உங்களின் கனவுகளுக்கான காரணம் பற்றி தெரியுமா? பிராய்ட் சொல்லும் உளவியல் உண்மைகள்!

கனவு என்பது சீரற்ற காட்சி அல்ல; அது நிறைவேற்ற முடியா ஆசையின் மறைமுக நிறைவேற்றம்.” என்றும் குறிப்பிடுகிறார்...
உங்களின் கனவுகளுக்கான காரணம் பற்றி தெரியுமா? பிராய்ட் சொல்லும் உளவியல் உண்மைகள்!
Published on
Updated on
2 min read

நாம் ஒவ்வொரு இரவும் தூங்கும் முன் பல நினைவுகளை ஒரு முறை மனதிற்குள் ஓட்டி பார்க்கிறோம். அதில் சில சந்தோஷங்கள், துக்கங்கள் அல்லது அன்றைய நாளுக்கான நிகழ்வுகளை அடுத்தது நினைத்துப்பார்க்கிறோம். இதன் பின் நாம் தூங்க முயல்கிறோம், கண்களை மூடுகிறோம். ஆனால் மனம் மட்டும் விழித்திருக்கும். கனவு என்பது வெறும் காட்சியா அல்லது நம் மனம் நமக்கே சொல்கிற ஒரு மறைமுக உரையாடலா? என்னவெல்லாம் நமக்கு கேள்வி எழுந்திருக்கும்.

ஒருசில நேரங்களில் நம் மனதுக்கு ஏற்றுக்கொள்ள முடியா கனவுகள் வரும். சில நேரங்களில் யாரோ நம்மைத் துரத்துவது போல தோன்றும். சில நேரங்களில் மறந்துபோன மனிதர்களை மீண்டும் சந்திக்கிறோம். சில நொடிகள் அது உண்மையா கனவா என்று புரியாமல் கூட இருக்கும்.

Sigmund Freud நவீன உளவியலின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர், உளப்பகுப்பாய்வின் தந்தை (Father of Psychoanalysis) என்றும் அறியப்படுகிறார ஆஸ்திரிய நரம்பியல் நிபுணரான இவர், மனித மனம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த உளவியல் சார்ந்த கருத்துக்களை வழங்கியுள்ளார். பிராய்ட் கனவுகளை பற்றி ஒரு பெரிய வாதத்தை முன்வைக்கிறார். கனவு எதிர்காலத்தை ஒரு போதும் கணிப்பதாக இருக்காது, ஆழ்மனதால் கட்டுப்படுத்தப்படுகின்றன அல்லது இறந்த காலத்தில் நம்மை பதித்த நிகழ்வுகளை பற்றியது என்று பிராய்ட் கருதினார். கனவு என்பது சீரற்ற காட்சி அல்ல; அது நிறைவேற்ற முடியா ஆசையின் மறைமுக நிறைவேற்றம்.” என்றும் குறிப்பிடுகிறார்.

Freud-க்கு, கனவு என்பது நம் ஆழ்மனதில் ஒடுக்கப்பட்ட உணர்வுகளின் இரவுக் குரல். மனிதன் விழித்திருக்கும் வாழ்க்கையில் சமூகம், ஒழுக்கம், பயம், பொறுப்பு ஆகியவற்றால் பல ஆசைகளை அடக்கிக் கொள்கிறான். ஆனால் தூக்கத்தில் அந்த கட்டுப்பாடுகள் தளர்கின்றன. அப்போது மனத்தின் அடியில் ஒளிந்திருக்கும் விருப்பங்கள் சின்னச் சின்ன குறியீடுகளாக மேலெழுகின்றன.

அவர் “manifest content” மற்றும் “latent content” என்ற வேறுபாட்டை பேசுகிறார். நாம் நினைவில் வைத்துக் கொள்கிற கனவு அது வெளிப்படையான காட்சியாக இருக்கும். ஆனால் அதன் பின்னால் மறைந்திருக்கும் உணர்ச்சி தான் உண்மையான அர்த்தம். உதாரணமாக ஒரு சாதாரண கனவு, ஒரு வீட்டில் அலைந்து திரிவது மற்றும் யாரோ துரத்துவது கூட, உண்மையில் நம் உள் உணர்வு பாதுகாப்பு தேடும் மனநிலையாக இருக்கலாம் அல்லது தவிர்க்கப்பட்ட பிரச்சினை ஆக கூட இருக்கலாம்.

