நாட்கள் செல்ல செல்ல உடலுறவு பிடிக்காமல் போகிறதா!? உங்கள் ‘பாலியல் திருப்தியை’ மேம்படுத்த இத செய்யுங்க போதும்..!

இந்த மாதிரியான நேரங்களில் உடல் உறவின் மீதான ஆசையும், திறனும் குறைவாக இருக்கும். ஆனால் .....
நாட்கள் செல்ல செல்ல உடலுறவு பிடிக்காமல் போகிறதா!? உங்கள் ‘பாலியல் திருப்தியை’ மேம்படுத்த இத செய்யுங்க போதும்..!
Published on
Updated on
2 min read

ஒரு நல்ல காதலுக்கு, புரிதல், நேரம், அன்பு, ஈர்ப்பு இவையெல்லாம் எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு காமமும் அவசியம். அது பார்ட்னர்கள் இருவரின் விருப்பு வெறுப்புகள் சங்கமிக்கும் ஒரு இடம், கவனமாக கையாள வேண்டிய ஒரு இடமும் ஆகும். ஒரு நல்ல காதல் உறவு சிறப்பாக தொடர நல்ல உடல் உறவும் அவசியமாகிறது. 

ஆனால் பழகப் பழக பாலும் புளிக்கும் என்பதற்கு ஏற்ப… நாட்கள் செல்ல செல்ல காதலும் காமும் கூட மனிதர்களுக்கு பிடிக்காமல் போகலாம், அதற்கு காரணம் நாம் காதலில் விழுந்த பிறகு நாம் நமது துணைவருக்கு முழுமையான காதலையும் , கவனிப்பும் கொடுக்க தவறி விடுகிறோம். அதன் விளைவே உடல் உறவின்மீதான வெறுப்புக்கும் வழி வகை செய்கிறது. காதல் இல்லாத எந்த ஒரு உறவும் நிச்சயம் வன்முறையில்தான் போய் முடியும். உலகம் முழுவதிலும் பெருகிவரும் திருமணத்தை மீறிய உறவுகளும் அதனால் ஏற்படும் வன்முறைகளுக்கும் காரணம் காதலின்மையும் குறைந்தபட்ச நேர்மையும் இல்லாததுதான்.

இந்த மாதிரியான நேரங்களில் உடல் உறவின் மீதான ஆசையும், திறனும் குறைவாக இருக்கும். ஆனால் பாலுறவை செயற்கையாக பலகாலத்துக்கு தூண்ட முடியாது. பலமுறை சொல்லியது போல காதலின்றி மேற்கொள்ளும் உடலியல் செயல்பாடுகள் நீண்ட கால மன உளைச்சலுக்கு தம்பதியரை ஆழ்த்தி விடும். 

தம்பதியர் இருவரும் பேசி அதை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சரி செய்யும் இடத்திற்கு வந்தால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த சிக்கல்களிலிருந்து விடுபடலாம்.

பாலுறவினை மேம்படுத்த பண்டை காலம் தொட்டு பலவிதமான செயல்முறைகள், உணவு பொருட்கள் புழக்கத்தில் இருந்து வந்துள்ளனர்.

பழங்கால நாகரிகத்தில் பாலுணர்வைத் தூண்டுவதற்கு புளித்த திராட்சை ரசத்தைப் பயன்படுத்தியிருக்கின்றனர். சமகாலத்தில் பயன்படுத்தும் பட்டை, லவங்கம், முந்திரி, பாதம் உள்ளிட்டவையும் பாலுறவு தூண்ட பயன்படுகின்றன. மேலும், திராட்சை, அன்னாசி, அத்தி, வாழைப்பழம் உள்ளிட்ட உணவுகள் உங்கள் பாலுணர்வை தூண்டக்கூடும். 

ஆண்களுக்கு பாலுணர்வை தூண்ட வயகரா இருப்பது போல பெண்களுக்கு அப்படி ஏதும் இல்லை. பெரும்பாலும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து முகமை (FDA) அங்கீகரிக்கும் மருந்துகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. வயாகராவை இந்த அமைப்பு அங்கீகரித்திருக்கிறது. பெண்களுக்கு பாலியல் விருப்பம் குறைந்திருப்பது, ஆசை இல்லை என்பது போன்ற பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால் பெண்களுக்கு FDA-வால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் ஏதும் இல்லை.

பெண்களின் பாலியல் விருப்பத்தைத் தூண்டுவதற்காக டெஸ்ட்ரோஜன் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் இதற்கு FDA அமைப்பு இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

ஏனெனில் இதனால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும், எந்த அளவுக்கு பலன் கிடைக்கிறது, எந்த அளவு கொடுக்கப்பட வேண்டும் என்பது பற்றிய விரிவான ஆராய்ச்சிகள் இல்லை.

மேலும் பாலுறவில் பார்ட்னர்கள் இருவரின் திருப்தியும் மிக மிக முக்கியம்.

அதற்கு இருவருமே முயற்சி எடுக்க வேண்டும். உடற்பயிற்சி செய்யலாம்.. ஒன்றாக சேர்ந்து ஜிம் செல்லுவது, நடைப்பயிற்சி மேற்கொள்ளுவது, சமைப்பது, வீட்டு வேலைகளை செய்வது, ஒருவருக்கு ஒருவர் சத்தான உணவுகளை செய்துகொடுப்பது என பலவிதமான விஷயங்கள் செய்யலாம்.

மேலும் இணையர்களுக்கு உடல் ரீதியாக எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அவற்றை உடனடியாகச் சரி செய்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இரண்டாவது, மூன்றாவது தேனிலவுகூடச் செல்லலாம். இது பாலியல் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com