பேருந்தில்.. மாணவியை தொட்டுத் தொட்டு பேசிய எம்.எல்.ஏ.. நகர்ந்து சென்றும் இடுப்பில் கை வைத்த கொடுமை

அந்த பெண் அசௌகரியமாக இருப்பதால் அவரிடம் இருந்து விலகிச் சென்றுகொண்டே இருக்கிறார்..
MLA Malreddy Ranga Reddy
Published on: 
Updated on: 
2 min read

ஹைதராபாத், இப்ராஹிம்பட்டினம் சட்டமன்றத்தின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மல்ரெட்டி ரங்கா. இவர் அக்டோபர் 6, செவ்வாய்க்கிழமை அன்று மாநில அரசின் 'மகாலட்சுமி இலவச பேருந்து பயணத் திட்டத்தை' ஆய்வு செய்வதற்காக தெலங்கானா அரசுப் பேருந்தில் பயணம் செய்தார். தெலங்கானாவின் ரங்க ரெட்டி மாவட்டத்தில் உள்ள இப்ராஹிம்பட்னத்திலிருந்து யம்ஜல் நோக்கிப் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது நடந்த சம்பவம் இணையத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பயணத்தின் போது பெண்கள், சிறுமிகள் மற்றும் திருநங்கைகளுக்கான மாநில அரசின் முதன்மை திட்டமான மகாலட்சுமி இலவசப் பயணத் திட்டத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாடுவது போல ஒரு வீடியோ வெளியானது.

அந்த வீடியோவில் கல்லூரி மாணவிகளிடம் பேசும்போது அவர்களை தகாத முறையில் தொட்டதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. அதில் ஒரு மாணவியிடான் பேசி கொண்டிருக்கும் போது, அருகில் இருக்கும் இன்னொரு மாணவியின் இடுப்பில் கைவைக்க முயல்கிறார். அந்த மாணவி அசௌகரியமாக உணர்கிறாள் என தெளிவாக தெரிகிறது. அந்த பெண் அசௌகரியமாக இருப்பதால் அவரிடம் இருந்து விலகிச் சென்றுகொண்டே இருக்கிறார். MLA ரெட்டி, மாணவியை மீண்டும் தொடுவதற்கு தேடிக்கொண்டே அவளின் கைகளை பிடிக்கிறார். இந்தத் திட்டம் தனக்கு ₹45,000 சேமிக்க உதவியதாக கூறிய கல்லூரி மாணவியுடன் உரையாடியபோது, ​​அந்த இளம் பெண்ணின் உடல்மொழி வெளிப்படையான சங்கடத்தை வெளிப்படுத்துகிறது. 

அந்தப் பெண் கையை விலக்க முயன்றபோதும், MLA அவளது கையைப் பிடித்திருந்ததை அந்தக் காணொளியில் வெளிப்படையாக தெரிகிறது. ஓடும் அரசுப்பேருந்தில் ஒரு கல்லூரி மாணவியை தெலங்கானா காங்கிரஸ் எம்.எல்.ஏ. மல்ரெட்டி ரங்கா ரெட்டி தகாத முறையில் தொடுவது போன்ற இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார் காங்கிரஸ் MLA. 

இந்தச் சம்பவம் பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனங்களையும் கடும் எதிர்ப்புகளையும் பெற்று வருகிறது. மேலும் பின்னணிப் பாடகி சின்மயி ஸ்ரீபாதா, தனது எக்ஸ் (X) தளத்தில், அந்த எம்.எல்.ஏ-வுக்கு “சம்மதம் என்றால் என்னவென்றே தெரியாதா? என்று கட்டமான கேள்வியை எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி, தனது ஆண் கட்சியினருக்கு பெண்களைத் தொடாமல் இருக்கப் பயிற்சி அளிக்க வேண்டும். சாதாரணப் பேச்சுக்கு அந்த மாணவியை திரும்பத் திரும்பத் தொட வேண்டிய அவசியமில்லை. அவனுக்கு எவ்வளவு வயதானாலும் சரி - அவள் சற்று சங்கடமாக உணர்கிறாள், மேலும் அந்த நபருக்கு சம்மதம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. அந்த இடுக்கமான இடத்தில் அந்த பெண் விலகிச் செல்ல முயலும்போது, மீண்டும் மீண்டும் கையை நீட்டி அவளது இடுப்பின் மேற்பகுதியைத் தடவுகிறார் அவர். அதோடு, அவளைப் பின்னால் இழுக்க உதவும் அவளது தோழியின் கையையும் பிடித்துக்கொள்கிறான். பெண்கள் எல்லாம் தெய்வங்கள் என்றெல்லாம் பேசுகிறார், ஆனால் தன் பேத்தி வயதிற்குரிய ஒரு குழந்தையைத் தொட்டுத் தடவுவது சரியா என்று கட்டமான என்றும் கொந்தளித்துள்ளார். 

மேலும் இச்சம்பவத்தை கண்டித்த, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் அரசியல்வாதியுமான ஆர்.எஸ். பிரவீன் குமார், “இந்த தவறான செயலுக்காக அந்த சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு மகளிர் பாதுகாப்புப் பிரிவை வலியுறுத்தி உள்ளார். "ஆர்.டி.சி நடத்துனரிடம் புகார் பெற்று, இந்திய தண்டனைச் சட்டதின் கீழ் வழக்குப் பதிவு செய்யுங்கள்," என்றும் குறிப்பிட்டுள்ளார். "பாஜகவும் காங்கிரஸும் பெண்களை அவமதிப்பதில் ஒன்றுக்கொன்று போட்டியிடுகின்றன” என்றும் கடுமையாக சாடியுள்ளார் பிரவீன் குமார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com