Freud தனது சொந்த கனவுகளையும் இந்த நூலில் பகிர்கிறார். குறிப்பாக “Irma’s Injection” என்ற அவரது கனவு, இந்த முழு கோட்பாட்டின் தொடக்கம். அந்த கனவை அவர் பகுத்து ஆராய்ந்தபோது, அது தனது மனஅழுத்தத்தையும் குற்ற உணர்ச்சியையும் மறைத்திருந்தது என்று கூறுகிறார். அவரது கருத்தில், கனவுகள் நேரடியாக அர்த்தம் சொல்லாது. அது “condensation” (பல உணர்வுகள் ஒன்றாக சேர்ந்து ஒரு காட்சியாவது ), “displacement” - முக்கிய உணர்ச்சி வேறு காட்சிகளாக மாற்றப்படுவது போன்ற செயல்முறைகளால் மறைக்கப்பட்டிருக்கும். அதனால் தான் கனவு ஒரு புதிர் போல தோன்றுகிறது.

உதாரணமாக நமக்கு பிடித்தவர்கள் நம் கனவில் இறப்பது போல தோன்றும். இதற்கு கரணம் நாம் அவர்களை வெறுக்கிறோம் அல்லது இது நடக்க போகிறது என்றெல்லாம் இல்லை. இறந்த காலத்தில் எதோ ஒரு தருணத்தில் அவர் மீது நமக்கு கோவமோ அல்லது வெறுப்போ வந்து இருக்கும். ஆனால் அதை நாம் கடத்துவந்து மறந்தே இருப்போம். ஆனால் நம் ஆழ்மனம் மீண்டும் அதை வேறு தருணத்தில் கனவாக காட்சிபடுத்தும்.

இந்த புத்தகத்தில் ஒரு முக்கியமான அடிநாதம் இருக்கிறது. மனிதன் தனது மனத்தை முழுவதுமாக அறிந்தவன் அல்ல. நம்முள் இன்னொரு “நாம்” இருக்கிறோம். அவ்வப்போது அது அமைதியாக பேசுகிறது. கனவுகள் அதன் மொழி. மேலும் அவர் நம்முடைய நிறைய கனவுகள் மனிதனின் பாலியல் விருப்பம் சார்ந்ததாகவே இருக்கும் என்றும் கூறுகிறார். பாலுணர்வு விருப்பு என்பது மனித வாழ்வின் முக்கியான பகுதி. ஆனால் அதை நாம் வெளிப்படையக பேச முடியாது. இது நம் ஆழ்மனதில் மறைக்கப்பட்ட விருப்பத்தில் ஒன்றாக மாறி அவ்வப்போது கனவில் வேறு விதத்தில் வெளிப்படும்.

மேலும் அவர் "மனிதர்கள் யாரும் தன் கனவுகளை முழுமையாக யாரிடமும் சொல்ல மாட்டார்கள் ஏனெனில் சில நேரங்களில் அது தவறான காட்சிகளையும், செயல்களையும் கொண்டு இருக்கும். இதை வெளியில் சொன்னால் நம்மை தவறாக நினைப்பார்கள் என்றும் தவிர்ப்பார்கள். யார் ஒருவர் தன கனவுகளை மறைக்காமல் சொல்கிறார்களோ அவர்கள் தான் நல்லவர்கள் என்றும் அப்படி யாரும் இல்லை" என்றும் குறிப்பிடுகிறார்.

பிராய்ட்-ன் எழுத்து முழுவதும் ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. அவர் கனவுகளை மூடநம்பிக்கை அல்லது தெய்வீக அறிகுறி என்று பார்க்கவில்லை. அதை அறிவியல் ஆய்வுக்குரிய மனவியல் நிகழ்வாக எடுத்து சிந்திக்க செய்கிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com