இராயபுரம் தொகுதி யாருக்கு? ஜெயகுமாரின் பழைய ஆட்டம் ஆரம்பம்? மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்

திமுக 34% வாக்குகளுடன் கடும் போராட்டத்தைச் சந்திக்கும்.
 Royapuram constituency
Published on
Updated on
2 min read

மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் இந்த தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

அதிமுகவின் எஃகு கோட்டையாக ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட இராயபுரத்தில் மீண்டும் 'இரட்டை இலை' மலருமா என்ற கேள்விக்கு மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் கருத்துக்கணிப்பு ஆச்சரியமான விடையைத் தந்துள்ளதது. மீனவர் சமுதாயம் 24% நிறைந்துள்ள இந்த தொகுதியில், தற்போதைய திமுக எம்எல்ஏ ஐடி மூர்த்தி மீதான அதிருப்தி மக்களிடையே வெளிப்படையாகத் தெரிகிறது. காசிமேடு துறைமுகச் சுகாதாரம் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை வசதி குறைபாடு போன்றவை திமுகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

இராயபுரம் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 55.42% வாக்குகளைப் பெற்றிருந்தாலும், பூத் வாரியான கள நிலவரம் இப்போது தலைகீழாக மாறியுள்ளது. அதிமுக தற்போது 61 பூத்துகளில் வலுவான முன்னிலையில் உள்ளது. திமுக வெறும் 54 பூத்துகளில் மட்டுமே தனது செல்வாக்கைத் தக்கவைத்துள்ளது. 59 பூத்துகள் ஊசலாட்டத்தில் (Swing) இருப்பதால், வெற்றி என்பது நூலிழையில் மாறக்கூடும்.

 Royapuram constituency

2026 தேர்தல் கணிப்பு தரவுகள்:

கான்சிலிடிக்ஸ் தரவுகளின்படி, 2026-ல் அதிமுக 36% வாக்குகளைப் பெற்று மீண்டும் இராயபுரத்தைக் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது. திமுக 34% வாக்குகளுடன் கடும் போராட்டத்தைச் சந்திக்கும். தவெக மற்றும் நாதக கூட்டணி 26% வாக்குகளைப் பிரிக்கப்போவது திமுகவுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். 59 ஸ்விங் பூத்துகளில் அதிமுக தனது கவனத்தைச் செலுத்தினால், இராயபுரம் மீண்டும் அதிமுகவின் வசமாவது உறுதி.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com