

வாய்வழிப் பாலுறவு என்பது, இளம் பருவத்தினர் உட்பட பல்வேறு வயதினரிடையே, பாலியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் ஒரு பாலியல் விளையாட்டு ஆகும். இது உடலுறவிற்கு முன்போ, அல்லது உடலுறவிற்கு பின்போ ஒருவரது துணை வாய்வழிப் பாலுறவில் ஈடுபடலாம். மேலும், இதனால் கருத்தரிக்க முடியாது என்பதால் இளம்வயதினரால் அவர்களது துணையோடு மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இந்த வாய்வழி புணர்ச்சி பாதுகாப்பானதா? அல்லது ஆபத்தானதா?என்ற கேள்வி பலரிடமும் எழுவது உண்டு. அது குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.
பொதுவாக, வாய்வழிப் புணர்ச்சி என்பது வாய், நாக்கு, பற்கள் அல்லது தொண்டையைப் பயன்படுத்தி பிறப்புறுப்புகளைத் தூண்டும் பாலியல் செயல்பாடுகளைக் குறிக்கிறது. இந்த செயல்பாடானது இரு பாலினத்தவர்களாலும் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, இளம் பருவத்தினரில் கணிசமான விகிதத்தினர் வாய்வழிப் பாலுறவு உட்பட, உடலுறவு அல்லாத பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். ஆய்வுகள், 14% முதல் 50% வரையிலான இளம் பருவத்தினர் தங்கள் முதல் உடலுறவு அனுபவத்திற்கு முன்பு வாய்வழிப் பாலுறவில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது. இதில் சிலர் மட்டுமே, பாதுகாப்பான முறையில் ஈடுபடுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
இந்த வாய்வழி பாலுறவில் சில வகைகள் உள்ளது, அவை, குனிலிங்கஸ் (வாய்வழி யோனித் தொடர்பு), ஃபெல்லேஷியோ (ஆணுறுப்பு வாய்வழித் தொடர்பு), அனலிங்கஸ் (வாய்வழி மலத்துவாரத் தொடர்பு) ஆகியவை ஆகும். இளம்வயதினர் வாய்வழிப் பாலுறவு மிகவும் "பாதுகாப்பானது" என்று கருதினாலும், இது ஒரு ஆபத்தான தவறான கருத்து என்று மருத்துவர்களால் கூறப்படுகிறது. வாய்வழி பாலுறவால் கருவுறுதல் நிகழ்வதில்லை என்றாலும், பாலியல் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், இந்த வாய்வழி பாலுறவானது, பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளை பரப்புதல், வாய் அல்லது தொண்டை நோய்த்தொற்றுகளை பரப்புதல், புண்கள், கொப்புளங்கள் அல்லது ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவு ஆகியவை தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரித்தல், வெட்டுக்காயங்கள், புண்கள், ஈறு நோய் அல்லது சமீபத்திய பல் சிகிச்சைகள் இருந்தால் ஆபத்து அதிகரிப்பதற்கான வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், வாய்வழிப் பாலுறவின் போது, உமிழ்நீர், விந்துக்கு முந்தைய திரவம், விந்து, யோனிச் சுரப்பிகள் மற்றும் மாதவிடாய் இரத்தம் ஆகியவை வாய்க்குள் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
வாய்வழி-பிறப்புறுப்புப் புணர்ச்சியில் 'மனித பாப்பிலோமா வைரஸ்' தொற்று மற்றும் 'ஹெபடைடிஸ் சி' தொற்று ஏற்படுவதற்கான சிறிய ஆபத்து உள்ளதாகவும், அதே நேரத்தில் வாய்வழி-பிறப்புறுப்புத் தொடர்பு 'HSV 1' தொற்று ஏற்படுவதற்கான ஒரு முக்கிய ஆபத்தான காரணி என்றும் மருத்துவர்களால் கூறப்படுகிறது. வாய்வழி பாலுறவு என்பது கருவுறுதல் நிகழாது என்பதால் பல்வேறு வயதினரால் மேற்கொள்ளப்படுகிறது. ஆணுறுப்பில் இருந்து விந்தணுக்கள் கருப்பைக்குள் நுழைந்து ஒரு முட்டையை கருவுறச் செய்வதற்கு எந்தப் பாதையும் அல்லது வாய்ப்பும் வாய்வழி பாலுறவில் இல்லை. மனிதர்களில், இரைப்பை அமைப்புக்கும் இனப்பெருக்கப் பாதைக்கும் இடையே எந்தத் தொடர்பும் கிடையாது.
ஆனால், வாய்வழி பாலுறவின் போது உட்கொண்ட விந்தணுக்கள் வயிற்றில் உள்ள அமிலம் மற்றும் சிறுகுடலில் உள்ள புரதங்களால் கொல்லப்பட்டு உடைக்கப்படுகின்றன. இது, மிகக் குறைந்த அளவு ஊட்டச்சத்துக்களாக உறிஞ்சப்படுகின்றன. வாய்வழி பாலுறவின் போது விந்து வெளியேற்றத்தில் விந்தானது, விரல்கள், கைகள் அல்லது மற்ற உடல் பாகங்களில் பட்டு, யோனிப் பகுதியுடன் தொடர்பு கொள்ளும்போது கருவுறுதல் நிகழ்வதற்கான வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்காக வாய்வழிப் பாலுறவின்போது விழிப்புணர்வோடு இருப்பது ஒன்றியமையாத ஒன்றாகும்.
இதுபோன்ற பாலியல் சார்ந்த நோய்களில் இருந்து தப்புவதற்கு ஆணுறைகளை பயன்படுத்துவது நல்லது. முன்னெச்சரிக்கையுடன் வாய்வழி பாலுறவில் ஈடுபடும்போது பாலியல் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் தவிர்க்கப்படுகிறது. இது சாதாரண உடலுறவின்போது கடத்தப்படும் பாலியல் சார்ந்த நோய்களை போல ஆபத்தை ஏற்படுத்தாது என்றாலும் முன்னெச்சரிக்கையை மேற்கொள்வது நல்லது. சமீபத்தில் பல் சிகிச்சை அல்லது ஈறு சிகிச்சை (பற்களைச் சுத்தம் செய்தல் மற்றும் ஈறு அறுவை சிகிச்சை) செய்திருந்தால் வாய்வழிப் புணர்ச்சியைத் தவிர்க்கவும்.
மேலும், வாய்வழிப் பாலுறவின் போது ஏற்படும் அபாயங்களைத் தவிர்க்க, விந்து மற்றும் யோனித் திரவங்களை வாய்க்குள் செல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. ஈறுகளில் இரத்தக் கசிவு, உதடு புண்கள், வெட்டுக்கள் உள்ளிட்டவை இல்லாதது பாலியல் தோற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வாய்வழி பாலுறவில் அடிக்கடி ஈடுபடும் நபர்களிடையே ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வாய்வழி சுகாதார பரிசோதனை மேற்கோளாவது கட்டாயம்.
வாய்வழிப் புணர்ச்சி என்பது பொதுவாக பலராலும் மேற்கொள்ளும் ஒரு பாலியல் செயல்பாடு ஆகும். ஆனால் அது பல்வேறு நோய்களையும் தொற்றுகளையும் பரப்பக்கூடும் என்பதால் பாதுகாப்பாக மேற்கொள்வது இன்னும் முக்கியம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.