

மத்திய அரசின் ரத்ததான வழிகாட்டுதல்கள் பல பாதுகாப்பு அளவுகளை உள்ளடக்கியுள்ளது. தற்போது அதில் ஆண்களுடன் உறவு கொள்ளும் ஆண்கள், திருநங்கைகள், பாலியல் தொழிலாளிகள் போன்றோர் ரத்த தானம் செய்ய கூடாது என உச்ச நீதிமன்றத்திற்கு வந்த விசாரணை, பாலியல் சார்ந்த நோய்கள் பரவும் என அஞ்சப்படும் குழுக்கள் ரத்த தானம் செய்யக்கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பலரும் உயிரினை காப்பாற்ற இரத்ததானம் வழங்கி வருகின்றனர். இதனை ஊக்குவிக்க மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் பல முன்னெடுப்புகள் மற்றும் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த இரத்ததானம் யாரெல்லாம் வழங்க கூடாது என்பது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்விடம் தேசிய இரத்த மாற்று கவுன்சில் மற்றும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட, 'இரத்த தானம்' செய்பவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மற்றும் பரிந்துரைப்பதற்கான வழிகாட்டுதல்கள், 2017'ஐ எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், திருநங்கைகள், ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண் பாலியல் தொழிலாளர்கள், மேலும், எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி அல்லது சி தொற்றுக்கள் உள்ளோர் இரத்ததானம் வாழக்கூடாது என்றும் அவர்கள் 'ஆபத்தில்' உள்ளனர் என்பதைக் காட்ட கணிசமான சான்றுகள் உள்ளன" என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி, இந்த மக்கள் எல்லாம் 'ரிஸ்க் க்ரூப்பில்' இருப்பவர்கள் என்பதாலேயே அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "பொதுசுகாதாரம் என்பது தனிநபர் உரிமைகளை விட உயர்ந்தது" என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
2020-21 ஆம் ஆண்டிற்கான சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் ஆண்டு அறிக்கையை மேற்கோள் காட்டி, "திருநங்கைகள், ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண் பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் எச்.ஐ.வி பாதிப்பு வயது வந்தோருக்கான எச்.ஐ.வி பாதிப்பை விட 6 முதல் 13 மடங்கு அதிகம்" என்று அறிக்கை கூறுவதாக மேற்கோள் காட்டினர். உலகம் முழுவதும் எச்.ஐ.வி மற்றும் பிற இரத்தமாற்றம் மூலம் பரவும் நோய்த்தொற்றுகள் அதிகமாக உள்ள மக்கள்தொகை உள்ள இடங்களை பொறுத்தவரை, இரத்த தானம் செய்பவர்களுக்கே இதே போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. தற்போது, இந்த வழிகாட்டுதல்களை நீர்த்துப்போகச் செய்தால் அது பல ஆபத்து விளைவிக்கலாம்" என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி கூறினார். இதனால், மத்திய அரசு இந்த விவகாரத்தில், இதனை தனிநபர் கண்ணோட்டத்தில் பார்க்காமல் பொது சுகாதார கண்ணோட்டத்தில் பார்ப்பதே சிறந்தது என்றும் பாதுகாப்பான ரத்தத்தைப் பெறுபவரின் உரிமையே தானம் செய்பவரின் தனிப்பட்ட உரிமையை விட மிகவும் முக்கியமானது" என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மனுதாரர், மூத்த வழக்கறிஞர் ஜெயனா கோத்தாரி, பாலின அடையாளத்தின் ரீதியிலாக அடிப்படையில் மக்களை பாகுபடுத்துவது மிகவும் தவறான ஒரு செயல் என்றும், ஒட்டுமொத்தமாக ஒரு பாலினம் அல்லது பாலினத்தின் அடிப்படையில் பாகுபடுத்தாமல், எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, மற்றும் ஹெபடைடிஸ் சி போன்ற வைரஸ்களின் மரபணுப் பொருட்களைக் கண்டறியும் 'நியூக்ளிக் ஆசிட் டெஸ்டிங்' மேற்கொள்ளலாம் என்று அவர் கூறினார். ஆபத்தானது என்பது பாதுகாப்பற்ற பாலுறவு முறையே தவிர ஒருவரது பாலியல் அடையாளம் என்பது அவரை ஆபத்தான நபராக மாற்றாது என்றும் அவர் கூறியிருந்தார்.
இருப்பினும், நீதிமன்றம் இதில் தலையிடத் தயக்கம் காட்டியது. நாட்டில் ஏழை மக்கள் பல கோடி பேர் இலவச ரத்த மாற்று வசதிகளைப் பெற அரசு மருத்துவமனைகளே சார்ந்து இருக்கிறார்கள். அவர்களால் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாது. நிலைமை இப்படி இருக்கும்போது, அவர்களுக்கு ஒரு சதவீதம் கூட நோய் ஏற்படும் ஆபத்து இருக்கக்கூடாது எனத் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கை விரிவாகப் பின்னர் விசாரிப்பதாகவும் நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.