அன்று என்னை கேலி செய்தார்கள், இன்று என் கையில் விருது!நெகிழ்ச்சியில் ராஷ்மிகா...

"முதலில் அவர்கள் என் நடிப்பைக் கேலி செய்தனர், இப்போது அரசு எனக்கு இந்த விருதை வழங்கியுள்ளது..
Rashmika
Published on
Updated on
1 min read

மார்ச் 19ம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் வழங்கப்படும் கடா (Gadda) விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ராஷ்மிகா மந்தனாவிற்கு 'தி கேர்ள்ஃபிரண்ட்' திரைப்படத்திற்காக விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை அவர், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந் ரெட்டி மற்றும் ராம் சரண் கைகளில் இருந்து பெற்று கொண்டார். விருதைப் பெற்றுக்கொண்ட ராஷ்மிகா, தனது பயணத்தை பற்றி ஆழமான வார்த்தைகளால் தொகுத்துரைத்தார், "முதலில் அவர்கள் என் நடிப்பைக் கேலி செய்தனர், இப்போது அரசு எனக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. நான் வெகுதூரம் வந்துவிட்டேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.

ராஷ்மிகா அவர் நடிக்கும் விதத்திற்காக பல விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார், மேலும் சமூக ஊடகங்களில் அவரது இந்தி உச்சரிப்பு கேலி செய்யப்பட்டதோடு, அவர் தேர்ந்தெடுக்கும் படங்களும் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. இந்த விருது, அவரைக் கேலி செய்பவர்களுக்கு பதிலடி கொடுப்பதாக உள்ளது. ராஷ்மிகா இந்த விருது வழங்கும் விழாவிற்கு அவரது மாமியார் மாதவி தேவரகொண்டாவுடன் வந்திருந்தார். மேலும், விருதைப் பெற்றுக்கொண்டபோது, ​​ராஷ்மிகா தான் ஒரு மகளாக தெலுங்கு சினிமாவுக்குள் நுழைந்ததையும், தற்போது அவர்களின் மருமகளாக மாறியிருப்பதையும் நினைவுகூர்ந்தார்.

இந்த 'தி கேர்ள்ஃபிரண்ட்' திரைப்படத்தில் பூமா என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருந்தார். மேலும், தனது இயல்பான நடிப்பாலும், எளிமையான தோற்றத்தாலும், சாதாரண ஒரு பயந்த சுபாவம் உள்ள பெண்ணாக இவர் நடித்திருந்தார். மேலும், பல பெண்களால் இந்த திரைப்படத்தின் கதையையும், ராஷ்மிகாவின் கதாபாத்திரத்தியும் பொருத்திப்பார்க்கக்கூடிய ஒன்றாக இருந்தது. இத்திரைப்படத்தை இயக்கி நடித்த ராகுல் ரவீந்திரன், "நீங்கள் விருதைப் பெறுவதைப் பார்த்தபோது மிகவும் பெருமையாக உணர்ந்தேன். இதயம் பெருமையால் நிரம்பி வழிந்தது. இந்த மகிழ்ச்சிக்கும், இந்தப் பயணம் முழுவதும் நீங்கள் எனக்கு அளித்த அனைத்து ஆனந்தத்திற்கும் நன்றி" என்று அவரை பாராட்டி சமூகவலைத்தளத்தில் பதிவினை வெளியிட்டிருந்தார்.

மேலும், இந்த ஆண்டு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் திருமணமான நிலையில் தற்போது இவருக்கு மாநில அரசு விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com