"ஒரிஜினல் Dude" - முன்னாள் மனைவியின் திருமணத்தை நடத்தி வைத்த 'ஸ்பைடர்மேன்'! இணையத்தில் வைரலாகும் ஐக்கானிக் போஸ்..

"சிறந்த தந்தை, சிறந்த முன்னாள் கணவர், சிறந்த நண்பர்" என்று அழைத்துள்ளார்.
Tobey Maguire ex-wife wedding
Tobey Maguire ex-wife wedding
Published on: 
Updated on: 
1 min read

அனைவராலும் விரும்பப்படும் 'ஸ்பைடர்மேன்' நடிகரான டோபி மாகுவேர், இசை நிர்வாகி ஜெஃப்ரி ஒகுன்லேசியுடனான தனது முன்னாள் மனைவி ஜெனிஃபர் மேயரின் திருமணத்தில் பங்குகொண்டு தனது பிரபலமான ஸ்பைடர்மேன் போசை செய்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது மனைவி மேயருடனான தனது விவகாரத்தை அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, கடந்த சனிக்கிழமை (அக்10) அன்று, ஹவாயில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ரிசார்ட் லனாயில் தனது மனைவியின் திருமணத்தை மாகுவேர் நடத்தி வைத்துள்ளார்.

51 வயதான அந்த நடிகர் புதுமண தம்பதியினரின் முன்நின்று, ஒரு பேப்பரில் ஏதோ படிப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. அப்போது, ​​மேயரும் ஒகுன்லேசியும் திருமண உறுதிமொழிகளைப் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர். பின்னர் அவர்கள் இருவரும் முத்தமிட்டுத் தங்கள் திருமணத்தை உறுதிப்படுத்தினர். இந்த திருமண விழாவில், டோபி மற்றும் மேயரின் இரு குழந்தைகளான 19 வயது ரூபி மற்றும் 17 வயது ஓடிஸ் ஆகியோரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த திருமண விழாவில் லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் அவரது காதலி விட்டோரியா செரெட்டி உள்ளிட்ட பல முக்கிய ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

2007-ல் ஹவாயின் கோனாவில் மேயருக்கும் டோபிக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் அவர்களுக்கு இடையே நடந்த நீண்ட விவாகரத்து செயல்முறைக்குப் பிறகு டோபி இந்த திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார். இந்த முன்னாள் தம்பதியினர் 2016-ல் பிரிவதாக அறிவித்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மேயர் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

மேலும் 2026 செப்டம்பர் 21 அன்று, அவர்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக ஒரு முடிவிற்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும், டோபியும் மேயரும் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதன் காரணமாக, ஒரு நெருங்கிய உறவைப் பேணி வந்துள்ளனர்.

பிரிவுக்குப் பிறகும் டோபி அவர்களது உறவைக் கையாண்ட விதத்தைப் பாராட்டிய மேயர், அவரை "சிறந்த தந்தை, சிறந்த முன்னாள் கணவர், சிறந்த நண்பர்" என்று அழைத்துள்ளார். "டோபியும் என் வருங்காலக் கணவர் ஜெஃப்பும் ஒருவரையொருவர் மிகவும் நேசிக்கிறார்கள்," என்றும் மேயர் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

34 வயதான ஒகுன்லேசி, நைஜீரிய பணக்கார வங்கியாளரும் வழக்கறிஞருமான அடேபாயோ ஒகுன்லேசியின் மகன் ஆவார். அவர் ஒரு இசை மேலாண்மை நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் 2023-ம் ஆண்டின் கோடை காலத்தில் 49 வயதான மேயருடன் முதன்முதலில் காதல் உறவில் இருந்ததாகக் கூறப்பட்டது. மேலும், அந்தத் தம்பதியினர் 2024 ஆகஸ்டில் தங்களது நிச்சயதார்த்தத்தை அறிவித்து , 2026 கடந்த ஜூன் மாதம் ஒரு பெண் குழந்தையை வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com