாவில் நடிக்கிறது தப்பு இல்லை அதுக்குன்னு இப்படி பண்ணக்கூடாது. சினிமா.. சினிமான்னு என் வாழ்க்கையே போயிடுச்சி.. அவளோட சினிமா வாழ்க்கைக்காக என் வாழ்கை என் குழந்தையின் வாழ்க்கையை நாசம் பண்ணிட்ட..” என சுபா மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்துள்ளார்.
மேலும் சுபாவின் நண்பராக குடும்பத்திற்கு அறிமுகமானவர் குழந்தைகளை வைத்து தவறாக வீடியோ எடுத்ததாகவும் பின்னர் பெரிய சண்டை நடாத்தாகவும், பின்னர் இரண்டு ஆண்டுகள் பிறகு சுபாவின் அந்த ஆண் நண்பர் தன்னையும் தன் குழந்தையையும் வெட்ட வந்து அது காவல்நிலைய வழக்காக மாறி சில பிரச்சனைகள் நடந்தது எனவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பலரும் சுபாவை பற்றி தவறாக பேசி வீடியோ வெளியிடுவது மற்றும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்று தவறாக கருத்து தெரிவிப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர். இதனால் வருத்தம் மற்றும் ஆத்திரமடைந்த சுபா கணவரின் வீடியோவுக்கு விளக்கமளித்து ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில் “எல்லாத்துக்கும் இரண்டு பக்கம் இருப்பதை மறந்து எல்லாரும் வாயிக்கு வந்ததை பேசிட்டு இருக்கீங்க.. நான் கடந்த ஒரு வருடமாக அவரை பிரிந்து தான் வாழ்ந்து வந்துட்டு இருக்கேன்.. அதைப்பற்றி நான் பேசியதே இல்லை.. இப்போது கூட பேசவேண்டாம் என்று தான் நினைத்தேன்.. என்ன நடந்தது என்பதை தெளிவா சொல்றேன்.. நான் என்ன தப்பான வீடியோ போட்டுட்டேன்.. எனக்கு வரும் விளம்பரங்களுக்கு ஏற்ப நான் வீடியோ செய்து கொண்டிருக்கிறேன்.. நான் அவரை கல்யாணம் பண்ணும் போது அவருக்கு இது இரண்டாம் திருமணம் என்பது எனக்கு தெரியாது.. அதை மறைச்சு தான் கல்யாணம் பண்ணாரு.. கல்யாணத்திற்கு பிறகும் அவங்க முன்னாள் காதலிகளோட பேசிட்டு தான் இருந்தாரு.. கல்யாணமான முதல் நாளே என்ன அவரு அடிச்சாரு..
நான் மிடில் கிளாஸ் குடும்பம் தான் இதை வச்சி என்ன அவ்ளோ திட்டி இருகாங்க.. அவங்க அம்மா தங்கச்சி கூட இதை வைத்து என்ன திட்டியிருக்காங்க.. இதை கேட்ட என்னை பயங்கரமா போட்டு அடிப்பாரு.. செக்ஸ் டார்ச்சர் குடுத்திருக்காரு.. ஒரு முறை 'Marital rape' கூட எனக்கு நடந்து இருக்கு.. கை கால்களை கட்டி போட்டு ஐந்து நிமிஷம்.. ஐந்து நிமிஷம் என அவரை சொன்ன வார்த்தை இப்போ கூட என் காதுல கேட்டுட்டே இருக்கு.. அதுக்கு பிறகு தான் நான் அவரைவிட்டு பிரிய முடிவு செய்தேன். இப்போவும் என் குழந்தையை நான் பாத்துக்குறேன்..” என மூர்த்தி மீது அவர் சில குற்றசாட்டுகளை வைத்திருக்கிறார்.
மேலும் "இரண்டு பக்கமும் தெரியாம யாரும் பேசாதீங்க.. என் குழந்தை இல்லனா நான் தற்கொலை செய்துகொண்டிருப்பேன் அந்த அளவுக்கு நீங்கள் பேசுவது மனஉளச்சல் தருகிறது” என கூறியுள்ளார். ஜோடியாக வீடியோ செய்து பிரபலமான கணவன் மனைவி தற்போது பிரிந்து மாறி மாறி குற்றசாட்டிக்கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது. ஆனால் தற்போது வரை இருவரும் விவாகரத்து குறித்தோ அல்லது ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தது குறித்தோ எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்