"கலச்சாரத்தோட கலந்த பட்டு புடவைகள்" - புதுமை மாறாம பத்திரமா பாதுகாக்கலாம்.. தினமும் கட்ட ஆசையை தூண்டும் அசத்தல்!

சேலைய மடிச்சு வைக்கறப்போ, ஒரு மெல்லிசு பருத்தி துணி (மஸ்லின் கிளாத்) இல்ல மென்மையான பேப்பர்ல சுத்தி வைங்க.
pattu saree
pattu saree
Published on
Updated on
3 min read

நம்ம ஊரு பட்டு சேலைனு சொன்னாலே, அதோட சேந்து ஒரு கம்பீரமும் பாரம்பரியமும் கூடவே வருது, இல்லையா? அது ஒரு சேலை மட்டுமில்ல நம்ம கலாச்சாரத்தோட ஒரு அடையாளம், பெருமை. ஆனா, இந்த பட்டு சேலைய நீண்ட நாள் பத்திரமா வச்சு உபயோகிக்கறது எப்படி? டெய்லி யூஸ்க்கு எந்த மாதிரி வகைகள் இருக்கு? இப்படி எல்லாம் நீக்க யோசிச்சி கொலம்ப வேண்டாம் நன் சொல்ற வாங்க தெரிஞ்சிக்கலாம்.

பட்டு சேலைய நீண்ட நாள் உபயோகிப்பது எப்படி?

பட்டு சேலைகள் ஒரு தலைமுறையோட பொக்கிஷம். அம்மாவோட சேலைய அப்புறம் பொண்ணு உடுத்துறது, பேரப்பிள்ளை உடுத்துறதுனு கதை சொல்லுது. ஆனா, இத பத்திரமா வச்சு உபயோகிக்கறது ஒரு கலை. இதோ, சில முக்கியமான டிப்ஸ்

பத்திரமா சேமிக்கணும்

பட்டு சேலைய மடிச்சு வைக்கறப்போ, ஒரு மெல்லிசு பருத்தி துணி (மஸ்லின் கிளாத்) இல்ல மென்மையான பேப்பர்ல சுத்தி வைங்க. இது சேலையோட மினுமினுப்பையும், ஜரிகையையும் பாதுகாக்கும். பிளாஸ்டிக் கவர்ல வச்சா, காற்றோட்டம் இல்லாம ஜரிகை மங்கலாம்.

மரப்பெட்டி இல்ல அலமாரில, நல்ல காற்றோட்டமான இடத்துல வைங்க. ஆறு மாசத்துக்கு ஒரு தடவை எடுத்து மறுபடியும் மடிச்சு வைங்க, இல்லனா மடிப்பு இடத்துல துணி மங்கி கிழியலாம்.

உலர் சுத்தம் (Dry Cleaning) தான் பெஸ்ட்

பட்டு சேலைய தண்ணில தொட்டு துவைக்கறது பெரிய ரிஸ்க். சோப், டிடர்ஜென்ட் எல்லாம் துணியோட மென்மையையும், ஜரிகையோட பளபளப்பையும் கெடுத்துடும். நல்ல ட்ரை கிளீனர்கிட்ட கொடுங்க, அவங்க பட்டு சேலைய பத்திரமா கவனிப்பாங்க.

எதாவது கறை பட்டுட்டா, உடனே ஒரு சுத்தமான துணில கொஞ்சம் தண்ணி தொட்டு மெதுவா துடைங்க. பெரிய கறையா இருந்தா, ட்ரை கிளீனர்க்கு விட்ருங்க.

நீராவி இல்லாம இருக்கணும்

பட்டு சேலைய வச்சிருக்கற இடத்துல ஈரப்பதம் இருந்தா, பூஞ்சை வந்து துணிய கெடுத்துடும். சில பேர் நாப்தலின் பால்ஸ் (மத்து) வைப்பாங்க, ஆனா இது பட்டு சேலையோட வாசனைய கெடுக்கலாம். அதுக்கு பதிலா, சிவகாசி உலர் மிளகாய் இல்ல வேப்பிலைய வச்சு பூச்சி வராம பாத்துக்கலாம்.

இப்போ சிலிக்கா ஜெல் பாக்கெட்ஸ் இருக்கு, இத வாங்கி அலமாரில வைங்க. ஈரத்தை உறிஞ்சி சேலைய பாதுகாக்கும்.

ஜரிகைய பாதுகாக்கணும்

பட்டு சேலையோட ஜரிகை தான் ஆயுள். இத மோசமா மடிச்சா இல்ல உரசினா, தங்கம், வெள்ளி நூல் உதிர்ந்து போய்டும். எப்பவும் சேலைய உடுத்தறப்போ, கைல நகை, வளையல் இருந்தா மெதுவா கையாளுங்க.

சேலை மேல பர்ஃப்யூம், டியோடரன்ட் நேரா தெளிக்காதீங்க. இது ஜரிகைய மஞ்சளாக்கி, துணியையும் கெடுத்துடும்.

எப்பவும் ஒரே சேலைய உடுத்தாதீங்க

ஒரு பட்டு சேலைய ரொம்ப அடிக்கடி உடுத்தினா, துணி தேய்மானம் ஆய்டும். ஒரு மாசத்துக்கு ஒரு தடவை உடுத்துனா கூட, நல்லா காற்று படுத்தி, மறுபடி மடிச்சு வைங்க. இது சேலையோட பளபளப்பையும், உறுதியையும் காக்கும்.

