
காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் அதற்கான இழப்புகளும் நாம் சந்திக்க வேண்டியது உள்ளது. "டெத் நோட்" என்ற வெப் சீரிஸ் 14 வயதான சிறுவனின் உயிரை குடித்ததாக கூறப்படும் சம்பவம் தான் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரின் சி.கே.அச்சுகட்டுவில் வசிக்கும் கணேஷ் பிரசாத், சவிதா தம்பதியின் இரண்டாவது மகன் காந்தர். இவர் அங்குள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். கணேஷ் பிரசாத் இசை கலைஞராகவும், அவரது மனைவி கிராமிய பாடகியாகவும் இருப்பதால் மகனுடன் அதிக நேரம் பெற்றோர் செலவிட முடியாமல் இருந்துள்ளது.
இந்த நிலையில் தான் காந்தர். “டெத் நோட்” என்ற வெப் சீரியஸிற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. கடந்த 4 ஆம் தேதி தனது அறையில் காந்தர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டதில் மாணவனின் இந்த விபரீத முடிவுக்கு காரணமான “டெத் நோட்” என்ற ஓபாவால் என்பவரால் எழுதப்பட்டு தகேஷி ஒபாடாவால் என்பவரால் விளக்கப்பட்ட ஒரு ஜப்பானிய வெப் தொடர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த “டெத் நோட்” என்பது முதன்முதலில் 2003 இல் ஜப்பானில் ஒரு காமிக் புத்தகமாக வெளியிடப்பட்டது. பின்னர் 2006 இல் ஒரு அனிமேஷன் தொடராக மாற்றியமைக்கப்பட்டது. அப்போதிருந்து, இது ஒரு பெரிய உலகளாவிய ரசிகரைப் பெற்றுள்ளது. அனிமேஷன் தொடர் பல ஸ்ட்ரீமிங் தளங்களில் கிடைக்கிறது, மேலும் ஜப்பானில் நேரடி-ஆக்சன் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களாகவும், ஹாலிவுட் ரீமேக்காகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்த வெப் தொடர் “பள்ளி மாணவன் ஒருவருக்கு நரகத்தின் புத்தகம் கிடைக்கவே, அதன் மூலம் அவன் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்ற சூப்பர் பவரை பெறுவதே” கதை. இந்த கதையை தொடர்ந்து பார்த்து வந்த காந்தார் அந்த தொடரில் வரும் கதாபாத்திரத்தின் மீது ஈர்ப்பு கொண்டு அவரது அறையில் அந்த கதாபாத்திரங்களின் ஓவியங்களை வரைந்து வைத்துள்ளார்.
மேலும் அவர் தனது தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில் “நான் இறந்துவிட்டேன் என யாரும் அழ வேண்டாம். உங்களுடன் இருந்த 14 ஆண்டுகளும் சந்தோஷமாக கழிந்தது, இப்போது நான் உங்களை விட்டு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது, நீங்கள் இந்த கடிதத்தை படிக்கும் போது நான் சொர்க்கத்தில் இருப்பேன்” என எழுதி வைத்துள்ளார். ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.