'ஜெம்' வீரமணி வழக்கு: "பெரும் புள்ளிகள் மீது நடவடிக்கை.." - சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அண்ணாமலை வலியுறுத்தல்

வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும் எனக் கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Annamalai, Veeramani
'ஜெம்' வீரமணி வழக்கு: "பெரும் புள்ளிகள் மீது நடவடிக்கை.." - சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அண்ணாமலை வலியுறுத்தல்AI Generated
Published on
Updated on
2 min read

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய எப்ஸ்டீன் ஃபைல்ஸின் பாலியல் குற்ற வரலாற்றுக்கு சற்றும் குறையாத வகையில், தமிழகத்தில் வெடித்துள்ளது ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு.

இந்தக் கொடூர குற்றத்தின் பின்னணியில் பல முக்கியப் புள்ளிகள், பெரும் பணக்காரர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் இருக்கலாம் எனப் பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இதுவரை இந்த வழக்கில் ஜெம் வீரமணி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவருக்கு லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: 'ஜெம்' வீரமணி பாலியல் வழக்கில்.. மிக முக்கிய "ஆளுமையின்" மகனுக்கு நோட்டீஸ் - யார் இந்த "கண்ணையா"?

இந்த நிலையில், வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும் எனக் கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஊழல் துறையாக மாறிய காவல்துறை

அண்ணாமலையின் அறிக்கையில், "ஒரு காலத்தில் நம் நாட்டிலேயே சிறந்த காவல்துறையாகப் பாராட்டப்பட்ட தமிழ்நாடு காவல்துறை, கடந்த சில ஆண்டுகளில் ஊழல் நிறைந்ததாகவும், திறமையற்றதாகவும், அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும் துறையாகவும் மாறியுள்ளது. பல இளம் குழந்தைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய pedophile குற்றவாளியான GEM கிரானைட்ஸ் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையைத் தமிழ்நாடு காவல்துறை எப்படி கையாண்டது என்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்" எனக் விமர்சித்துள்ளார்.

நேர்மையான அதிகாரிகள் நினைத்தால்...

மேலும் அவர், "சிறுமி ஒருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவரையும் குற்றத்தைச் செய்தவரையும் அடையாளம் காண முடியவில்லை என்று காரணம் கூறி, தமிழ்நாடு காவல்துறை விசாரணையை முடித்து வழக்கை மூட முயன்றது. ஆனால், அந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்ததுடன், மேலதிக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.

விசாரணை மீண்டும் தொடங்கப்பட்ட பின்னர், காவல்துறை GEM கிரானைட்ஸ் வீரமணியையும், அவருடன் தொடர்புடையவர்களையும் கைது செய்ததுடன், அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த சிறுமியும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். அதைவிட முக்கியமாக, விசாரணையில் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர்களில் பலர், இந்த பாலியல் தாக்குதல் நடைபெற்ற காலத்தில் சிறார்களாக இருந்தவர்கள் என்றும் தெரிய வருகிறது. இதன் மூலம், இந்த பாலியல் அத்துமீறல்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றிருக்கக்கூடும் என்ற அதிர்ச்சியான தகவலும் வெளிப்பட்டிருக்கிறது.

நேர்மையான மற்றும் உறுதியான காவல்துறை அதிகாரிகள் ஒரு சிலர் நினைத்தால், எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த வழக்கு அமைந்துள்ளது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, தவெக அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை" எனப் பாராட்டியுள்ளார்.

அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட வேண்டும்!

தொடர்ந்து அந்த அறிக்கையில், "நேற்று, GEM கிரானைட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரை, GEM வீரமணி தொடர்பான ஆபாச வீடியோவைத் தன்னிடம் வைத்திருந்ததாகக் கூறி தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது. இந்த விசாரணையானது, வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுடன் முடிவடைந்து விடக்கூடாது. கடந்த பல ஆண்டுகளாக அவரைப் பாதுகாக்கவும், அவருக்கு ஆதரவாகச் செயல்படவும் உதவிய ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும், இதில் தொடர்புடைய ஒவ்வொரு அரசியல்வாதியும், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்ய முயற்சித்த ஒவ்வொரு நபரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும்.

இந்த வழக்கில் மிகப்பெரிய அளவில் பணம் கைமாறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தனை ஆண்டுகளாக இந்தக் குற்றச் செயல்கள் தொடர அனுமதித்த அத்தனை நபர்களையும் வெளிக்கொண்டு வருவதற்காக, உடனடியாக ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட வேண்டும்.

மேலும், தமிழ்நாடு காவல்துறை கடந்த காலத்தில் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதும் மிகவும் முக்கியம். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களின், குறிப்பாக சிறார்களாக இருந்தவர்களின், அடையாளங்களும் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் எந்த நிலையிலும் சமரசம் செய்யப்படக் கூடாது" எனக் கூறியுள்ளார்.

Annamalai, Veeramani
ஜெம் வீரமணி POCSO வழக்கில்.. ‘Final Report’-ஐ ஏற்க மறுத்து கடைசி வரை உறுதியாக நின்ற நீதிபதி பத்மா - சல்யூட்!
Annamalai, Veeramani
ஜெம் வீரமணி வழக்கில் 'பலே' கட்டப்பஞ்சாயத்து.. 12 கோடி வேணும் என அடம்பிடித்த சாந்தி? யார் அந்த "காங்கிரஸ் மாவட்ட தலைவர்"?
Annamalai, Veeramani
'ஜெம்' வீரமணி பாலியல் வழக்கில்.. மிக முக்கிய "ஆளுமையின்" மகனுக்கு நோட்டீஸ் - யார் இந்த "கண்ணையா"?
Annamalai, Veeramani
"எனக்கு அந்த படம் எடுக்கும் போதே தெரிஞ்சிடுச்சு.. ரிலீஸ் அன்று காட்சிகளை நீக்க வச்சாங்க" - ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் புதிய திருப்பம்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com