

மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் இந்த தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
சென்னை அண்ணா நகர் தொகுதியில் இந்த முறை ஒரு 'திரில்லர்' போட்டிக்குத் தயாராகலாம் என்கிறது மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் ஆய்வு. விஐபிக்கள் நிறைந்த இந்த தொகுதியில் திமுகவும் அதிமுகவும் சமபலத்துடன் மோதுகின்றன. திமுக 109 பூத்துகளில் வலுவாக இருந்தால், அதிமுக 100 பூத்துகளில் மிக நெருக்கமாகப் பின்தொடர்கிறது. மிக முக்கியமாக, 80 பூத்துகள் 'ஸ்விங்' நிலையில் இருப்பது எந்தக் கட்சிக்கும் வெற்றியைத் தராமல் இழுபறியில் வைத்துள்ளது.
மழைநீர் வடிகால் மற்றும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைகள் 40.79% வாக்காளர்களை யோசிக்க வைத்துள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 51.73% வாக்குகளைப் பெற்றிருந்தாலும், 2026 கணிப்பு ஒரு இழுபறியையே காட்டுகிறது.
சென்னை அண்ணா நகர் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்
2026 தேர்தல் கணிப்பு தரவுகள்:
கான்சிலிடிக்ஸ் கணிப்பின்படி, திமுக 37% வாக்குகளைப் பெறும். அதிமுக 34% வாக்குகளுடன் மிக நெருக்கமான இரண்டாம் இடத்தில் உள்ளது. தவெக மற்றும் நாம் தமிழர் கூட்டணி 27% வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. வெறும் 3% வாக்கு வித்தியாசம் மட்டுமே இருப்பதால், அண்ணா நகர் தொகுதி முடிவை யாராலும் இப்போதே கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.