
சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் படி 52 லட்சம் வாக்காளர்களை நீக்கியது. இதுகுறித்து எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், நமது மாலை முரசு செய்தி குழுவிடம், வாக்காளர்கள் நீக்கப்பட்டது பற்றியும், தேர்தல் ஆணையம் என்ன செய்திருக்க வேண்டும் என்பது பற்றியும் தமிழ்நாடு காங்கிரஸ் இளைஞர் அணி பொதுச் செயலாளர் அலிம் அல் புஹாரி Exclusive-ஆக பேசியுள்ளார்.
அதில், "வாக்காளர் சிறப்பு சீர்திருத்தப் பணிகளை 25 நாட்களில் இருந்து 30 நாட்களில் செய்து முடித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். குறிப்பிட்டுப் பார்க்கப் போனால், கிட்டத்தட்ட 7 கோடி மக்களிடம் இந்த செயல்பாட்டை நடத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது. இதில் ஒரேடியாக 60.1 லட்சம் வாக்காளர்களைத் தகுதி நீக்கம் செய்து, மிகத் திறம்பட நடந்துகொண்டதாக தேர்தல் ஆணையம் சொல்லிக் கொள்கிறது. கடந்த ஜூலை 24 அன்று வெளியிட்ட செய்தியில், 91.32% வாக்காளர்களிடம் இருந்து படிவங்களைப் பெற்று, அதில் ஓரு லட்சம் வாக்காளர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாமலும், 60.1 லட்சம் வாக்காளர்களை இறந்துவிட்ட, புலம்பெயர்ந்துவிட்ட, இரண்டு வாக்காளர் அட்டை வைத்திருக்கும் வாக்காளர்கள் எனச் சொல்லி அவர்களை நீக்கிவிட்டு, ஒரு மிகப்பெரிய நடவடிக்கை எடுத்திருப்பதாக சொல்லியிருக்கிறது.
இந்தச் செயலின் மீது மிகப்பெரிய சந்தேகப் பார்வையையும், ஆட்சேபனையையும் எங்கள் தலைவர் ராகுல் காந்தி வைத்திருக்கிறார். இது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?, இதில் எது சந்தேகத்திற்கு இடமளிக்கிறது? என்று சொன்னால், கடந்த காலங்களில் இருந்தே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. ஏன் எனச் சொன்னால், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் முறையை மாற்றியதில் இருந்து, "ஜெர்மனியில் உச்ச நீதிமன்றத்தில் தேர்தலை வாக்குச் சீட்டு வைத்து நடத்துவதா அல்லது இவிஎம் முறைப்படி நடத்துவதா என்று வழக்கு நடந்தது, அதற்கு உச்சநீதிமன்றம் , 'நீங்கள் தேர்தலைத் திறம்பட நடத்துவதைவிட வெளிப்படைத் தன்மையுடன் நடத்துவதே முக்கியம்’ என்று தீர்ப்பளித்தது. அப்போது, நாட்டின் எல்லா ஜனநாயகமும் சொல்கிறது, தேர்தலை வெளிப்படையாக நடத்த வேண்டும்.
கடந்த காலங்களில் “Form 17C” வழக்கு வந்தது. அதில், எல்லா தேர்தல் பூத்களிலும், ஒரு தேர்தல் அலுவலரிடம் கொடுத்து, Form 17C வெளியிடலாமே? இது வெளிப்படையாக இருக்குமே?, ஏனெனில் 10% வாக்குகள் வித்தியாசமாக இருக்கிறதே?, என அபிஷேக் மனுசிங் உச்சநீதிமன்றத்தில் வாதாடியபோது, 'அந்த இடத்தில் அவ்வாறு செய்ய முடியாது, எங்களிடத்தில் போதுமான ஆட்கள் இல்லை' என்று சொன்ன அதே தேர்தல் ஆணையம், தற்போது பீகாரில், '25 நாட்களுக்குள் ஏழு கோடி வாக்காளர்களைச் சென்று அடைந்திருக்கிறோம், 60 லட்சம் வாக்காளர்களைத் தகுதி நீக்கம் செய்திருக்கிறோம்' என்று சொல்லும்போது தான் சந்தேகம் ஏற்படுகிறது.
இந்தச் சந்தேகம் என்பது கணப்பொழுதில் ஏற்பட்டது இல்லை. இந்தச் சந்தேகம் எங்கு இருந்து வருகிறது என்று சொன்னால், கடந்த காலங்களில் மகாராஷ்டிரா தேர்தலில் 47 லட்சம் புதிய கூடுதல் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். இதில் வேடிக்கையான செய்தி என்னவென்றால், 2019 முதல் 2024 வரை எடுக்கப்பட்ட புதிய வாக்காளர் எண்ணிக்கை 37 லட்சம். ஆனால், தேர்தலின் போது புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 47 லட்சம். 2024 தேர்தலில் பாரத ஜனதா கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் சரியாக 47 லட்சம். ஆனால், வாக்களித்தது 37 லட்சம் மக்கள் மட்டும். இதைத் தான் முறைகேடு நடந்திருக்கிறது என நாங்கள் அச்சம் கொள்கிறோம்.
தேர்தல் ஆணையத்தை அமைப்பதில் ஒரு வகை முறைகேடு என்றால், மறுபக்கம் தங்களுக்குச் சாதகமான வாக்காளர்களைச் சேர்ப்பது, மற்றவர்களை நீக்குவது என வாக்காளர்களிலும் முறைகேடு செய்யத் தொடங்கியுள்ளது பாஜக. இதைத் தான் வன்மையாகக் கண்டித்து வருகிறது காங்கிரஸ் கட்சி. எனவே, எந்த ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழக்கிறார்களோ, அங்கு ஜனநாயகம் கேள்விக்குறியாகிறது.
இதனால் தான் எங்கள் பீகாரின் காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ண என்பவர், தேர்தல் ஆணையர் ஜானேஷ் குமாருக்கு ஒரு சவால் விட்டிருக்கிறார். அதில், 'ஒவ்வொரு தொகுதியிலும் 1000 பேரைத் தேர்ந்தெடுப்போம், அவர்களிடம் உங்கள் செயல்பாடுகளைப் பற்றிக் கேட்டறிவோம். அதில் 25% மக்களுக்கு நீங்கள் சரியாகச் செய்துள்ளீர்கள் என்பதை நிரூபித்தால், நாங்கள் எங்கள் போராட்டங்களை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம்' என அறைகூவல் விட்டிருக்கிறார். இந்த முறைகேடைப் பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த மறுக்கின்றனர். எனவே, இதனை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் போராடி வருகின்றன,” என்று அலிம் அல் புஹாரி தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.