திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
திமுகவைச் சேர்ந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டார்.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு, DTCP அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்த குற்றச்சாட்டில் திமுக நிர்வாகி பிடி அரசகுமார் உள்ளிட்ட 3 பேர் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணை மற்றும் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில், கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி அவரது வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடைபெற்றது.
இன்று முன் ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்திருந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அன்பில் மகேஷை அவரது அமைந்தகரை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைது செய்துள்ளார்.
இன்று காலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஐடி விங் பக்கம் "இனி வரும் காலம் திமுகவிற்கு திக் திக் நிமிடங்கள்!" எனப் பதிவிட்டிருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டிருப்பது இந்த கைதுக்கு பின்னால் அரசியல் தலையீடு இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்