கார், பஸ் இல்லை.. முதன்முறை பறந்த எலெக்ட்ரிக் விமானம்! சோதனை செய்து சீனா சாதனை.. எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

தற்போது நாம் காணும் சாதாரண விமானங்களுக்கும் இதற்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. அடுத்தடுத்த சோதனை ஓட்டங்கள் தொடரும்போதே இந்த வடிவமைப்பு எந்தளவுக்குத் திறமையானது மற்றும் ஆற்றல் வாய்ந்தது என்பது முழுமையாகத் தெரியவரும்.
China Successfully Tests CE-25A 19-Seater Electric Aircraft
கார், பஸ் இல்லை.. முதன்முறை பறந்த எலெக்ட்ரிக் விமானம்! சோதனை செய்து சீனா சாதனை.. எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
Published on: 
Updated on: 
2 min read

மின் வாகன (EV) தயாரிப்பில் உலக அளவில் சக்கைபோடு போட்டு வரும் சீனா, தற்போது தன் பார்வையை ஆகாயத்தின் பக்கம் திருப்பியுள்ளது! எலக்ட்ரிக் விமானப் போக்குவரத்துத் துறையில் களமிறங்கியுள்ள சீனா, 19 பேர் பயணம் செய்யக்கூடிய பேட்டரி இயங்கு விமானத்தை வெற்றிகரமாகப் பறக்கவிட்டு சாதனை படைத்துள்ளது.

கடந்த நவம்பர் 14 அன்று, 10 டன் எடையைக் கொண்ட 'CE-25A' எலக்ட்ரிக் விமானம் தனது முதல் விமானியுடன் பறக்கும் சோதனையை (Piloted flight) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

எலக்ட்ரிக் விமானத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்நாட்டு வழித்தடங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லும் காலத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது சீனா.

'CE-25A' விமானம் வானில் பறப்பது இது முதல் முறையல்ல. கடந்த பிப்ரவரி 2, 2026 அன்று இது ஆளில்லா விமானமாக (autonomous unmanned flight) வெற்றிகரமாகப் பறந்தது. அதனைத் தொடர்ந்து 19 முறை ஆளில்லா சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போது பைலட்டுகள் மற்றும் பொறியாளர் உடன் பறப்பது மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இந்தச் சோதனையின்போது விமானம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதுடன், அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்துள்ளது. சீனத் தொலைக்காட்சி நிறுவனமான CCTV-யின் தகவல்படி, ஒட்டுமொத்தமாக 57 நிமிடங்கள் 46 விநாடிகள் நிகழ்ந்த இந்தச் சோதனையில், விமானம் 16 நிமிடங்கள் 38 விநாடிகள் வானில் பறந்து 60.4 கி.மீ தூரத்தைக் கடந்துள்ளது. இதில் இரண்டு பைலட்டுகள் மற்றும் ஒரு விமானப் பரிசோதனைப் பொறியாளர் பயணித்துள்ளனர்.

மேலும் பெரிய எலக்ட்ரிக் விமானத்தைச் சோதிக்கும் சீனா

இந்த 'CE-25A' விமானம் சுமார் 400 கி.மீ தூரம் வரை 19 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 10 டன் எடை தாங்கும் திறன் கொண்ட இதன் பறக்கும் வேகம் மணிக்கு 300 கி.மீ ஆகும். மேலும், இது 2,400 மீட்டர் உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. அதாவது, பெரிய நகரங்களுக்கு இடையேயான நீண்ட தூரப் பயணங்களுக்குப் பதிலாக, குறுகிய உள்நாட்டு பயணங்களுக்காகவே இது உருவாக்கப்பட்டு வருகிறது.


தற்போது நாம் காணும் சாதாரண விமானங்களுக்கும் இதற்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. பெட்ரோல் அல்லது ஜெட் எரிபொருளை நம்பியிருக்கும் என்ஜின்களுக்குப் பதிலாக, 'CE-25A' விமானமானது பல 'டக்டட் ஃபேன்' (Ducted fans) அமைப்புகளுடன் கூடிய எலக்ட்ரிக் ப்ராபல்ஷன் சிஸ்டத்தைப் (Electric propulsion system) பயன்படுத்துகிறது.

விமானத்தின் இறக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள இந்த விசிறிகள், பேட்டரி மூலம் இயங்கும் மின் மோட்டார்கள் மூலம் இயக்கப்படுகின்றன.

அடுத்தடுத்த சோதனை ஓட்டங்கள் தொடரும்போதே இந்த வடிவமைப்பு எந்தளவுக்குத் திறமையானது மற்றும் ஆற்றல் வாய்ந்தது என்பது முழுமையாகத் தெரியவரும்.

முன்னணி நிறுவனங்களின் கூட்டு முயற்சி

COMAC நிறுவனம் மட்டுமின்றி, சீனாவின் முன்னணி பேட்டரி தயாரிப்பு நிறுவனமான CATL, ஷாங்காய் ஜியோ டோங் பல்கலைக்கழகம் (Shanghai Jiao Tong University) மற்றும் பல nநிறுவனங்கள் இணைந்து இந்த விமானத்தை உருவாக்கி வருகின்றனர்.

விமானத் தயாரிப்பு, பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளின்நிபுணர்களை ஒருங்கிணைத்து, பெரிய அளவிலான விமானங்களை எலக்ட்ரிக் முறையில் இயக்கவும் திட்டங்களை வைத்துள்ளனர்.

China Successfully Tests CE-25A 19-Seater Electric Aircraft
மேஜிக் இல்லை; AI இல்லை 'காற்றில் பறந்த' டெஸ்லா கார்.. கற்பனையை சாத்தியப்படுத்திய ஸ்பேஸ் டெக்னாலஜி?

இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்!

இதில் ஒரு சின்ன ட்விஸ்ட் உள்ளது. பயணிகள் இதில் சீட் புக் செய்து பறக்க இன்னும் பல காலம் பிடிக்கும். சீனாவின் CCAR-25 போக்குவரத்துப் பிரிவு வான் தகுதி விதிகளின்படி (Airworthiness regulations) இந்த விமானம் உருவாக்கப்பட்டு வருகிறது. சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகமும் இதன் வகைச் சான்றிதழ் (Type certificate) விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. இது சான்றிதழ் பெறுவதற்கான முதல் படி மட்டுமே. வணிக ரீதியான பயணிகள் சேவைக்கு அனுமதி கிடைக்க இன்னும் நீண்ட காலம் எடுக்கலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.