“அமைச்சராக இருந்தபோது தனியார் பள்ளி அனுமதியில் லஞ்சம்?” – அன்பில் மகேஷ் இல்லங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை!

இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அரசகுமாரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்...
Anbil Mahesh Poyyamozhi CCB Search
Anbil Mahesh Poyyamozhi CCB Search
Published on
Updated on
1 min read

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு பள்ளிக்கல்வித் துறை பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில் தான் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் வருகின்றனர்.

அதன்படி, அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருச்சியில் உள்ள இல்லம் மற்றும் சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் மற்றும் பிற அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏற்கெனவே விசாரணை நடத்தி வரும் அதற்கு சாதகமா ஆவணங்கள் உள்ளதா என சோதனையிட்டு வருகின்றனர்.

Admin

முன்னதாக, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவர் பி.டி. அரசகுமார் மீது, தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் உள்ளிட்ட அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அரசகுமாரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லங்களில் தற்போது சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் போலீசாரின் விசாரணை விவரங்கள் வெளியாகும் பட்சத்தில், இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியவரும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com