
சிறகடித்து பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளைக் கண்டதும், ஒருவித புத்துணர்ச்சி நம்மை பற்றிக் கொள்வதை யாராலும் மறுக்க முடியாது. பெயருக்கு ஏற்றாற்போல், இந்த வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகளில்தான் எத்தனை வண்ணங்கள், எத்தனை வடிவங்கள்.
மனிதர்களின் கை ரேகையைப் போல, ஒரு வண்ணத்துப் பூச்சிக்கு உள்ள வண்ணங்களோ, வடிவங்களோ மற்றொரு வண்ணத்துப்பூச்சிக்கு இருப்பதில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு. இதனால்தான் வண்ணத்துப் பூச்சிகளை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், புதிதாய் பார்ப்பது போன்ற ஒரு மகிழ்ச்சியைத் தருகிறது.
பல நூறு வண்ணங்களுடன், கண்ணைக் கவரும் வகையில் அமைந்துள்ள இந்த வண்ணத்துப் பூச்சிகள், சிறுவர்கள் மட்டுமின்றி, பெரியவர்களைவும் மிகவும் அவர்ந்தவையாகும். நாடு முழுவதும் ஏறத்தாழ 17ஆயிரத்து, 500 பட்டாம்பூச்சிகள் அடையாளம் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பட்டாம்பூச்சிகள் பறவைகளைப் போல் பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள் கூட்டமாக வலசை போகும் பண்பு கொண்டவை.
மற்ற பூச்சிகளைக் காட்டிலும், வண்ணத்துப் பூச்சிகள் நம்மை ஈர்ப்பதற்கு காரணம் அவற்றின் வண்ணச் சிறகுகள்தான். தாவரங்களின் மகரந்த தேர்க்கையில் வண்ணத்துப் பூச்சிகள் மிக பெரிய பங்காற்றுகின்றன. வண்ணத்துப் பூச்சிகள் சூரிய ஒளி இருக்கும்போது சுறுசுறுப்பாக இயங்கும் பொதுவாக காலை 8 மணி முதல் 11 மணிவரை அவற்றை அதிகமாக பார்க்கலாம்.
மரம், செடிகள் நிறைந்த பகுதியில், வண்ணத்துப் பூச்சிகள் அதிகம் இருக்கும். ஆனால் தற்போது இந்த வண்ணத்துப் பூச்சிகளின் இனம் குறைந்து வருகிறது.
வண்ணத்துப் பூச்சிகளின் இனம் அழிந்து வருவதற்கான காரணங்கள் என்ன என்று தெரிந்தால் தான், அதனை மீட்டெடுக்க முடியும்.
பொதுவாக, வண்ணத்துப் பூச்சிகள் இரண்டு வகையான தாவரங்களில் வாழ்கின்றன. முதலாவது nectar Plants அதாவது வண்ணத்துப் பூச்சிகள் தங்கள் உணவுக்காக பயன்படுத்தும் தவாரங்கள். இவை தேன் சுரக்கும் பூக்களை உடயவையாக உள்ளன.
பொதுவாக சாலை ஓரங்களில் பயிரிடப்படாத பகுதிகளிலும் காணப்படும் களைச் செடிகள் ஆகும்.
காலை நேரத்தில் இந்த செடிகளில் பூக்களில் வண்ணத்துப்பூச்சிகள் வட்டமிடுவதைக் காண முடியும். இவை தங்கள் உணவுக்காக, இந்த பூக்களில் உள்ள தேவை உறிஞ்சுகின்றன. மற்றபடி வாழ்க்கை சுழற்சிக்காக இந்த தவாரங்களை பெரிதாக நாடுவதில்லை.
இந்த வகை தாவரங்களில் பூக்கள் நிறைந்த உண்ணிப் பூ, கிளுகிளுப்பை, காஸ்மோஸ், தேள் கொடுக்கு, மக்குத்திப் பூ, சிறுபூனைக்காலி, பட்டாசு செடி, எருக்ஞ்செடி போன்ற சாலையோர செடிகள் வெகுவாக இடம் பெறுகின்றன.
இரண்டாவது உணவுத் தாவரம் இது வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை சுழ்ற்சியை நிறைவு செய்ய தேவைப்படும் தாவரங்களாகும். அதாவது இவற்றில் வண்ணத்துப்பூச்சிகள் முட்டைகள் இட்டு, முட்டைகள் பெரிந்து, கம்பளிப் பூச்சிகளாக வளர்ந்து, அந்த செடிகளின் இலைகளை உண்டு, கூட்டுப் புழுக்களாக மாறி, பின் வண்ணத்துப்பூச்சிகளாக வளர்கின்றன.
இதில் அரளிச் செடி, ரத்த எருக்கு, எலுமிச்சை, கறிவேப்பிலை, கிளுகிளுப்பை, எருக்கஞ்செடி போன்ற குறிப்பிட்ட தாவரங்கள் வண்ணத்துப் பூச்சிகளுக்கு உணவுத் தாவரங்களாக உள்ளன.
இதுபோன்ற களைச் செடிகளை நாம் அழித்துவிடுவதால், வண்ணத்துப் பூச்சிகளுக்கு வாழ்விடம் மற்றும் உணவு கிடைக்காமல் அதன் இனம் அழிந்து வருகிறது.
களைச் செடிகள் அழிக்கப்படுவதால், விளை நிலங்களிலும் தோட்டங்களிலும் வசிக்க சென்றால், அங்கு ரசாயனம் கலந்து பூச்சிக் கொல்லிகளால் வண்ணத்துப் பூச்சிகளின் இனம் அழிந்து வருகறது.
பட்டாம்பூச்சிகள் பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய காரணியாக விளங்குகின்றன. எனவே பட்டாம்பூச்சியின் அழிவு பல்லுயிர் சூழலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்,
வண்ணத்துப் பூச்சிகளோடு தொடர்புடைய தவாரங்களின் அழிவு, வண்ணத்துப் பூச்சிகளின் அழிவுக்கு காரணமாகும். எனவே வண்ணத்துப் பூச்சிகளை நேசிக்கும் நாம். அவற்றின் வாழ்விடங்களான களை தாவரங்களையும் நேசித்து பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்