

இன்ஸ்டாகிராமில் தொடங்கிய 80ஸ் ட்ரெண்டிங் AI போட்டோக்கள், தற்போது X தளத்தில் அரசியல் மோதல் வரை வந்துள்ளது. முதலில், இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் தங்களது போட்டோக்களை AI மூலம் 80ஸ் காலகட்டத்திற்கு மாற்றி, அதனை போஸ்ட் செய்து ட்ரெண்டிங் ஆக்கினர். அதைத் தொடர்ந்து நடிகர், நடிகைகளும் தங்களது போட்டோக்களை AI மூலம் 80ஸ் லுக்கிற்கு மாற்றி, இன்ஸ்டா ட்ரெண்டிங்கில் இணைந்தனர். குறிப்பாக நடிகர்கள், அரசியல்வாதிகள், சமூக ஊடக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது புதிய படங்களை AI மூலமாக 1980-களின் லுக்கில் உருவாக்கி, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது இந்த ட்ரெண்ட் X தளத்தில் அரசியல் மோதலாக மாறியுள்ளது. தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இந்த ட்ரெண்டிங்கை பயன்படுத்தி, அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை உருவாக்கி, சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக கேரளா மாநில பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் மாறி மாறி சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளன.
அதில் காங்கிரஸ் தரப்பில், உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை சித்தறிது பதிவிடபட்டுள்ளது. தெலுங்கு திரைப்படத் துறையில் பிரபல நடிகரும் இயக்குநருமான ராமிரெட்டி, தமிழில் வெளியான அம்மன் படத்தின் ‘ஜன்டா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் நன்கு அறியப்பட்டவர். குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு பரிச்சயமான ஒரு சினிமா வில்லன் ஆவார். அவர் பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா போல் இருப்பதாக பலரும் ஒப்பிட்டு வருவார்கள். இந்நிலையில், அவரது புகைப்படத்தை காரில் இருப்பது போல் 80ஸ் ட்ரெண்டில் உருவாக்கி, “80ஸ் களில் குஜராத் தெரு” என்ற வசனத்துடன் X வலைத்தளப் பக்கத்தில் கேரளா காங்கிரஸ் பதிவிட்டுள்ளது.
ஒருபுறம், பாஜகவின் X பக்கத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் தாயாரான சோனியா காந்தியின் புகைப்படத்தை 80ஸ் லுக்கில், ஒரு மதுபான பாரில் இருப்பது போல் சித்தரித்து, “1960-களில் ஒரு அரசியல் கட்சியின் தலைமை அலுவலகம்” என்று பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் பாஜகவின் மாநிலச் செயலாளராக இருந்த டாக்டர் SG சூர்யாவும், இதேபோல் ஒரு புகைப்படத்தை உருவாக்கி, “80களில் இத்தாலியன் பார்” என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சோனியா காந்தி பூர்வீகமாக இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.