'பாலியல் அத்துமீறலுக்கு பரிசா?' ACP விவேக்குக்கு புரோமோஷன்.. எதிர்ப்புக்கு பிறகு யூ-டர்ன்! என்ன நடந்தது?

பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிரான காவல்துறையினரின் பாலியல் குற்றங்கள் குறித்து FIR பதிவு செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற வீதியில் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Delhi ACP Vivek Bhohat promotion issue
'பாலியல் அத்துமீறலுக்கு பரிசா?' ACP விவேக்குக்கு புரோமோஷன்.. எதிர்ப்புக்கு பிறகு யூ-டர்ன்! என்ன நடந்தது?
Published on: 
Updated on: 
2 min read

ஜந்தர் மந்தரில் நடைபெற்றுவரும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தின்போது, பெண் பத்திரிகையாளரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட டெல்லி காவல் உதவி ஆணையர் விவேக் பகத், நேற்றைய தினம் கூடுதல் டிசிபியாகப் பதவி உயர்வு பெற்றார்.

டெல்லி பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, ACP விவேக் தானாக முன்வந்து மறுத்ததான் அடிப்படையில் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது விசாரணை நிலுவையில் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

போராட்டத்தின் பின்னணி என்ன?

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராகச் செயல்பட்ட ஞானேஷ் குமார், பிற ஆணையர்களின் கருத்துக்கு செவி சாய்க்காமல், சுயமாக முடிவுகளை எடுத்து SIR திருத்தங்களை மேற்கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். குறிப்பாக, படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் சட்டவிரோதமானவை என ஆணையர்கள் எச்சரித்தும், அதை நிறைவேற்றியது நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், SIR திருத்தங்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட தேர்தல்கள் சட்டவிரோதமானவை என எதிர்க்கட்சிகளும் அரசியல் அமைப்புகளும் குற்றம்சாட்டியுள்ளன.

இதற்கிடையில், கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, கரப்பான்பூச்சி மக்கள் கட்சி மற்றும் பிற அரசியல் இயக்கங்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் இணைந்து போராட்டத்தைத் தொடங்கினர். மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கிலும், டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரிலும் பிரதானமாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர்கள்

அக்டோபர் 3-ஆம் தேதி போராட்டத்தின்போது, டெல்லி காவலர்களால் 3 பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுகுறித்து 4-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்ட டெல்லி காவல்துறை, பெண் பத்திரிகையாளர்களின் புகார் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறியது.

ACP விவேக் பகத் மீதான குற்றச்சாட்டு குறித்து, "காவல்துறையினர் போராட்டக்காரர்களைக் கைது செய்துகொண்டிருந்தனர். மேலும், அந்த இடத்தில் பெண் காவலர்கள் யாரும் இல்லை. பெண் காவலர்கள் வராதது குறித்து டெல்லி காவல்துறையின் உதவி ஆணையர் விவேக் பகத்திடம் நான் கேட்டபோது, அவர் என்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திப் பின்னுக்குத் தள்ளினார்" என்று பெண் பத்திரிகையாளர் குற்றம்சாட்டியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிரான காவல்துறையினரின் பாலியல் குற்றங்கள் குறித்து FIR பதிவு செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற வீதியில் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

விவேக் பகத்துடன் சேர்த்து மேலும் 11 காவலர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது நீண்ட நாட்களுக்கு முன்பே அனுப்பப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் வழக்கமான முறையில் வழங்கப்பட்டதாகக் காவல்துறையினர் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர். எனினும் எதிர்ப்புகள் வலுவாக இருந்ததால் அவரது பதவி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு குறித்து, "பாலியல் அத்துமீறலுக்கு பரிசா?" எனக் கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே கேள்வி எழுப்பியிருந்தார்.

Delhi ACP Vivek Bhohat promotion issue
"அந்த அதிகாரி தவறான முறையில் நடந்து கொண்டார்" பெண் செய்தியாளரிடம் அத்துமீறிய ACP... FIR கூட போடவில்லை! காவலர்களால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!
Delhi ACP Vivek Bhohat promotion issue
டெல்லி போலீசை கதி கலங்க செய்த பெண்! 'இவர்தான் சிறந்த ஜென்Z தலைவர்’ - தீப்கே சொன்ன போராளி… யார் இந்த நேகா போரா?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com