

திமுக ஐடி விங் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் மீது தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கில் செப்.15 க்குள் பதிலளிக்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுகவின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் கடந்த ஜூன் 8ம் தேதி அமைச்சர் ஆதவ் அர்ஜுனன் குறித்து சர்ச்சை கூறிய பதிவு ஒன்று வெளியானது. அது பெரிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், பலரால் பகிரப்பட்ட கருத்து செய்யப்பட்டும் வைரல் ஆனது.
அந்த பதிவில் குறிபிட்டிருந்ததுததாவது "அமலாக்க துறையின் அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பின்படி சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலில் செயல்பட்ட ஜான் பிரிட்டோ தற்போது தவெக அரசின் சிறு தொழில் முகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமாகியுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து போதைப் பொருள் கடத்தல் புகாருக்குள்ளான ஜான் பிரிட்டோவுடன் தன்னை தொடர்புபடுத்தி, நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் “இந்த ஜான் பிரிட்டோ எனக்கு உறவினர் இல்லை. மேலும் பி.ஜான் பிரிட்டோ என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்து, அமலாக்கத்துறை சொல்லும் ஜான் பிட்டோ நான் இல்லை” என்றும் கூறியுள்ளார்.
எனவே அவதூறு பதிவை வெளியிட்டதற்காக திமுக ஐடி விங் மற்றும் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் இணைந்து ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் “அந்த பதிவையும் சமூக வலைதளத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
பொது பனி துறை அமைச்சரின் வழக்கறிஞர் ஏ.பி. சூர்யபிரகாசம், அந்தப் பதிவில் குறிப்பிட்ட கருத்துக்கள் பொய்யானது மற்றும் மிகவும் அவதூறானது என்று வாதிட்டர். வாதங்களை கேட்ட பின் நீதிபதி கோவிந்தராஜன் திலகாவதி, 2026 செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி மு.க ஸ்டாலின் மற்றும் திமுக தகவல் தொலைத்தொடர்பு குழுவுக்கு அறிவிப்புகளை அனுப்ப உத்தரவிட்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.