2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்த வண்ணம் உள்ளது. வேட்பாளர்கள் பலரும் தங்களது தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கட்சி தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய் தொடர்ச்சியாக அனுமதி கிடைத்தபோதும் தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துவந்தார். இந்நிலையில், இன்று (12ம் தேதி) கன்னியாகுமரியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அங்கு தனது வாக்குறுதிகளை மக்கள் முன்னிலையில் வாசித்தார்.
தனக்காக வெயிலில் காத்திருந்த தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துவிட்டு, வாக்குறுதிகளை வாசித்தார். '2026 நல்லாட்சிக்கான தவெகவின் அஜெண்டா' என்று கூறி, லஞ்சம் இல்லாமல் அரசின் நலத்திட்டங்கள் ஒவொருவரையும் சென்று சேரும் வகையில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், ஆதார் அட்டையை போன்று 'தமிழ்நாடு குடிமகன் சலுகை அட்டை' வழங்கப்படும் என்று அறிவித்தார். அதில் ஒவ்வொரு குடும்பத்தை பற்றிய அனைத்து தரவுகளும் இருக்கும் என்று தெரிவித்தார். அரசின் நலத்திட்டங்களை பெற விண்ணப்பிக்க தேவையில்லை, லட்சம் கொடுக்க வேண்டியதில்லை. மேலும், வீட்டின் வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும் என்றும் அவர் தெரிவித்தார். AI மூலம் இதற்கான தரவுகள் சாத்தியமாக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த அறிவிப்பு "ஸ்டாலின் சார் சொல்லும் கதை மாதிரி இல்லை, அறிவியல் பூர்வாமாக சாத்தியமான ஒன்றைத்தான் கூறுகிறேன்" என்றும் மக்களை நோக்கி கூறினார். பொதுவாகவே அரசு அலுவலங்கங்களுக்கு செல்லும்போது, இது சரி இல்லை, இந்த ஆவணம் சரியில்லை என்று மக்களை அலைக்கழித்து கொண்டே இருப்பார்கள். இவைகள் இழுத்தடிக்க காரணம் ஆவணங்கள் இல்லை, லஞ்சம்தான் காரணம் என்று கூறினார். இதில் வாங்கப்பட்டும் லஞ்சம் அந்த அலுவலர் மட்டுமின்றி அந்த துறை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும் சென்று சேர்கிறது என்றும் அவர் கூறினார்.
அடுத்து, தவெக அரசு அமைந்த 6 மாதத்திற்குள் 'தமிழ்நாடு சேவை உரிமை' சட்டம் நிறைவேற்றப்படும் என்றும், 'வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப்' அறிமுகப்படுத்தப்படும். அதில் ஓட்டுநர் உரிமம், ரேஷன் அட்டை, பிறப்பு சான்றிதழ், அரசின் திட்டங்களை குறித்து அறிதல், குற்றங்களை பதிவு செய்தல் என அனைத்தும் மக்களின் உள்ளங்கையிலேயே இருப்பது போன்று அவர்களின் அலைபேசியில் ஒரு செயலியாக அமைத்து தரப்படும் என்று கூறினார். இதில் எந்த சேவை தாமதமானாலும் அந்த அதிகாரி மீதி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இடைத்தரகர், லஞ்சம் என்று எதுவும் இல்லை என்று தவெக தலைவர் விஜய் கூறினார். "தமிழக பட்ஜெட் ஆவணமாக மட்டுமே இருக்குமே தவிர்த்து அது எங்கு, யாரை சென்று சேர்க்கிறது என்று யாருக்கும் தெரியாது. மேலும் அது சிதம்பரம் ரகசியம் போன்று 'ஸ்டாலின் சார் ரகசியமாகவே இருக்கிறது' ஆனால், நாம் அதை மாற்றுவோம்" என்று விஜய் கூறினார்.
தவெக ஆட்சியமைத்தவுடன் மக்கள் வெறும் வாக்காளர்களாக மட்டும் இருக்கவேண்டிய அவசியமில்லை, அதற்கு மாறாக அவர்கள் அரசியல் பங்காளர்களாகவும் இருப்பார்கள் என்று அவர் கூறினார். மேலும், myvettritamilnadu.in என்ற பெயரில் உருவாக்கப்படும் இணையதளத்தில் மாநிலத்தின் வளர்ச்சிக்காக மக்களும் ஆலோசனை வழங்கலாம், அரசின் சேவைகளை மதிப்பிடலாம், நிதிநிலை அறிக்கை செலவினங்களை கண்காணிக்கலாம் என்று கூறினார். 'மக்கள் அரங்கம்' என்ற திட்டத்தின் மூலம் தமிழக வரலாற்றில் முதல் முறையாக குடிமக்கள் ஒரு முறையான டிஜிட்டல் தளம் மூலம் மக்கள் நேரடியாக மனுக்களை சமர்ப்பிக்க வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாகவும் அவர் கூறினார். 10,000 சரி பார்க்கப்பட்ட கையொப்பங்களுடன் ஒரு மனு சமர்பிக்கப்பட்டால் அதற்கு பதிலளிக்கவேண்டியது அரசின் கட்டாயமாக்கப்படும். 5 லட்சம் கையொப்பம் எனில் அது தமிழக சட்டமன்றத்தில் விவாதமாக்கப்படும். மேலும், சட்டமன்ற கூட்டத்தில் ஒரு நாள் மக்களின் மனுக்களுக்கென்றே ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார். தமிழ்நாடு, செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தலைநகராக மாறும். பொருளாதாரத்தில் 1.7 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் வரை இந்த செயற்கை நுண்ணறிவு சேர்க்கும் என்று அளவிடப்பட்டுள்ளது. அதை நமதாக்கும் பொருட்டு, நம் பொறியியல் திறனுடனும் , புலம்பெயர்ந்த தமிழர்களுடனும் சேர்ந்து இது நமதாகி கொள்ளப்படும். உலகளாவிய அளவில் அறியும் வண்ணம் AI Cityஐ தவெக அரசு உருவாக்கும் என்று கூறினார்.மதுரை, கோவை, திருச்சி போன்ற மாவட்டங்களில் செயற்கை நுண்ணறிவு புத்தாக்க மையங்கள் அமைக்கப்படும் இதற்கு
இந்தியாவிலேயே, முதல் முறையாக தவெக அரசு 'செயற்கை நுண்ணறிவு' அமைச்சகத்தை உருவாக்கும் என்றும் கூறினார். மாநிலத்தின் கடன் 10.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளை விட இந்த 5 ஆண்டுகளில் கடன் அதிகமாகியுள்ளது. தமிழகத்தை ஆண்ட ஒவ்வொரு கட்சியும் எங்களால் இதை சமாளிக்க முடியவில்லை என்றுதான் கூறியுள்ளது. மக்களிடம் இருந்து 1 ருபாய் கூட கூடுதலாக வரி பெறாமல் முறையாகவும் குறைவாகவும் செலவிட்டு புதிய வருவாய் உருவாக்கப்படும் என்று கூறினார்.
வாக்குறுதிகளை மக்கள் முன்னிலையில் வசித்து விட்டு அவர்களிடம் தவெகவின் விசில் சின்னத்திற்கு வகையளிக்குமாறு கேட்டுக்கொண்டார் அக்கட்சித்தலைவர் விஜய்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.