"போர்வாள்”- அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் வெளியீடு.. உச்சம் பெறுகிறதா உட்கட்சி மோதல்?

‘நமது அம்மா’ எனும் பெயரில் செயல்பட்டு வந்த அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழின் உரிமை
Porvaal
Published on
Updated on
1 min read

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழ் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிமுக தலைவர் ஈபிஎஸ் தமையில் ‘போர்வாள்’ எனும் நாளிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன் இருந்த ‘நமது அம்மா’ எனும் பெயரில் செயல்பட்டு வந்த அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழின் உரிமை சிவி சண்முகம் இடத்தில் இருப்பதால் இந்த முடிவு என சொல்லப்படுகிறது.

அதிமுகவில் சில வாரங்களாக நிலவி வரும் உட்கட்சி மோதல் காரணமாக இந்த முடிவு என தெரிகிறது. அதிமுக தற்போது இரு தரப்புகளாக செயல்பட்டு வரும் நிலையில் சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி மற்றும் ஆதரவாளர்கள் தரப்பும், மற்றொன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தரப்பு என்று செயல்பட்டு வருகிறது. இதில் ‘நமது அம்மா’ என்ற அதிகாரபூர்வ நாளிதழ் சி.வி சண்முகம் மற்றும் எஸ்.பி வேலுமணி வசம் உள்ளதால் இந்த அதிரடி முடிவு என சொல்லப்படுகிறது. அதையடுத்து இன்று அதிமுக தலைமை ஈபிஎஸ் அவர்கள் நாளிதழின் முன்னோட்டத்தை வெளியிட்டார். மேலும் “அதிமுக தலைமைக் கழகச் செய்திகள், கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் அறிக்கைகள், கழகத்தின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் தமிழக மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளை தொகுத்து வழங்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான “போர்வாள்” தமிழ் நாளிதழின் முன்னோட்டத்தை அறிமுகம் செய்வதாக தெரிவித்தனர். இந்நிகழ்வின் போது கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் அதிமுகவின் MLA-கள் சிலர் சட்டமன்ற நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் தவெக 144 எனும் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்தது. அதையடுத்து இதில் சி.வி சண்முகம் மற்றும் எஸ்.பி வேலுமணி ஆதரவாளர்கள், அதிமுக தலைமையான எடப்பாடி பழனிசாமியிடம் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவு எடுத்ததாக செல்லபட்டது. இதனால் உட்கட்சி விரிசல் ஏற்பட்டதுடன், முன்னாள் அமைச்சர் செம்மலை அதிமுக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து அதிமுக அதிருப்தியை நோக்கியே சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது.

மேலும் “சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்கு ஈபிஎஸ் தான் காரணம்" என்றும் சி.வி சண்முகம் குற்றம் சாட்டினார். தற்போது இந்த புதிய நாளிதழ் அறிவிப்பும் கட்சியில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாகவே என தெரிகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com