யூடியூபில் வீடியோ போட்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். அது உண்மையே யூடியூபில் வெறும் வீடியோ பதிவிடுவது மட்டுமல்லாமல், விளம்பரங்கள், மில்லியன் கணக்கான பார்வைகள், ரசிகர்களின் ஆதரவு எனப் பல வழிகளில் பணம் குவிக்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவிலேயே அதிக வருமானம் ஈட்டும் டாப் YouTubers யார்? மாதம் அவர்கள் சம்பாதிக்கும் தொகை மற்றும் அதற்கான காரணங்கள் என சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்!
இந்தியாவில் முதல் இடத்தில் “டெக்னிக்கல் குருஜி” யூடியூப் சேனலின் உரிமையாளர் கௌரவ் சௌத்ரி உள்ளார். டெக்னிக்கல் குருஜி கணக்கிற்கு யூடியூபில் 23.7 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவர் டெக் சார்ந்த வீடியோக்களை தினமும் பதிவிட்டு வருகிறார். யூடியூபில் டெக்னாலஜி மற்றும் கேட்ஜெட்ஸ் பிரிவுகளுக்கு அதிக search volume (தேடல்) உள்ளதால் மில்லியன் கணக்கான சப்ஸ்கிரைபர்கள் மற்றும் மற்ற வலைதங்களில் followers-யை அதிகம் கொண்டுள்ளார். இந்த பிரிவுகளுக்கு விளம்பரதாரர்கள் மிக அதிக பணம் தருவதால் இவரது வருவாய் முதலிடத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. யூடியூப் மூலம் மட்டும் மாதத்திற்கு சுமார் ₹1 கோடி முதல் ₹1.5 கோடி வரை வருவாய் ஈட்டுவதாக சொல்லப்படுகிறது.
இரண்டாவது இடத்தில சௌரவ் ஜோஷி விளாக்ஸ்- Sourav Joshi Vlogs. இந்த கணக்கிற்கு 42.3 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவரது டெய்லி விளாக்ஸ் வீடியோக்கள் மாதத்திற்கு பல கோடி வியூஸ்களைப் பெறுகின்றன. பல விளாக் வீடியோக்கள் சுமார் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. விளாக் வீடியோக்களுக்கான விளம்பர கட்டணம் நடுத்தரமாக இருந்தாலும், மில்லியன் கணக்கான வியூஸ்கள் இவருக்கு மிகப்பெரிய தொகையை ஈட்டித் தருகிறது. யூடியூப் மூலம் மட்டும் மாதத்திற்கு சுமார் ₹80 லட்சம் – ₹1.2 கோடி வருவாய் ஈட்டுவதாக சொல்லப்படுகிறது.
மூன்றாவது இடத்தில் துருவ் ரதி உள்ளார். இவரது யூடியூப் சேனல் சுமார் 33.3 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் கொண்டுள்ளது. இவர் கல்வி மற்றும் நடப்பு நிகழ்வுகள் குறித்த வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அதில் ஒவ்வொன்றும் பல மில்லியன் வியூஸ்களைக் கடந்துள்ளது. மேலும், இந்தியாவைத் தவிர வெளிநாடுகளில் வாழும் மக்களும் இவரது வீடியோக்களைப் பார்ப்பதால், விளம்பர வருவாய் மிக அதிகமாக உள்ளது. இவரது மத வருவாய் ₹70 லட்சம் – ₹1.1 கோடி வரை என சொல்லப்படுகிறது.
அவரையடுத்து கேரிமினாட்டி சேனலின் உரிமையாளர் அஜய் நாகர் என்பவர். இவரின் carryminati சேனலுக்கு 45.8 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவரின் சேனலின் முக்கிய அம்சம் ரோஸ்டிங், அதாவது மற்றவர்களின் வீடியோக்களை காமெடியாக ரோஸ்ட் செய்வது. மேலும் கேமிங் லைவ் ஸ்ட்ரீமிங் சேனல் மூலமும் கோடிக்கணக்கான வியூஸ் கிடைக்கின்றன. குறிப்பாக லைவ் ஸ்ட்ரீம்களில் ரசிகர்கள் அனுப்பும் Super Chats மற்றும் Super Thanks மூலம் அதிக பணம் கிடைக்கிறது. யூடியூப் மூலம் மட்டும் மாதத்திற்கு சுமார் ₹60 லட்சம் முதல் ₹1 கோடி வரை வருவாய் ஈட்டுவதாக சொல்லப்படுகிறது.
ஐந்தாவது இடத்தில் புவன் பாம் (BB Ki Vines) இவர் வீடியோக்களை உருவாக்க அதிக காலம் எடுத்துக்கொண்டாலும், பழைய காமெடி வீடியோக்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் அதிக மக்களால் பார்க்கப்பட்டு தொடர்ந்து வருவாயை ஈட்டி கொண்டே இருக்கிறது. யூடியூப் மூலம் மட்டும் மாதத்திற்கு சுமார் ₹50 லட்சம் முதல் ₹80 லட்சம் வரை வருவாய் ஈட்டுவதாக சொல்லப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய மோட்டிவேஷனல் ஸ்பீக்கரான சந்தீப் மகேஸ்வரி தனது சேனலில் விளம்பரங்களை ஆன் செய்தால், அவர்தான் இந்த பட்டியலில் முதல் இடத்தில் என்று சொல்லப்படுகிறது. 28.3 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் கொண்ட அவரது சேனலில் டிரேடிங், தொழில் சார்ந்த வழிகாட்டல்கள் மற்றும் மோட்டிவேஷனல் கன்டென்ட் வீடியோக்களுக்கு மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் உள்ளனர். மக்கள் எந்தவித விளம்பர இடையூறும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்பதற்காக அவர் தனது சேனலை முற்றிலும் இலவசமாக வைத்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.