“டிரம்பை எதிர்க்க துணிவில்லாதவர் மோடி” - சிபிஐ ராஜா காட்டமான விமர்சனம்! ஈரான் போருக்கு இந்திய பிரதமர் உடந்தையா?

ரஷ்யாவிடமிருந்து வாங்க வேண்டுமா..? கூடாதா..? என்பதை ஆணையிடுகிற நிலைக்கு அமெரிக்க
modi with trump
Published on
Updated on
2 min read

பிரதமர் சொல்லும் சிக்கன நடவடிக்கைகள் எள்ளி நகையாடக்கூடிய வகையில் உள்ளன. பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு சென்று முழுமையான ஆதரவை தெரிவித்து வந்த சில நாட்களில் அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானை தாக்குகிறார்கள். எனவே ஈரான் போருக்கும் நம் பிரதமர் மோடி ஒருவகையில் உடந்தையாக இருந்திருக்கலாம் என திருவாரூரில் சிபிஐ அகில இந்திய பொதுச் செயலாளர் து.ராஜா பேட்டி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் மூன்று நாட்களாக திருவாரூரில் நடைபெற்றது. இதன் இறுதி நாளில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் து. ராஜா கூறும்போது  

கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரிய பெரிய நிறுவனங்களுக்கு சாதகமான கொள்கைகள்தான் மோடி அரசாங்கம் பின்பற்றுவதாக குற்றம் சாட்டினார். அதையடுத்து, தொழிலாளர்கள் விவசாயிகள் உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும், நலன்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் வருத்தம் தெரிவித்தார். மேலும் இந்திய பொருளாதார வீழ்ச்சி, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி இளைஞர்களின் எதிர்காலம், அவர்களின் வேலை இல்லாத திண்டாட்டம், விலைவாசி உயர்வு, டீசல், பெட்ரோல் விலையை உயர்வு குறித்து மத்திய அரசுக்கு  கண்டனத்தை தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர் “பெட்ரோல் டீசல் விலை உயர காரணம் மோடி  பின்பற்றுகிற தவறான கொள்கைகள் தான் என்றும் “மோடி அரசு நம்முடைய பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதில் தோல்வி அடைந்திருக்கிறது” என்றும் மத்திய அரசுக்கு நேரடி கண்டதை தெரிவித்தார். எரிபொருளை நாம் ரஷ்யாவிடமிருந்து வாங்க வேண்டுமா..? கூடாதா..? என்பதை ஆணையிடுகிற நிலைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் போயிருக்கிறது. டொனால்ட் ட்ரம்ப் அதை தான் செய்து கொண்டிருக்கிறார். அதனை எதிர்த்து பேசுவதற்கு துணிவில்லாத ஒரு பிரதமராக மோடி இருக்கிறார்” என்றும் பிரதமர் மோடிக்கு கேள்விகளை அடுக்கினார். “நம்முடைய நாடு பின்பற்றி வந்த வெளியுறவு கொள்கைகளை எல்லாம் இன்றைக்கு டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் சரணடைய வைத்திருக்கிறார் திரு மோடி” என்று குறிப்பிட்டார் ராஜா. மோடி அரசாங்கம் இந்த விலையேற்றத்தை திரும்ப பெற வேண்டும், மக்களுடைய வாழ்வாதாரங்களை காப்பாற்றுவதற்கான  முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மோடி வாய்ச்சவடால் விடுவதாக குற்றம் சாட்டிய அவர் "சப்கா சாத், சப்கா விகாஸ்", எல்லோருக்குமான அரசு என மோடி கூறினாலும், ஆட்சிமுறை என்பது முதலாளிகளுக்கான அரசாக இருப்பதாக வருத்தம் தெரிவித்தார். ஏனென்றால் அவர்தான் போய் இஸ்ரேலுக்கு முழுமையான ஆதரவு இந்தியா தரும் என்று பேசுகிறார்” என்றும் குறிப்பிட்டார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன், “இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் 6 பேரும் வெளியிலிருந்து தவெக அரசுக்கு ஆதரவு தரும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை  அமைசராவில் இடம்பெறும் முயற்சி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com