
கடந்த 21 ஆம் தேதி அகமதாபாத்திலிருந்து லண்டன் சென்ற Boeing 787-8 ‘Take Off” ஆன சில நிமிடங்களில் வெடித்து சிதறி பெரும் விபத்தை ஏற்படுத்தியது. இந்த கோர விபத்தில் சிக்கி 270 -க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்த விமானத்தில் கோமி வியாஸ் என்ற மருத்துவர் லண்டனில் குடும்பத்தோடு செட்டில் ஆக நினைத்துள்ளார். ஆகவே தனது 3 குழநதியாகில் கணவரோடு இந்த விமானத்தில் செல்லும்போது இந்த கோர விபத்தில் அவர்களின் குடும்பமே அழிந்து விட்டது.
இந்நிலையில் மருத்துவர் கோமி வியாஸின் உறவினரான குல்தீப் பாட் என்பவர் சமூக வலைதள இன்ஃப்ளுயன்சர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். “இந்த மோசமான விபத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரும் மிகுந்த மன வழியில் இருக்கின்றனர்..
இது எங்களுக்கு மிகவும் துக்கமான காலம். இதுபோன்றோரு நிலையில் சமூக வலைதள இன்ஃப்ளுயன்சர்கள் தங்கள் சுய லாபத்துக்காக லைக்ஸ், வியூஸ் மற்றும் ஃபாலோயர்களை அதிகரிக்க செய்யும் வகையில் விபத்து சார்ந்த படங்கள், வீடியோக்களை பயன்படுத்துகின்றனர். சிலர் அதை மாற்றி அமைத்தும் மார்பிங் செய்தும் தங்கள் சமூக வலைதளத்தில் பகிர்கின்றனர்.
இந்தியாவில் இருந்து லண்டனுக்கு செல்வதற்கு முன்பாக கோமி தனது கணவர், பிள்ளைகளுடன் எடுத்த செல்ஃபி படத்தை எங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவர் குரூப்பில் பகிர்ந்திருந்தார். அந்த படத்தை கொண்டு இப்போது ஏஐ மூலம் வீடியோ ஜெனரேட் செய்கிறார்கள்.
நான் சமூக வலைதள இன்ஃப்ளுயன்சர்களுக்கு வைப்பது ஒரே ஒரு வேண்டுகோள்தான். தயவுசெய்து இந்த போக்கை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களது பக்கத்தில் லைக்குகள், ஃபாலோயர்ஸ்களையும் அதிகரிக்க வேண்டி ஏன் எங்களுக்கு இவ்வளவு வேதனையை கொடுக்கிறீர்கள்? தேசமே இந்த விபத்தால் கலங்கி நிற்கிறது. இந்த சூழலில் இன்ஃப்ளுயன்சர்கள், கன்டென்ட் கிரியேட்டர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். அதை கருத்தில் கொள்ளுங்கள்” என குல்தீப் பாட் கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.