ஆதவ் அர்ஜுனா ‘Control’ -ல் விஜய்!? தவெக -வில் மீண்டும் அதிகார மோதலா? கட்சிக்குள் என்னதான் நடக்கிறது?

“அண்ணாமலையாவது 10 -பேரை வைத்துக்கொண்டு 18%, 20% வாக்கு வாங்கலாம், ஆனால் எடப்பாடியை நம்பி ..."
inner house politics in tvk
inner house politics in tvk
Published on
Updated on
2 min read

2026 -ஆவது சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே சொல்லலாம். இந்த தேர்தல் களத்தில் புது வரவு என்றால் அது ‘தமிழக வெற்றி கழகம்’ தான். விஜய்யின் அரசியல் பிரவேசம், ஆதவ் அர்ஜுனா பிரஷாந்த் கிஷோர் ஆகியோரின் பங்களிப்பு என தமிழக வெற்றி கழகம் நல்ல ஒரு பப்ளிசிட்டி யோடே களம் காண உள்ளது.

சின்ன ரீவைண்ட்..!

விஜய் அரசியலில் குதிப்பார் என்று நினைத்தது இன்று நேற்றல்ல 2013 ஆம் ஆண்டு தலைவா படம் வெளியாகி “time to lead” என கேப்ஷன் வைத்து அதற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை கடுப்பேற்றி மன்னிப்பு கேட்ட விவகாரமெல்லாம் அவரின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தின. ஆனால் அவரோ “ஓடு மீன் ஓட உறுமீன் வருமென” காத்திருந்த கொக்காய் காத்திருந்து அரசியலில் குதித்துள்ளார்.

அரசியல் எதிரியாக திமுக -வையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் முன்னிருத்தி தன் அரசியல் பயணத்தை துவங்கியுள்ளார்.

தவெக -வில் ஆதவ்..!

“எல்லாருக்குமான தலைவர்”  என்ற அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழாதான் இன்றைய அரசியல் சூழலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என அப்போது யாரும் அறிந்திருக்க நியாயமில்லை..

“திருமா கலந்துகொள்ளாத அந்த நூல் வெளியீட்டு விழாவில் விஜய்யோடு சேர்ந்து ஆதவும் திமுக -வை கிழித்து தொங்க விட்டிருந்தார். கட்சியில் பொறுப்பில் இருந்துகொண்டே கூட்டணி தர்மத்தை ஆதவ் மீறினார் என்று கூறி 6 மாதத்திற்கு விசிக -விலிருந்து விலக்கப்பட்டார். அவ்வளவுதான் இதன் வாய்ப்பு என்று விஜய்யின் தவெக -ல் சென்று சேர்ந்து கொண்டார் ஆதவ், போன உடனே “தமிழகத்தின் பிரஷாந்த் கிஷோர்” என்று அறியப்படும் ஆதவ் அர்ஜுனாவிற்கு “தேர்தல் வியூக பொதுச்செயலாளர் “ என்னும் சிறப்பு பதவி வழங்கப்பட்டது.

பிரஷாந்த் கிஷோரை கொண்டு வந்த ஆதவ் 

தமிழகத்தின் பிகே, நிஜ பிகே -வையே கொண்டு வந்து தவெக -விற்கான வியூகத்தை வகுக்க முடிவெடுத்தார். இந்நிலையில்தான் 2026 -இல் விஜயை ஆட்சி கட்டிலில் அமர வைப்பேன் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார் பி.கே ஆனால் வேறு சில காரணங்களால் பி.கே -விற்கும் ஆதாவிற்குமே  முட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.

வாய் விட்ட ஆதவ்!! 

இதற்கிடையில்தான் தவெக -வின் “தேர்தல் வியூக பொதுச்செயலாளர் ஆதவ் -ம் மாநில தலைவர் ஆனந்த் -ம் பேசும்போது “அண்ணாமலையாவது 10 -பேரை வைத்துக்கொண்டு 18% வாக்கு வாங்கலாம், ஆனால் எடப்பாடியை நம்பி எவனும் வரமாட்டான் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ஆனால் இந்த கருத்துக்கு விஜய் எந்த ‘Response’ -ஐயும் கொடுக்கவில்லை என்பதே பெரும் சர்ச்சையாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான் “புறணி பேசுவதெற்கெல்லாம் நான் கருத்து சொல்ல முடியாது, இதே ஆதவ் அர்ஜுனா தான் அதிமுக -வில் வந்து இணையுங்கள் நான் உங்களை துணை முதல்வராக்குகிறேன், என்று சொன்னார்” என சீமான் கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்ட ஆதவ்!

இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து  

எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று  பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு  தெரியும்.

என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது. 

உண்மையும், நேர்மையும் கொண்ட  ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன். தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே  நான் எடுத்துக்கொள்கிறேன். அந்தவகையில், கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே எனது இலக்கு…

அதிகார மோதலா?

ஏற்கனவே கட்சியில் பெண்களுக்கு முழுமையான அங்கீகாரம் தருவதில்லை, பாஜக-வும் தவெக -வும் ஒன்றுதான் எனக்கூறி அக்கட்சியின் உறுப்பினர் வைஷ்ணவி இங்கிருந்து கிளம்பி திமுக சென்றுவிட்டார். இது எல்லாம் விஜய் -க்கு தெரியுமா என்றுகூட தெரியவில்லை என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.

இதற்கிடையில் “தேர்வு முகவர் பட்டியலை எடுத்துக்கொண்டு ஆலோசனை கூட்டத்துக்கு வாங்கனு” ஆனந்த் ஆதவை கூப்பிட அது பெரும் Ego பிரச்சனையாக மாறி உள்ளது. கட்சி ஆரம்பிக்கும்போதே தேர்தல் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் ஆதவ் தரப்புதான் பார்ப்பார்கள் என முடிவெடுக்கப்பட்ட நிலையில், தேர்தல் முகவர் விஷயங்களில் ஆனந்த் தரப்பு தலையிட்டது பூதாகரமாக வெடித்துள்ளதாக அரசியல் வட்டங்கள் தெரிவிக்கின்றன.

இப்படிப்பட்ட  சூழலில்தான் விஜய் சிக்கி தவிப்பதாகவும், மேடையில் பேசவே ஸ்க்ரிப்ட் வைத்துக்கொண்டு பேசும் விஜய் பஞ்சாயத்து பேசி உள்கட்சி பூசலை நிவர்த்தி செய்யும் அளவுக்கு அனுபவம் இல்லாதவராக இருக்கிறார், இதனால் ஆதவ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விஜய்யை ஆட்டிப்படைகின்றனர்” என்ற கருத்தும் நிலவி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com