“CM சிரிப்பதை பார்க்க.. தனி Screen வேண்டும்”- சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்த MLA கல்லாணை!

"எதிரிகளின் சத்ததை MUTE இல் வைத்து CUTE ஆக ஆட்சி நடத்தும் CM அவர்களே.."
MLA கல்லாணை
Published on
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவையில் இன்று 6 துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் மதுரை வடக்கு தொகுதி தவெக MLA கல்லாணை, தனது தொகுதி சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். மேலும், முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து அவர் பேசிய விதம் சட்டப்பேரவையில் கவனம் பெற்றது.

முதல் முறை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கார் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். அதனைப் பெறப்போவதில்லை என்று திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுகவைச் சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த MLA-கள் தங்களது நிலைபாட்டை தெரிவித்தனர்.

இதற்கிடையே, மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ கல்லாணை தனது உரையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அப்போது முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பேசிய அவர், “சீரியல் பார்த்த சிங்கப் பெண்களையும் இன்று சீரியஸாக சட்டமன்றத்தைப் பார்த்து அரசியலில் பங்கெடுக்க வைத்தாரே, அதுதான் மாற்றம்” என்று குறிப்பிட்டார்.

மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ கல்லாணை பேசியதாவது "சீரியல் பார்த்த சிங்க பெண்களையும் இன்று சீரியசாக சட்டமன்றத்தை பார்த்து அரசியலில் பங்கெடுக்க வைத்தாரே அது தான் மாற்றம்". "எளியோரின் நலன்களை heart-ல், எதிரிகளின் சத்தத்தை MUTE இல் வைத்து CUTE ஆக ஆட்சி நடத்தும் CM அவர்களே" என்று குறிப்பிட்டு மதுரை தொகுதியை சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தார். மேலும் தொகுதியின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பேசிய அவர் சபாநாயகருக்கும் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் "எனது வெற்றி முன்பே நிர்ணயிக்கப்பட்டது" என்றும் "அதை தளபதி பொற்பாதங்களில் சமர்ப்பிக்க விரும்புகிறேன்" என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து முதலமைச்சர் விஜய் குறித்து பேசிய அவர், “தளபதி எங்கு சென்றாலும் ஓடோடி சென்று, சிறு வயதில் இருந்து ஓடோடி சென்று பார்த்த எங்களுக்கு, இன்று அருகிலேயே அமரும் பாக்கியம் கொடுத்துள்ளார்” என்றார். ஆனால், முதலமைச்சர் விஜய்யை சட்டப்பேரவையில் நேரில் பார்க்க முடியவில்லை என்பது தனக்கு சிறிய வருத்தமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“எதிர்க்கட்சிகள் ஏதாவது சொல்லி CM குலுங்கி குலுங்கி சிரித்தாலும், ஈவினிங் போய் TV-யில் தான் பார்க்கிறோம். அவரது அழகிய முகத்தைப் பார்ப்பதற்கு ஒரு தனி ஸ்கிரீன் ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். இது என் தனிப்பட்ட கோரிக்கை” என்று எம்எல்ஏ கல்லாணை கூறினார். முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்தும், தனது தனிப்பட்ட கோரிக்கையை நகைச்சுவையாக முன்வைத்தும் தவெக எம்எல்ஏ கல்லாணை பேசிய இந்த உரை, சட்டப்பேரவை விவாதத்தில் கவனம் பெற்றது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com