
சமூக வலைத்தளங்கள் அனைத்தும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதிலும், அவர்களின் தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், வாட்ஸ்அப் iOS பயனர்களுக்கான பீட்டா பதிப்பில் (WhatsApp Beta for iOS) ஒரு புதிய அம்சத்தைச் சோதனை செய்துவருகிறது. இந்த அம்சம், பயனர்கள் தங்கள் 'ஸ்டேட்டஸ்' Updates-களை, இன்ஸ்டாகிராமில் உள்ள 'Close Friends' பட்டியலைப் போல, ஒரு குறிப்பிட்ட குழுவினருடன் மட்டும் பகிர்ந்துகொள்ள உதவுகிறது.
இந்த அம்சம் எப்படிச் செயல்படும்?
பயனர்கள் தங்கள் privacy settings-ல் சென்று, 'Close Friends' என்ற பெயரில் ஒரு பட்டியலை உருவாக்க வேண்டும். இந்தப் பட்டியலில், தங்கள் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் அல்லது நம்பகமான நபர்களை மட்டும் சேர்க்கலாம்.
'Close Friends' பட்டியலில் உள்ளவர்களுடன் பகிரப்படும் ஸ்டேட்டஸ் Updates, மற்ற ஸ்டேட்டஸ்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்படும். இந்த ஸ்டேட்டஸ், ஒரு தனித்துவமான நிறத்துடன் காட்டப்படும்.
சிறப்பம்சங்கள்:
இந்த 'Updates' பட்டியலில் ஒருவரைச் சேர்க்கும்போது அல்லது நீக்கும்போது, அவர்களுக்கு எந்தவிதமான அறிவிப்பும் செல்லாது. இது, பயனர்களின் தனியுரிமையை மேலும் பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாகும். மேலும், ஒரு ஸ்டேட்டஸைப் பதிவிட்ட பிறகு, நீங்கள் 'Close Friends' பட்டியலில் மாற்றங்களைச் செய்தால், ஏற்கனவே பதிவிட்ட ஸ்டேட்டஸ் புதுப்பிக்கப்படாது. புதிய ஸ்டேட்டஸைப் பதிவிட்டால் மட்டுமே அந்தப் புதிய பட்டியல் செயல்படும்.
இந்த 'Close Friends' அம்சத்துடன், வாட்ஸ்அப் iOS பயனர்களுக்காக மற்றொரு புதிய அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. iOS-இன் ஷேர் ஷீட்டில் (share sheet), 'My Status' என்ற ஒரு புதிய ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மற்ற ஆப்ஸ்களில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நேரடியாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பகிர்வது இன்னும் எளிதாகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.