“கள்ளகாதலுக்காக விவாகரத்தளித்த மனைவி” - மறுபிறவி கிடைத்துவிட்டது என மகிழ்ச்சியால்.. 40 லிட்டர் பாலில் குளித்த கணவன்!

மேலும் தான் குளிப்பதை வீடியோ எடுத்து பதிவிட்ட அலி அந்த வீடியோவில்
manik ali
manik ali
Published on
Updated on
2 min read

அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணிக் அலி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் மாணிக் அலியின் மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. குழந்தையையும் மாணிக் அலியையும் தனியாக விட்டு விட்டு வெளியில் வேலைக்கு செல்வதாக பொய் சொல்லி அலியின் மனைவி கள்ளக்காதலனுடன் சுற்றி திரிந்துள்ளார். அலி பக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். 

இதனை தனது சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அலியின் மனைவி அவர் வேலைக்கு சென்றவுடன் வீட்டில் கள்ளக் காதலனை அழைத்து தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதனை அறிந்த மாணிக் அலி தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அலியின் மனைவி வீட்டை விட்டு காதலனுடன் சென்றுள்ளார். இதனை அறிந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அலியின் மனைவி சமாதானம் செய்து அழைத்து வந்து மாணிக் அலியுடன் வாழ வைத்துள்ளனர்.

ஆனால் தன்னை மாற்றி கொள்ளாத அலியின் மனைவி காதலனுடன் செல்வதும் மீண்டும் உறவினர்கள் அறிவுரை படி கணவருடன் வந்து வாழ்வதும் என இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அலி சங்கடத்திற்கு உட்பட்டு மனைவியிடமிருந்து விவாகரத்து வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். அலியின் மனைவியும் விவகாரத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 

Admin

இதனால் மகிழ்ச்சியடைந்த மாணிக் அலி தனது மனவியிடமிருந்து தனக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதாக நினைத்து 40 லிட்டர் பாலில் குளித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் தான் குளிப்பதை வீடியோ எடுத்து பதிவிட்ட அலி அந்த வீடியோவில் "எனக்கும் என் மனைவிக்கும் விவாகரத்தானது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இருந்தாலும் எனது மகளை என் மனைவி அழைத்துச் சென்று விட்டார். அது மட்டும் எனக்கு கவலையை ஏற்படுத்துகிறது" என்று கூறியுள்ளார்.

இதை கொண்டாடும் விதமாகத்தான் கேமராவை ஆன் செய்து பாலில் குளித்ததாக கூறிய மாணிக் அலி, இப்போது மறுபிறவி எடுத்தது போல தான் உணர்வதாக உணர்ச்சி பொங்க கூறியுள்ளர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனதை அடுத்து பலரும் மாணிக் அலிக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com