

2026 சட்டமன்ற தேர்தலில் 47 இடங்களை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, தேர்தலுக்கு பின் இரு பிரிவுகளாக பிரிந்தது. எஸ்.பி வேலுமணி மற்றும் சி.வி சண்முகம் ஆதரவாளர்கள் ஒரு தரப்பும், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஒரு தரப்பும் என உட்கட்சி பிளவு ஏற்பட்டது.
அதையடுத்து கட்சியின் பல்வேறு புதிய மாவட்டக் கழகச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதுடன், சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட முக்கிய அதிமுக நிர்வாகிகளின் பொறுப்புகளும் பறிக்கப்பட்டதாக அறிவிப்பும் வெளியானது. இதற்கு முக்கிய காரணமாக சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-கட்சிக்கு ஆதரவாக சி.வி. சண்முகம் தரப்பு MLA-க்கள் ஆதரவு அளித்தது தான். இதன் மூலம் 144 எனும் பெரும்பான்மை ஆதரவுடன் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைத்தது.
அதன் பின் அமைச்சரவை விரிவாக்கத்தில் சி.வி. சண்முகம் தரப்பு ஆதரவாளர்களுக்கு இடம் கொடுக்காமல் போனது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது, மேலும் கட்சியில் பதவிகளும் பறிபோயின.
மேலும் நேற்று சி.வி. சண்முகம் தரப்பு 4 MLA க்கள் எடப்பாடி பழனி சாமியை சந்தித்து பெற்று வார்த்தை நடத்தினர். நாளை 10 MLA க்கள் மீண்டும் ஈபிஎஸ் தரப்பு ஆதரவு அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகின. அதையடுத்து இன்று அதிமுக கட்சியின் X வலைதள பதிவில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயலலிதா அவர்களின் சட்டமன்ற உரையின் வீடியோ கட்சியை பதிவிட்டு கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
அதில் "எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என ஜெயலலிதா அவர்கள் கூறியதை குறிப்பிட்டு “கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த இரும்பு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது” என தெரிவித்துள்ளனர்.
மேலும் “இனி நமக்குள் பிரிவில்லை... இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை..” என்றும் “நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே” என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். “நாளை நமதே! தமிழ்நாடும் நமதே!” என தெரிவித்துள்ளது விரைவில் உட்கட்சி மோதல் சரியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.