“பிச்சை.. திருட்டு.. ஓட்டம்!”.. தவெக-வை ‘தற்குறிகள்’ என சாடிய அதிமுக! IT விங் இடையே மூண்ட வார்த்தை போர்!

“சோபா வந்தது முன்னே, தவெக வந்தது பின்னே” என்று படியேறி பிச்சை எடுத்து ஆட்சி அமைத்தது
TVK IT wing
Published on: 
Updated on: 
2 min read

இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக மற்றும் தவெக ஆகிய இரு அரசியல் கட்சிகளுக்கும் இடையேயான வார்த்தைப் போர் மூண்டுள்ளது. கூட்டணி, ஆட்சி அமைப்பு, எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா குதிரை பேரம், நீட் விவகாரம், சட்டம்–ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இரு கட்சியின் IT Wing -களும் ஒருவரை ஒருவர் சாடியுள்ளனர். அதிமுகவின் கடந்தகால அரசியல் முடிவுகள் மற்றும் தற்போதைய செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் தவெக IT Wing முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளிக்கும் வகையில் அதிமுக தற்போதைய ஆட்சியின் சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் முதல்வர் விஜய் குறித்து பல்வேறு விமர்சனங்களை கட்டமாக பதிவிட்டுள்ளது. 

தவெக IT Wing

“மக்களால் 12 முறையாகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படாத, தீர்ந்து போன சக்தியின் சில கொள்கைகளும் செயல்பாடுகளும்” என குறிப்பிட்டு.. பாஜகவுடன் கூட்டணி வைத்து, இனி ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சூளுரைத்ததை காற்றில் பறக்கவிட்டு, மீண்டும் அதே கூட்டணியில் இணைந்து தமிழ்நாட்டு மக்களை நம்ப வைத்து ஏமாற்றியது என அதிமுகவை சாடியுள்ளனர். மேலும் நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்து, மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடியது அதிமுக தான் என்றும் எதற்காக, யாருக்கு எதிராகக் கட்சி தொடங்கப்பட்டது என்பதையே மறந்து, தீயசக்தியுடன் கூட்டணி வைக்க முயன்று தொண்டர்களுக்குத் துரோகம் செய்தது என்றும் குற்றச்சாட்டியுள்ளனர். மேலும் அவர்களின் நேர்மையை கேள்விக்குள்ளாகி பல்வேறு முரண்பாடுகளை முன்வைத்துள்ளனர். 

அதிமுக IT Wing

அதை தொடர்ந்து அதிமுக IT Wing தவெக ஆட்சியையும், முதல்வர் விஜய்யின் நிலைப்பாடுகளையும் கேள்வி எழுப்பியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், வெறும் 107 MLA-க்களுடன், மைனாரிட்டி ஆட்சி நடத்தும் கட்சியின் கொள்கையும் செயல்பாடும் என்னவென்று பார்ப்போமா? என குறிப்பிட்டு,

பிச்சை:

தீயசக்தி தீயசக்தி என்று வாய்கிழிய பேசிவிட்டு, அந்த கட்சிக்கு அளித்த வாக்குகளால் வெற்றி பெற்ற அவர்களின் கூட்டணி கட்சிகளை, அதான்…. கல்லாப்பெட்டி கூட்டணி என்று கூறிய அதே கட்சிகளில் அலுவலகங்களுக்கு “யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்பது போல, “சோபா வந்தது முன்னே, தவெக வந்தது பின்னே” என்று படியேறி பிச்சை எடுத்து ஆட்சி அமைத்தது. சட்டமன்ற தேர்தலில் தவெக-விற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுவை கூட்டணியில் வெற்றி பெற்ற விசிக, ஐயுஎம்எல், கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

திருட்டு:

சொந்தமாக நின்று ஜெயிக்க வக்கில்லாமல், அடுத்த கட்சி MLA-க்களை “கீழே ராஜினாமா, மேலே இணைப்பு” என தலைமைச் செயலகத்தை குதிரை பேரக் கூடாரமாக மாற்றி, திருட்டுத்தனமாக ஆட்சியை காப்பாற்ற நினைப்பது. இதில் 6 அதிமுக MLA தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்தனர். இதில் குதிரைப்பேரம் நடந்ததாக அரசியல் வட்டாரங்கள் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

ஓட்டம்:

செய்தியாளர்களைக் கண்டால் ஓட்டம், சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் ஓட்டம், கரூரில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்த போது ஓடு ஓடு ஓடு ஓடு என்று ஓட்டம் பிடித்தது எல்லாம் தமிழ்நாடு மறக்குமா? தமிழினத்தை அழிக்கத் துணிந்து, ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை இலங்கையில் கொன்றுக் குவித்த வரலாற்றுத் துரோகி காங்கிரசோடு, நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப் படுத்தியதோடு, சுப்ரீம் கோர்ட் வரை அதை நிலைநாட்டி, என்று தமிழக மாணவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் முதல் காரணமான காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து நிற்கும் நீங்கள் எல்லாம், எங்கள் கூட்டணியைப் பற்றி பேச கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா என்பதை யோசியுங்கள் தற்குறிகளே!

நேருக்கு நேர் நின்று பிரச்சனைகளை சந்திக்க துணிவு இல்லாமல், 72 நாட்கள் வீட்டுக்குள் முக்காடு போட்டு ஒளிந்துகொண்ட சூரரின் சுண்டெலிகள்… மன்னிக்க என்றும் கடுமையான விமர்சனக்கலை முன்வைத்துள்ளது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com