இதுக்கு பேர்தான் 'லக்' போல! - குப்பையில் வீசிய லாட்டரி சீட்டிற்கு 1கோடி பரிசு

தனக்கான 1கோடி ரூபாய் பரிசுத்தொகையையும் பெற்றிருக்கிறார் அச்சம்மா...
achamma
achamma
Published on
Updated on
1 min read

மூதாட்டிக்கு கிடைத்த அதிஷ்டம்

கேரளாவில் வழக்கம் போல் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு தீடிரென 5,000 ரூபாய் விழுந்த மகிழ்ச்சியில் மற்றொரு சீட்டை குப்பையில் வீசிய மூதாட்டி. இறுதியில் அந்த சீட்டிற்கு 1 கோடி ரூபாய் பரிசுத்தொகை விழுந்ததால் மூதாட்டி மகிழ்ச்சி.

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி அச்சம்மா குஞ்சு. தளாவடி பஞ்சாயத்து பகுதியில் பெட்டிக்கடை வைத்து இருக்கும் இவர் காருண்யா லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். நமக்கும் பரிசு விழும் என்ற நம்பிக்கையில் 2 சீட்டுகளை வாங்கியிருக்கிறார் அச்சம்மா. மேலும், கடந்த வியாழக்கிழமை லாட்டரி சீட்டுக்கு குலுக்கல் நடந்துள்ளது. இந்நிலையில், இரண்டு டிக்கெட்டுகளில் ஒரு டிக்கெட்டிற்கு ரூ.5 ஆயிரம் பரிசு விழுந்து இருந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த அச்சம்மா, கையில் இருந்த மற்றொரு டிக்கெட்டை குப்பையில் வீசியுள்ளார். பெட்டிக்கடையில் இருந்த குப்பை தொட்டியில் வீசிவிட்டு வீட்டுக்கு வந்த அச்சம்மாவுக்கு அவரது சகோதரர் போன் செய்துள்ளார். அதில், அச்சம்மா குப்பையில் வீசிய லாட்டரி சீட்டிற்கு 1 கோடி ரூபாய் விழுந்திருப்பதாக அவரது சகோதரர் தெரிவித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அச்சம்மா மீண்டும் அந்த கடைக்கு சென்று, குப்பைத்தொட்டியை கண்டுபிடித்து சல்லடை போட்டு தேடி பார்த்திருக்கிறார். குப்பையை முழுவதுமாக கொட்டி தேடிப்பார்த்ததில் அதிஷ்டவசமாக அதில் அந்த லாட்டரி சீட்டு இருந்திருக்கிறது. நிம்மதி பெருமூச்சுவிட்ட அச்சம்மா அந்த சீட்டை எடுத்துக்கொண்டு லாட்டரி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு, தனக்கான 1கோடி ரூபாய் பரிசுத்தொகையையும் பெற்றிருக்கிறார் அச்சம்மா. இதை பார்த்த இணையதளவாசிகள் பலரும், "கடவுள் கொடுக்கனும்னு நினைச்சிட்டா, அதை யாராலும் தடுக்க முடியாது என்பது இதுதான் போல" என்று லாட்டரி பிரியர்களும், நெட்டிசன்களும் இந்த நிகழ்விற்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com