சூரிய ஒளியில காட்டாதீங்க

பட்டு சேலைய காஞ்சு போனப்பறம், வெயில்ல காய வைக்கறது நல்லதுனு நினைப்பாங்க. ஆனா, இது சேலையோட நிறத்தையும், ஜரிகையையும் மங்க வைக்கும். நிழல்ல காற்று படுத்தினா போதும்.

டெய்லி யூஸ் பட்டு சேலை வகைகள்

பட்டு சேலைனு சொன்னாலே, கல்யாணம், ஃபங்ஷன்னு கட்டுவாங்கனு தோணுது இல்ல ஆனா, இப்போ பல பேர் டெய்லி யூஸ்க்கும் பட்டு சேலை உடுத்த ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, எல்லா பட்டு சேலையும் டெய்லி உடுத்தறதுக்கு ஏத்ததில்ல. எவை லைட் வெயிட், எவை கம்ஃபர்ட்டபிள், எவை பராமரிக்க ஈசி? இதை பத்தியும் தெரிஞ்சிக்கிட்டு தினம் ஒரு பட்டுப்புடைவைனு கலக்குங்க.

சிக்கோ சேலை (Sico Saree)

இது பருத்தி (cotton) + பட்டு (silk) கலந்த ஒரு மாஜிக். தமிழ்நாட்டுல இத சில்க் காட்டன்னு சொல்வாங்க. இந்த சேலை ரொம்ப லேசு, உடுத்தறதுக்கு கம்ஃபர்ட்டபிள். பளபளப்பு இருக்கும், ஆனா கனமா இருக்காது.

பிளஸ் பாயிண்ட்

  • துவைக்க ஈசி, ட்ரை கிளீன் பண்ண வேண்டிய அவசியம் இல்ல.

  • ஆபிஸ், காலேஜ், கோவில் விசிட்னு எல்லா இடத்துக்கும் செம ஃபிட்.

  • விலையும் ரொம்ப ஜாஸ்தி இல்ல, 2000-5000 ரூபாய் ரேஞ்ச்ல கிடைக்கும்

உப்பாடா பட்டு சேலை

ஆந்திராவோட உப்பாடா பட்டு சேலை ரொம்ப மென்மையானவை. இவை ஜாம்தானி வேலைப்பாடு இருக்கற லைட் வெயிட் சேலைகள்.

பிளஸ் பாயிண்ட்

குப்பாடம் சேலை

ஆந்திராவோட இன்னொரு ஸ்பெஷல், குப்பாடம் சேலை. இவை லைட் வெயிட் பட்டு சேலைகள், சிம்பிள் ஜரி பார்டர் இருக்கும்.

பிளஸ் பாயிண்ட்

  • ரொம்ப அஃபோர்டபிள், 3000-6000 ரூபாய் ரேஞ்ச்.

  • பராமரிக்க ஈசி, கைல துவைக்கலாம்.

  • ஆபிஸ் மீட்டிங், குடும்ப விசிட்னு எல்லாத்துக்கும் செம்மையா இருக்கும்.

மைசூர் சில்க் சேலை

கர்நாடகாவோட மைசூர் சில்க், சிம்பிளான எலிகன்ஸ்க்கு பெயர் போனது. இவை ப்யூர் சில்க், ஆனா லைட் வெயிட் வகைகள் டெய்லி யூஸ்க்கு கிடைக்கும்.

பிளஸ் பாயிண்ட்

  • மென்மையான டெக்ஸ்சர், உடுத்தறதுக்கு சௌகரியம்.

  • ஜரி வேலைப்பாடு கம்மியா இருக்கற வகைகள் ஆபிஸ் லுக்குக்கு செம.

  • நிறங்கள் நிறைய கிடைக்கும், எல்லா வயசுக்கும் ஏத்தது.

சென்னை சில்க் (Soft Silk)

இது தமிழ்நாட்டு ஸ்பெஷல், காஞ்சிபுரம் சேலை மாதிரி கனமில்லாம, மென்மையான பட்டு சேலைகள்.

பிளஸ் பாயிண்ட்

  • லைட் வெயிட், உடுத்தறதுக்கு சுலபம்.

  • பளபளப்பு கம்மி, ஆனா எலிகன்ட்டா இருக்கும்.

பட்டு சேலை ஒரு துணி மட்டுமில்ல அது நம்ம கலாச்சாரத்தோட ஒரு கதை, பாரம்பரியத்தோட ஒரு பயணம். இத நீண்ட நாள் பத்திரமா வச்சு உபயோகிக்கறதுக்கு கொஞ்சம் கவனமும், அன்பும் போதும். அதே மாதிரி, இப்போ இருக்கற லைட் வெயிட் பட்டு சேலைகள், நம்ம டெய்லி வாழ்க்கையிலயும் இடம் பிடிச்சுட்டு இருக்கு. சிக்கோ, உப்பாடா, குப்பாடம், மைசூர் சில்க் – இவையெல்லாம் நம்ம அலமாரியில இருந்தா, ஒவ்வொரு நாளும் ஒரு புது கதைய சொல்லலாம்.

எங்க வீட்ல அம்மா சொல்வாங்க, “சேலை உடுத்தறப்போ, உன்னோட தன்னம்பிக்கை அதிகமாகும்” இந்த பட்டு சேலைகள உடுத்தி, நம்ம பாரம்பரியத்தையும், அழகையும் உலகத்துக்கு காட்டுவோம். என்ன, ஒரு புது பட்டு சேலை வாங்கப் போறீங்களா?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com