"பெண் குழந்தைகளுக்கு கல்வி எதற்கு?" - கல்வி அமைச்சரின் பேச்சால் கொந்தளித்த இணையம்!

“கல்வி எதற்குத் தேவை...? நம் வீடுகளின் மகள்கள்தான் நமது பலம். அவர்கள்தான் நமது செழிப்பின் அடித்தளம் - மிதிலேஷ் திவாரி
பீகார் கல்வி அமைச்சர்
பீகார் கல்வி அமைச்சர் பீகார் கல்வி அமைச்சர்
Published on: 
Updated on: 
1 min read

பீகாரில் புதிய அரசு அமைந்த பிறகு, மாநில அமைச்சரவை விரிவாக்கப்பட்டு, மிதிலேஷ் திவாரியிடம் கல்வித் துறை பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தற்போது, கல்வி அமைச்சராகப் பதவியேற்றியிருக்கும் திவாரி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தற்போது இணையத்தில் பறவை வரும் காணொளிகளில் இடம்பெற்றுள்ள அமைச்சரின் கருத்துக்கள் குறித்து காங்கிரஸும் மற்ற எதிர்கட்சிகளும் அவரைக் கடுமையாக விமர்சித்த வருகின்றன. வைரலான வீடியோக்களில் ஒன்றில், மிதிலேஷ் திவாரி கல்வி மற்றும் பெண்கள் குறித்துப் பேசுகிறார். அந்தக் காணொளியில் அவர், “கல்வி எதற்குத் தேவை...? நம் வீடுகளின் மகள்கள்தான் நமது பலம். அவர்கள்தான் நமது செழிப்பின் அடித்தளம். மோடிஜி பெண்கள் அதிகாரமளித்தலுக்காக நிற்கும்போது, ​​அந்த மகள்கள் ஏன் வீதிகளுக்கு வர வேண்டும்?” என்று கூறுகிறார். அங்கிருந்த ஒருவர் “உரிமைகளுக்காக” என்று பதிலளிக்கும்போது, ​​திவாரி, “உங்கள் உரிமைகள் எப்படியும் உங்களுக்குக் கிடைக்கும்” என்று கூறுகிறார்.

இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவி கடும் எதிர்ப்புகளைக் கிளப்பியது. மேலும் பல பயனர்கள் அமைச்சரை விமர்சித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் பி.வி.யும் இந்தக் காணொளியை X தளத்தில் பகிர்ந்து, காட்டமாக விமர்சித்துள்ளார். இதனையடுத்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) பகிர்ந்த மற்றொரு காணொளியில், மிதிலேஷ் திவாரி ஒரு கோவிலுக்குச் சென்று மதச் சடங்குகளில் பங்கேற்பது காட்டப்பட்டுள்ளது. திங்களன்று எக்ஸ் (X) தளத்தில் இந்தக் காணொளியைப் பகிர்ந்த ஆர்ஜேடி, அமைச்சரைக் கேலி செய்ததுடன், மாநில அரசின் கல்விக் கொள்கைகளையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

முன்னதாக கல்வித் துறையைக் கையாண்டபோது, ​​ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குறுகிய காலத்தில் 2.20 லட்சம் ஆசிரியர்களை நியமிப்பதை மேற்பார்வையிட்டதாக அந்தப் பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளது. வேலை கோருவதால் ஆசிரியர் ஆக விரும்புவோர் தற்போது காவல்துறை நடவடிக்கையை எதிர்கொள்வதாகவும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com