

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ நிலையத்தில் கார் வெடித்து 13 பேர் உயிரிழந்த நிலையில், காரின் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் கார் வெடித்த போது அதை இயக்கிய நபர் குறித்து கண்டறிந்துள்ளனர். காரை இயக்கியவர் ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் முகமது உமர் நபி.
தீவிரவாதிகள் ஆரம்பத்தில் தீபாவளி நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அது கைகூடவில்லை என்றும், கைது செய்யப்பட்ட முஸம்மில் என்பவர் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரிடம் இருந்துதான் குண்டு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட 2,900 கிலோகிராம் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. முஸாம்மிலும் டாக்டர் சயீத்தும் அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் என்று தெரிய வந்தது. டாக்டர் சயீத் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பெண்களுக்கான பிரிவை அமைக்கும் பொறுப்பைக் கொண்டிருந்ததாகவும் பின்னர் தெரியவந்தது.
கடந்த திங்கட்கிழமை மாலை நடந்த இந்த வெடிகுண்டுச் சம்பவம் குறித்த விசாரணையில், நாட்டின் தலைநகரின் மையத்தில் உள்ள பல முக்கிய இடங்கள் இந்தக் கும்பலின் இலக்காக இருந்தன என்பது அம்பலமாகியுள்ளது.
உள்ளே வந்த NIA
இது குறித்த வழக்கை NIA -விசாரித்து வருகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொடர்புடைய தீவிரவாத செயல்பாடுகள் நடக்கும்போது தேசிய பாதுகாப்பு முகமை அந்த வழக்கை கையிலெடுக்கும். மாநிலங்களின் புலனாய்வு வரம்பிற்கு அப்பாற்பட்ட குற்றங்கள் நடக்கும்போதும், தீவிரவாத சித்தாந்தங்களை பரப்பும்போதும் NIA விசாரணைக்கு வரும்.
அச்சுறுத்தலாகும் White Collar Module
இந்த சூழலில்தான் “இது ஒரு தீவிரவாத செயல்” என ஒன்றிய அரசு ANI செய்தி முகமைக்கு தகவல் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பயங்கரச் செயலைச் செய்வதற்கு, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா, ஷோபியான் மற்றும் அனந்தநாக் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சில மூளைச்சலவை செய்யப்பட்ட மருத்துவர்கள் (Radicalised Doctors) தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த மாதிரியான தீவிரவாத தாக்குதலில் கடந்த களங்களில் அதிகள் அளவில் படித்தவர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். White Collar Module என்ற இந்த சொல்லின் அர்த்தம் படித்த, கண்ணியமான வேலைகளை பார்க்க கூடியவர்களை வைத்து உருவாக்கப்படும் தீவிரவாத கட்டமைப்பு ஆகும். இந்த காரை இயக்கி வந்த உமர்நபி கூட ஒரு மருத்துவர்தான். 36 வயதான உமர் ஸ்ரீநகர் ல தன்னுடைய மருத்துவ படிப்பை முடித்த பின்னர், டெல்லிக்கு இடம்பெயர்ந்துள்ளார். டெல்லியில் உள்ள ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக இருந்து வந்துள்ளார். மேலும் அதே மருத்துவமனையை சார்ந்த மேலும் 3 பேர் தீவிரவாத நாடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம், இதற்கும் தங்கள் கல்வி நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ளது. “அவர்கள் பல்கலைக்கழகத்தில் அதிகாரப்பூர்வ நிலையில் பணியாற்றுவதைத் தவிர அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை” பல்கலைக்கழக துணை வேந்தர்கூறியுள்ளார்.
ஆனால் பல படித்த வேலையில் இருக்க கூடிய நபர்கள் தீவிரவாத அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு இம்மாதிரியான பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் மருத்துவர்கள் என்பதால், எளிதில் சந்தேகம் எழாமல் நகரின் தேசிய தலைநகரப் பகுதியான (NCR) பகுதிகளில் நடமாட முடியும் என்பதாலேயே "ஒயிட் காலர்" நபர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் புலனாய்வு அமைப்புகளிலிருந்து தப்புவதற்கு தீவிரவாத செயல்களுக்கு நுட்பமான உதவிகளை செய்வதற்கும், இவர்கள் பெருமளவு பயன்படுவர்.
நிதிர்ப்பரிமாற்றங்களை மறைத்து, மாணவர்களை மூளைச்சலவை செய்யக்கூடியவர்களும் White Collar Module -ல இருக்கவங்கதான். இவர்கள் எப்போதும் களத்தில் வேலை செய்வது இல்லை. பின்னணியில் இருந்துதான் உதவுகின்றனர். மேலும் சர்வதேச தீவிரவாத அமைப்புகளை உள்ளூர் குழுக்களோடு இணைகின்றனர். இதுபோன்ற நாசக்கார வேலையில் படித்தவர்கள் ஈடுபடுவது மிகவும் ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த White Collar Module -க்கு முக்கிய உதாரணமாக் செப்டம்பர் 11-ல் நடைபெற்ற அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தாக்குதல், இதில் முக்கிய கடத்தல்காரராக செயல்பட்ட முஹம்மது அட்டா, குழுவின் தலைவர் ஒசாமா பின்லேடன் அனைவரும் நன்கு படித்த, சமூகத்தில் நல்ல பின்னனியில் இருந்து வந்தவர்கள். மேலும், இந்தியாவில் 2005 முதல் 2008 வரை நடந்த தொடர் குண்டு வெடிப்புகளிலும் இந்த White Collar Module ஆதிக்கம் செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் புல்வாமா தாக்குதலும் படித்தவர்களால் தான் நடத்தப்பட்டது. உலகம் முழுவதிலும் White Collar Module நடத்தும் தாக்குதல் மனித குலத்திற்கு எதிரான செயல்பாடு எனவும் இவர்களின் வளர்ச்சி உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.