இந்தியர்களின் மின்னஞ்சல்கள் “ஸ்பாம்” மாதிரி.. சர்ச்சை கிளப்பிய நியூசிலாந்து அமைச்சரின் பேச்சு! அடி மேல் விழும் அடி!

“இந்த மாதிரி கருத்துகள், ஒரு முழு சமூகத்துக்கு எதிரான எதிர்மறை பிம்பத்தை உருவாக்குது.
இந்தியர்களின் மின்னஞ்சல்கள் “ஸ்பாம்” மாதிரி.. சர்ச்சை கிளப்பிய நியூசிலாந்து அமைச்சரின் பேச்சு! அடி மேல் விழும் அடி!
Published on
Updated on
2 min read

நியூசிலாந்து குடியேற்ற அமைச்சர் எரிகா ஸ்டான்ஃபோர்டு, இந்தியர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களை “ஸ்பாம்” மாதிரி என்று கூறிய பேச்சு, உலகளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கு.

மே 6, 2025 அன்று, நியூசிலாந்து நாடாளுமன்றத்தில், லேபர் கட்சி எம்.பி. விலோ-ஜீன் பிரைம், எரிகா ஸ்டான்ஃபோர்டிடம், அரசு பணிகளுக்கு தனிப்பட்ட ஜிமெயில் கணக்கை பயன்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பினார். இது, அரசு ஆவணங்களை பதிவு செய்ய வேண்டிய Official Information Act-ஐ மீறுவதாக இருக்குமா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த எரிகா, “நான் Official Information Act-ஐ பின்பற்றியிருக்கேன். தேவையான எல்லா மின்னஞ்சல்களையும் என் நாடாளுமன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியிருக்கேன். ஆனா, நிறைய தேவையில்லாத மின்னஞ்சல்கள் வருது, உதாரணமா, இந்தியாவில் இருந்து குடியேற்ற ஆலோசனை கேட்டு வரும் மின்னஞ்சல்கள். இவைகளுக்கு நான் பதில் அளிக்கறதில்லை. இவைகளை ஏறக்குறைய ஸ்பாம் மாதிரி கருதறேன்.” என்றார்.

இந்த கருத்து, இந்தியர்களை குறிப்பிட்டு பேசியதால், உடனடியாக சர்ச்சையை கிளப்பியது. இந்திய வம்சாவளி லேபர் எம்.பி. பிரியங்கா ராதாகிருஷ்ணன், இந்த கருத்தை கடுமையாக விமர்சித்தார். “இந்த மாதிரி கருத்துகள், ஒரு முழு சமூகத்துக்கு எதிரான எதிர்மறை பிம்பத்தை உருவாக்குது. ஒரு அமைச்சர் ஒரு குறிப்பிட்ட இனத்தை குறிப்பிடுவது ஏற்கத்தக்கதல்ல, குறிப்பா இந்தியாவுடனான நியூசிலாந்தின் முக்கிய உறவை கருத்தில் கொண்டால், இது ஏற்கத்தக்கதல்ல” என்று பிரியங்கா கூறினார்.

சர்ச்சை வெடித்த பிறகு, எரிகா தன்னோட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக தெளிவுபடுத்தினார். “நான் இந்தியர்களின் மின்னஞ்சல்களை ஸ்பாம் என்று சொல்லவில்லை. ‘ஏறக்குறைய ஸ்பாம் மாதிரி’ என்று மட்டுமே சொன்னேன். என் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்குக்கு வரும் தேவையில்லாத மின்னஞ்சல்களின் அளவு மற்றும் தன்மையை பற்றி பேசினேன், குறிப்பாக இந்தியர்களை குறிவைத்து சொல்லவில்லை,” என்று அவர் விளக்கினார். மேலும், இந்த மின்னஞ்சல்கள் அரசு பணிகளுக்கு தொடர்பில்லாதவை, மற்றும் குடியேற்ற ஆலோசனை வழங்குவது தன்னோட பொறுப்பு இல்லை என்று கூறினார்.

ஆனாலும், இந்த தெளிவுபடுத்தல் சர்ச்சையை முழுமையாக தணிக்கவில்லை. நியூசிலாந்தின் இந்திய சமூகத்தினர் மற்றும் குடியேற்ற ஆதரவு அமைப்புகள், இந்த கருத்து இந்தியர்களை குறைத்து மதிப்பிடுவதாகவும், ஒரு முக்கியமான குடியேற்ற சமூகத்துக்கு எதிரான பாகுபாட்டு மனோபாவத்தை பிரதிபலிப்பதாகவும் விமர்சித்தனர்.

பின்னணி: தனிப்பட்ட மின்னஞ்சல் பயன்பாடு

இந்த சர்ச்சை, எரிகா தன்னோட தனிப்பட்ட ஜிமெயில் கணக்கை அரசு பணிகளுக்கு, குறிப்பாக முன்-பட்ஜெட் அறிவிப்புகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தியது தொடர்பாக எழுந்த கேள்விகளில் இருந்து தொடங்கியது. நியூசிலாந்து அரசின் Cabinet Manual, அமைச்சர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்குகளை அரசு பணிகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறுது. ஆனா, எரிகா, பிரிண்டிங் பிரச்சனைகள் காரணமாக இந்த முறையை பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டார். இதற்கு, பிரதமர் கிறிஸ்டோஃபர் லக்ஸன் “மிகவும் நிம்மதியாக இருக்கிறேன்” என்று கூறி ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், லேபர் கட்சியின் தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ், இதற்கு “இதில் எந்த நியாயமும் இல்லை” என்று விமர்சித்தார், ஏன்னா நாடாளுமன்ற தொழில்நுட்பம் சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் மேம்பட்டிருக்கு. இந்த பின்னணியில், எரிகாவின் இந்தியர்கள் குறித்த கருத்து, ஏற்கனவே இருந்த சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியது.

இந்திய-நியூசிலாந்து உறவுகள்: ஒரு முக்கியமான பின்னணி

இந்த சர்ச்சை, இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான உறவுகளுக்கு ஒரு முக்கியமான சூழலில் வந்திருக்கு. 2025 மார்ச் மாதம், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோஃபர் லக்ஸன் இந்தியாவுக்கு வந்த போது, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இரு நாடுகளும் வர்த்தகம், பாதுகாப்பு, மற்றும் கல்வி துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேசினாங்க. 2025 இறுதிக்குள் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முயற்சியில் இரு நாடுகளும் இருக்கின்றன.

நியூசிலாந்தில் இந்தியர்கள் மூன்றாவது பெரிய இனக்குழுவாக உயர்ந்திருக்காங்க, நியூசிலாந்து ஐரோப்பியர்கள் மற்றும் மவோரி இனத்துக்கு அடுத்தபடியாக. இந்திய சமூகம், நியூசிலாந்தின் பொருளாதாரம், கலாச்சாரம், மற்றும் கல்வி துறைகளில் முக்கிய பங்களிப்பு செய்யுது. இந்த சூழலில், எரிகாவின் கருத்து, இந்த உறவுகளுக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுது. பிரியங்கா ராதாகிருஷ்ணன், “நியூசிலாந்து அரசு இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதாக பேசும்போது, இந்த மாதிரி கருத்துகள் மக்கள் இடையேயான தொடர்புகளை பாதிக்குது,” என்று கூறினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com